மோடி ஆட்சியில் வங்கி மோசடி இரட்டிப்பு ஆகிடுச்சு: ரிசர்வ் வங்கி தகவல்

மோடி ஆட்சியில் வங்கி மோசடி இரட்டிப்பு ஆகிடுச்சு: ரிசர்வ் வங்கி தகவல்

நம்ம நாட்டிலுள்ள வங்கிகளில் ஒவ்வொரு மணி நேரமும் 1.6 கோடி ரூபாய் வரை ஏமாற்றுதல் மற்றும் மோசடி பெயரில் இழந்து வருவதாக முன்னரே ஒரு சில அதிர்ச்சி தகவல் வெளியானது நினைவ்ரிஉக்கும் இதையொட்டி. இந்திய ரிசர்வ் வங்கி 8 வகையாக மோசடிகளைப் பிரித்துள்ளதும் அதில் ஏமாற்றுதல் மற்றும் மோசடி இவை இரண்டின் கீழ் மட்டும் 60 சதவீதம் பங்கு வகிக்கின்றன. இழப்பு வங்கிகள் ஏமாற்றுதல் மற்றும் மோசடி என மட்டும் 2014-2015, 2015-2016, 2016-2017 நிதி ஆண்டில் 42,276 கோடி ரூபாயினை இழந்துள்ளன என்றெல்லாம் செய்திகள் வந்திருந்த நிலையில்தான் மோடி ஆட்சியில் வங்கிகளின் மோசடி இரடிப்பாகி இருப்பதாக செய்தி கிடைத்துள்ளது.

அண்மையில்தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்து ரிசர்வ் வங்கி அளித்த விவரத்தில் கடந்த 2013ம் ஆண்டில் 8,649 கோடி மோசடி செய்துள்ளதாக வங்கிகள் தெரிவித்திருந்தன. இது தற்போது சுமார் 177 சதவீதம் உயர்ந்து 23,984ஆக உள்ளது. கடந்த 2016ல் இந்த மோசடி 18,699 கோடியாக இருந்தது. அதன்பிறகு 30 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த மோசடிகள் அனைத்தும்  ஒரு ரூபாய் முதல் 25 லட்ச ரூபாய் வரை மேற்கொள்ளப்பட்டவை. 2015ம் ஆண்டில் மொத்த வங்கி மோசடிகளில் பஞ்சாப் நேஷனல் வங்கியில்11 சதவீதம் நடந்துள்ளது.

மோசடிகள் மும்பையில் அதிகமாக உள்ளன. மகாராஷ்டிராவில் மோசடி 40 சதவீதம் அதிகரித்துள்ளது. 2017ம் ஆண்டில் இங்கு 9,784 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. கர்நாடகாவில் 3,733, டெல்லியில் 2,495, சண்டிகரில் 2,048, மேற்கு  வங்கத்தில் 1,959 கோடி மோசடி நடந்துள்ளன. மோசடி எண்ணிக்கையை பொறுத்தவரை சண்டிகரில் 5,078 வழக்குகள் பதிவாகியுள்ளன. முந்தைய ஆண்டை விட இது 8 சதவீதம் அதிகம். இதனால் 55.53 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திராவில் 3.13 கோடி, தமிழகத்தில் 1 கோடி என சராசரி மோசடி குறைவாக உள்ளது என தெரியவந்துள்ளது.

error: Content is protected !!