February 8, 2023

ம் நாட்டு மக்களின் ஆன்மீக தலைநகரம் காசி. அதிலும் காசி என்றாலே வாழ்ந்து முடித்தவர்களுக்கான இடம் என்ற எண்ணம் உண்டு. காசி, வாரணாசி, பெனாரஸ் எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் காசி வயதானவர்களுக்கு முக்தி அடையும் ஸ்தலமாகவும், யாத்ரிகர்களுக்கு புனித நகரமாகவும், சுற்றுலாப் பயணிகளுக்கு ஆச்சரியங்கள் அளிக்கும் இடமாகவும் பல்வேறு முகங்களை கொண்டது! இந்த காசியும் காசியில் ஓடும் புனித கங்கை நதியும் ஆன்மீகம் என்பதையும் தாண்டி காதல் என்பதே நமது உணர்வுகளின் குமிழியாக திகழ்கிறது என்று சொல்ல முயன்றுள்ள படமே ‘பனாரஸ்’.

ஹீரோ சித்தார்த் (ஜையீத்கான்) பணக்கார வீட்டு பிள்ளை. இவர் திடீரென்று நாயகி தன்யா (சோனல் மோன்ட்ட ரியோ)முன் வந்து, தான் எதிர்காலத்திலிருந்து வந்திருப்பதாகவும் எதிர்காலத்தில் நீதான் என் மனைவி நமக்கு ஒரு மகள் இருக்கிறாள். இதுபற்றி வெளியில் சொல்ல வேண்டாம்” என்று சொல்கிறான். அதை நம்பும் தன்யா ஓரிரவு தன் அறையில் தங்க இடம் தருகிறாள். அப்போது அவளுடன் ஒரே படுக்கையில் நெருக்கமாக இருப்பதுபோல் படம் எடுத்து நண்பர்களுக்கு ஷேர் செய்து விடுகிறான் . பின்னர்தான் சித்தார்த் சொன்னதெல்லாம் பொய் என தெரிகிறது. இந்நிலையில் நெட்டில் சித்- தன்யா குளோஸாக இருக்கும் போட்டோ வைரலான நிலையில் தான்யா காணாமல் போய் விடுகிறாள். இதையறிந்து மனம் வருந்தும் சித் அவளை கண்டு பிடித்து மன்னிப்பு கேட்க எண் அங்கு செல்கிறான் அதன் பிறகு நடப்பது என்ன என்பதுதான் பனாரஸ்.

நாயகன் ஜையீத்கான் ஏற்றுள்ள ரோலுக்குரிய துள்ளலான நடிப்பும் ஆக்‌ஷன் காட்சியில் அதிரடியும் அடடே சொல்ல வைக்கும் வைக்கும் அளவிற்கு இருக்கிறது..ஆரம்ப காட்சியில் ஹீரோயினை பார்க்கும் போது தான் “டைம் டிராவலர் மூலம் எதிர்காலத்துக்கு சென்று வந்திருக்கிறேன், என்று கூறி நாயகியை நம்ப வைக்கும் காட்சியில் நம்மையும் நம்ப வைத்து விடுவதே பெரிய விசயம். அப்பா & அம்மா பெற்றோர் இல்லாமல் சித்தப்பா ஆதரவில் இருக்கும் நாயகி சோனல் கிளாமர் காட்டாமால் குடும்ப குத்துவிளக்கு நாயகியாக பரிணமளிக்கிறார்..!. ஹீரோ ப்ரண்டாக ஆடோ டிரைவராக நடித்திருக்கும் சுஜய் சாஸ்திரி, ஆரம்பத்தில் காமெடியப் ட்ராக்கில் போனாலும் சில இடங்களில் மனசை கவ்வுகிறார்.

ஆனால் படம் தொடங்கியதில் இருந்து கொஞ்சம் தொய்வுடன். டைம் லூப் காட்சிகள் எல்லாம் கடுப்பேற்றினாலும் கங்கை நதியின் பின் புலத்தில் சொல்லப்படும் காதல் நம்மை ரசிக்க வைப்பதென்னவோ நிஜம். காசியில் உள்ள டெத் photography யாரும் சொல்லாத விஷயம்.

குருமூர்த்தி ஒளிப்பதிவில் வேத மந்திரங்கள் முழங்க கங்கையை ஆராதனை செய்யும் காட்சி அற்புதம். அதிலும் பாலா போன்ற டைரக்டர்களால் மிரட்சியூட்டிய காசி நகரிலேயே பெரும்பாலும் படமாக்கப்பட்டுள்ளதால் ரசிக்க வைக்கிறது. அந்த காசி தெருக்களில், கங்கை நதி ஓரத்தில் நாமும் உடன் ட்ராவல் செய்வது போன்ற ஒரு ஃபீலிங்கை கேமராமேன் அத்வைத குருமூர்த்தி அளித்திருக்கிறார்…

மொத்தத்தில் கங்கையும் காசியும் பாவங்களை போக்குவது மட்டுமில்லாமல் நமது தவறுகளை உணர செய்யும் என்று சுட்டுக் காட்டும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனக் குறைப்பாடுகளை எல்லாம் சட்டை செய்யாமல் இப்படி ஒரு அழகான நகரம் நம் நாட்டில் இருக்கிறதா என்று தெரிந்து கொள்ளவாவது இப்படத்தை ஒரு முறை தியேட்டர் போய் பார்த்து விடுங்கள்

மார்க் 3/5