காதல், காமெடி கலந்த த்ரில்லர் படம்தான் “ பலூன்”

சினிஷ் இயக்கத்தில் ஜெய் – அஞ்சலி – ஜனனி ஐயர் இணைந்து நடித்திருக்கும் படம் `பலூன்’. காதல் கலந்த திகில் படமாக உருவாகி உள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். காமெடி நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘எங்கேயும் எப்போதும்’ படத்திற்கு பின்னர் ஜெய் – அஞ்சலி மீண்டும் இணைந்து நடித்திருப்பதால் பலூன் படத்தின் மீதான எதிர்பாரப்பு கூடியிருக்கிறது. இந்த படத்தில் ஜெய் 3 வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இப் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை ‘யங் சூப்பர் ஸ்டார்’ நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

1 நிமிடம் 18 நொடிகள் ஓடும் இந்த டீசர் ரசிகர்களிடம் செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. வெகு விரைவில் டிரையிலர் மற்றும் ஆடியோ ரிலீஸ் ப்ளான் குறித்த அப்டேட்ஸ் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த இயக்குநர் சினிஷ், “ இந்த படத்தின் கதையை நான் இப்போ சொன்னால் வழக்கமான சப்ஜெக்ட் மாதிரிதான் தோணும். ஆனா புது ஸ்பாட்டில், புது கோணங்களில், புத்தம் புது சிந்தனையில் ஒட்டு மொத்த படத்தை உருவாக்கி உள்ளோம். ஜெய் இரட்டை வேடத்தில் நடித்துள்ள அவ்ருக்கு ஒரு ஜோடி அஞ்சலி என்பதால் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகம் இருக்கிறது. காதல், காமெடி கலந்த த்ரில்லர் படமிது” என்றார்