பெண்கள் வீட்டுக்கு வெளியே செல்போன்கள் உபயோகிக்க தடை!

பெண்கள் வீட்டுக்கு வெளியே செல்போன்கள் உபயோகிக்க தடை!

உத்தரபிரதேசத்தில் உள்ள மதோரா என்ற கிராமத்தில் பெண்கள் வீட்டுக்கு வெளியே செல்போன்கள் உபயோகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தெற்கு உத்தரபிரதேசத்தில் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் மதோரா என்ற கிராமத்தில் கிராம நிர்வாகிகள் பிறப்பித்துள்ள உத்தரவில் பெண்கள் வீட்டுக்கு வெளியே செல்போன்கள் உபயோகிக்கக் கூடாது எனவும் மீறுபவர்களுக்கு 21,000 ரூபாய் அபராதம் விதிக்கப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

up may 3

கிராமத்தில் உள்ள பெரியவர்களால் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. பெண்கள் வேறு ஆண்களுடன் பேசுவதையும், தொடர்பு கொள்வதையும் தடுப்பதற்காகவும் இந்த சட்டத்தை பிறப்பித்துள்ளதாகவும் அந்த கிராமத்தை சேர்ந்த பெரியவர்களால் கூறப்படுகிறது. பெண்கள் ஜீன்ஸ் அணியக்கூடாது போன்ற பல கருத்துக்களை சிலர் கூறிவரும் நிலையில் பெண்களுக்கெதிராகவும் இந்திய அரசியல் சட்டத்திற்கு எதிராகவும் இந்த சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!