December 2, 2021

போகப் போகும் உயிரைக்கூட திரும்ப மீட்டுத் தரும் வாழை இலைக் குளியல்!

அக்னி நடசதிரத்துடன் இந்த கோடை காலத்தில் வெப்பம் அதிகரித்து, வறட்சி ஏற்படுவதால், பூமியின் இயற்கை குணம் மாறுபட்டு உயிரினங்கள் உடல்நலத்தை இழக்கின்றன. மனிதனின் உடல் கோடையின் போது வறட்சி, அக்கினி, குரூரம், சலரூபம், புளிப்பு, காரம் என 6 குணங் களை அடைகிறது. நம் உடல் அமைப்பின் உறுப்புகள் 70-80 சதவீதம் நீரால் ஆனது. வெப்பத் தால் ஏற்படும் வியர்வை மூலமாக உடலில் உள்ள நீரின் அளவு வெகுவாக குறைந்து 20-30 சதவீத நீர் இழப்பு ஏற்படுகிறது. பெரும்பாலும் கோடைகாலத்தில், உடல் வெப்பம் அடைவதாலும், உடலில் நீர்ச்சத்து குறைவதாலும் காய்ச்சல், மஞ்சள் காமாலை, பல வகை அம்மைகள் ஏற்படுகிறது. இதை எல்லாம் தாண்டி கொரோனா வைரஸ் தொற்றும் வருகிறது.இவைகளை எல்லாம் சமாளிக்க நம் முன்னோர் கண்டு பிடித்த கை வைத்தியம்தான் வாழை இலைக் குளியல்,

இது இயற்கை சிகிச்சைதான் என்றாலும், இயற்கை மருத்துவரின் ஆலோசனையின்படி செய்து கொள்ளவேண்டும். குறிப்பாக, இதய நோயாளிகள், உயர் ரத்தஅழுத்தம் இருப்பவர்கள், வாழை இலைக்குளியல் எடுத்துக்கொள்ளக் கூடாது. வாழை இலைக் குளியலுக்காக மட்டுமே வந்தால் அவர் மீண்டும் எப்போது வரவேண்டும், எவ்வளவு நேரம் சிகிச்சை எடுக்கவேண்டும் என்பதுபோன்ற விவரங்கள் சொல்லித்தரப்படும். இதுகுறித்து இயற்கை மருத்துவர் ஆலோசனை வழங்குவார். இதை நோயாளியின் வயது, உடல் எடை, நோயின் தன்மைக்கேற்ப மருத்துவரே முடிவு செய்வார். உள் நோயாளிகளாகத் தங்கி சிகிச்சை பெறுவோர் பலருக்கும் வாழை இலைக் குளியல் சிகிச்சை தரப்படுகிறது. 12 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் என யார் வேண்டுமானாலும் மருத்துவமனைசென்று சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.

நம் பலரின் வீடுகளில் கொல்லைப் புறத்தில் கைக்கு எட்டும் தூரத்தில் உள்ள வாழை மரத்தின் அடி முதல் நுனி வரை அனைத்துமே நமது வாழ்வியலோடு கலந்த பயன்பாடுகள். வீட்டு விழாக்களில் வாழைக்கன்று மற்றும் வாழைக்கம்பங்களை நடுவதில் தொடங்கி, விருந்து பரிமாற வாழை இலையைப் பயன்படுத்துவது வரை எல்லாவற்றுக்குப் பின்பும் மருத்துவக் காரணங்கள் இருக்கின்றன.

விழாக்களில் விருந்தினருக்கு உணவு பரிமாற வாழை இலையைத்தான் இன்றளவிலும் பயன்படுத்தி வருகிறோம். ‘‘உணவுச் சங்கிலியில் முதல் உணவே இலைகள்தான். எல்லாத் தாவரங்களும் இலைகளை உடையவை. இலைகள் உயிரினங்களின் முக்கிய உணவாக இருக்கிறது. இலையில் உள்ள பச்சையம் சூரிய ஆற்றலை உள்வாங்கி அதனை உயிராற்றலாகவும் உணவாகவும் மாற்றுகிறது. அனைத்து எரிபொருட்களுக்கும் இலைகள்தான் மூலப்பொருளாக இருக்கிறது.

நமது முன்னோர் உணவு பரிமாறுவதற்கு வாழை இலையைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம் அது பெரிதாக இருக்கிறது என்பது மட்டுமல்ல… வாழை இலையில் ஆன்டி ஆக்‌சிடன்ட் அதிக அளவில் இருக்கிறது. இதனால் செல் சிதைவு ஏற்படாமல் இளமையுடன் இருக்க முடியும். அதோடு மன அழுத்தம், புற்றுநோய் மற்றும் இதய நோய்களும் தடுக்கப்படுகின்றன. வாழை இலையில் இருக்கும் Polyphenol, செல்களில் உள்ள டிஎன்.ஏவை கதிர்வீச்சுகளிலிருந்து பாதுகாக்கிறது. சிறுநீரகக் கல்லுக்கு வாழைத்தண்டு சாறு உகந்தது என்பது போல, வாழை இலையும் சிறுநீரகம் மற்றும் விதைப்பை தொடர்புடைய பிரச்னைகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. வாழை இலையில் உள்ள பச்சையம் நோய் எதிர்ப்பு சக்தியாகவும் விளங்குகிறது.

சூடான சாப்பாட்டை வாழை இலையில் பரிமாறும்போது அந்த சூட்டில் இலை லேசாக வெந்து இலையின் பச்சையத்தில் உள்ள Polyphenol சாப்பாட்டில் கலந்து விடும். இதன் மூலம் அதில் உள்ள விட்டமின் ஏ, சிட்ரிக் அமிலம், கால்சியம் மற்றும் கரோட்டின் ஆகியவை நமக்குக் கிடைக்கின்றன. வாழை இலையின் சிறப்பம்சமே அதன் குளிர்ச்சித் தன்மைதான். மரத்திlல் இருந்து அறுத்தெடுக்கப்பட்ட பின்பும் கூட வாழைஇலை ஆக்சிஜனை வெளியிட்டுக் கொண்டே இருக்கும். வாழை இலையில் வைக்கப்படும் கீரைகள், காய்கள், பழங்கள், பூக்கள் ஆகியவை விரைவில் வாடாது.

தீக்காயங்களுக்கு ஆளானவர்களை வாழை இலையில்தான் படுக்க வைப்பார்கள். வாழை இலையின் குளிர்ச்சியும் அது வெளியிடும் ஆக்சிஜனும் தீப்புண்ணுக்கு இதமாகவும், விரைவாக காயங்களை ஆற்றக் கூடியதாகவும் இருக்கிறது. வாழை இலை சருமத்தில் ஒட்டாது மற்றும் நோய்த்தொற்று ஏற்படுத்தாது என்பதால் தீக்காயங்கள் ஏற்பட்டவர்களுக்கு அருமருந்து.

வாழை இலையில் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படுகிறது என்பதோடு மட்டுமல்லாமல், சாப்பிட்டு முடித்த பின் வாழை இலை கால்நடைகளுக்கு உணவாகவோ, நிலத்துக்கு உரமாகவோ மாறிவிடுகிறது.

இதை எல்லாம் கவனத்தில் கொண்டுதான் சமீப காலமாக இயற்கை சார்ந்த விவசாயம், பாரம்பரிய உணவு முறைகள், பாரம்பரிய வைத்திய முறைகள் என நமது முன்னோர்கள் சொல்லி தந்த பல்வேறு பழக்க, வழக்கங்களை தேடிப் பிடித்து கடை பிடிக்க தொடங்கி இருக்கிறார்கள். அந்த வகையில் ஒன்றுதான் வாழை இலை குளியல். அது என்ன வாழை குளியல் என்கிறீர்களா? நமது சித்தர்களின் வழிகாட்டுதலின் பேரில் பல ஆயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வந்த இந்த வாழை இலை குளியல் தற்போது மக்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.

வாழை இலைக்குளியல் செய்முறை 

1. இயற்கை வழியில் விளைவித்த வாழை இலைகளை ஆளுக்கு தகுந்தாற்போலும் உருவத்திற்கு தகுந்தாற் போலும் சேகரித்துக் கொள்ள வேண்டும். சுமாராக ஒருவருக்கு எட்டு இலைகள் வரை தேவைப்படும்.!

2.தரையில் ஆறு வாழை நார், நூல் கயிறு அல்லது தென்னங்கயிற்றை வரிசையாக போட வேண்டும்.

3.அதன் மேல் நான்கு வாழை இலைகளை நன்றாக துடைத்து இலையின் தண்டை கையால் லேசாக சதைத்து போடவேண்டும்.!

4.ஒரு காட்டன் டவலை சிறிது நனைத்து தலையில் மப்ளர்போல் சுற்றிக் கட்டிக் கொள்ள வேண்டும்.

5.நான்கு முதல் ஆறு டம்ளர் வரை நீரை குளியல் செய்யப் போகின்ற வருக்கு குடிக்க கொடுக்க வேண்டும்.!

6.பிறகு மெதுவாக அவரை வாழையில் படுக்க வைத்து விட்டு அவரின் மேல் நான்கு முதல் ஆறு இலைகளை தலை முதல் பாதம் வரை வெளியே தெரியாமல் வைத்து நன்றாக மூடிவிடவும். சுவாசம் செய்வதற்காக மூக்கின் மேல் வைக்கும் இலையை மட்டும் லேசாக வெட்டிக் கொள்ள வேண்டும்.!

7.அப்படியே கயிறால் கட்டி படுக்க விடவும். இருபது முதல் 30 நிமிடம் வரை இப்படி இருக்க வேண்டும். உடல் முழுவதும் நன்றாக வேர்த்து இனிமேல் இருக்க முடியாது என்ற நிலை வந்தவுடன். கட்டுகளை அவிழ்த்து இலையை எடுத்துவிடவும்.

8.எழுந்தவுடன் பார்த்தால் கிட்டத்தட்ட இரண்டு முதல் நான்கு லிட்டர் வரை உடலில் இருந்து கெட்டநீர் வெளியேறி இருக்கும்.!

9.எழுந்தவரை நன்றாக ஐந்துமுறை சுவாசம் செய்ய வைத்து தேன் மற்றும் சிறிது இந்துப்புக்கலந்த இரண்டு டம்ளர் நீரை குடிக்க கொடுக்க வேண்டும்.பிறகு 15 நிமிடம் கழித்து குளித்து விடலாம்.!

இந்த வாழைகுளியல் பலன்கள் 

1.உடல் எடை சீராக இருக்கும்
2.உடலில் உள்ள கெட்ட நீரும் காற்றும் வெளியேறிவிடும்
3.தோல் நோய்கள் குணமாகும்
4.ஆஸ்துமா,இழுப்பு ,அடுக்குத்தும்மல், உடல் பருமன் போன்ற நோய்கள் கட்டுப்படும்
5.சிறுநீரகம், கணையம், கல்லீரல் பலப்படும்
6.ஆண்மைக் குறைவு, கர்பபைக் கோளாறு குணமாகும்
7.உடலுக்கு புத்துணர்வும் புதிய நம்பிக்கையும் கிடைக்கும்
8.கை,கால் வலி, மூட்டுவலி, முதுகுவலி தண்டுவடக் கோளாறுகள் கட்டுப்படும்
9.பசியின்மை, அஜீரணக் கோளாறு, பித்த வாந்தி குணமாகும்
10.ஜாதகத்தில் சிலருக்கு ஏற்படும் மரண கண்டத்தில் இருந்து தப்புவிக்கும்.!

இது மட்டுமல்ல இன்னும் எத்தனையோ அற்புத பலன்களை உடையது வாழை இலைக் குளியல். ஏனெனில் உடலில் பிராணசக்தி துய்மையடையும் உடல், மனம், ஆன்மா அனைத்துமே தூய்மையடையும்.!

குறிப்பு: காலையில் 8 முதல் 11 மணிவரையும் மாலையில் 3 மணி முதல் 5 மணிவரையும் வாழையிலைக் குளியல் செய்ய ஏற்ற நேரம்.!

கீழே விரிப்பை விரித்து மொட்டை மாடி, வெட்டவெளியில் மட்டுமே குளியல் செய்ய வேண்டும். பெண்கள் சுற்றிலும் மறைவான வெட்ட வெளியில் செய்ய வேண்டும்.!

வாழை இலைக்குளியலுக்கு முதல்நாள் முற்றிலும் சமைக்காத உணவை உண்டு வாழை இலைக்குளியல் செய்தால் அதன் பலன் பல மடங்கு உயரும்.!

அதீத மன அழுத்தம், மனக்கோளாறுகள், கர்பிணிப் பெண்கள், இரத்த அழுத்தத்திற்காக பல ஆண்டுகள் மாத்திரை எடுப்பவர்கள், முற்றிய நிலையில் உள்ள இதய நோயாளிகள் வாழை இலை குளியல் எடுப்பதை தவிர்ப்பது நலம் பயக்கும். மற்றபடி 10 வயது முதல் நூறு வயதுவரை உள்ள ஆண், பெண் அனைவரும் வாழையில் குளியல் செய்து உடலில் பிராண சக்தியை அதிகரிக்கலாம்.இந்த வாழை இலை குளியலோடு புற்றுமண் குளியல், மூலிகை தைல குளியல், மூலிகை வெந்நீர் குளியல், மூலிகை பற்று போன்ற பலவகையான சிகிச்சையை சேர்த்தும் செய்யலாம்.

வாழை இலை குளியலின் மூலம் மூட்டுவலி, கழுத்து வலி, தோள்பட்டை வலி, மணிக்கட்டு வலி, தலைவலி, ஒருபக்க தலைவலி, மூக்கடைப்பு, நுரையீரல் பிரச்சினை, முதுகுவலி, தொடைவலி, தோல் வியாதி, ரத்தக் கொதிப்பு, சர்க்கரைவியாதி, பாத எரிச்சல், தூக்கமின்மை உடலில் ஏற்படும் கெட்ட வாடை, உடல் பருமன் போன்ற பிரச்சினைகள், நோய்களை விரட்டி அடிக்கலாம்.

மேலும், காளஞ்சகபடை(அவசியம் தொடர்ந்து போட வேண்டும்), முழங்காலுக்கு கீழே ஏற்படும் கால் நரம்புவலி, உடல் சோர்வு, சிறுநீரக செயலிழப்பு, சுவாச மண்டலம் நன்கு செயல்பட்டு மூச்சு நன்கு இழுத்துவிட உதவுவது போன்ற நோய்களை தீர்க்கும் அருமருந்தாகவும் வாழை இழை குளியல் அமைகிறது.

அகஸ்தீஸ்வரன்