December 4, 2021

ஹரியானாவில் கல்லூரி வாசலில் மாணவி சுட்டுக் கொலை!- வீடியோ!

ஹரியானா ஸ்டேட்டில் இருக்கும் நிகிதா தோமர் என்ற 21 வயசு இளம்பெண் ஃபரிதாபாத்தில் உள்ள காலேஜ் ஒன்றில் காமர்ஸ் ஃபைனல் இயர் படிச்சு வாரார். செமஸ்டர் எக்ஸாம் இப்போ நடைபெற்று வரும் நிலையில் நேத்திக்கு நடைபெற்ற எக்ஸாமை எழுத நிகிதா தோமர் காலேஜ் போய் எக்ஸாம் எழுதிட்டு சுமார் 3.30 மணியளவில் தனது ஃப்ரண்டோட கல்லூரிக்கு வெளியே வந்தார்.

அப்போது காரில் வந்த ரெண்டு ரவுடி பசங்க நிகிதா தோமரை பிடிச்சி இழுத்து கடத்த முயன்றனர். இதற்கு சம்மதிக்க மறுத்ததால் ஒரு இளைஞர் நிகிதாவை தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு புட்டு தப்பிட்டானுஹ. இதில் படுகாயமடைந்த நிகிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்டிகள் வெளியாகி நாடு முழுவதும் பெரும் அதிர்வலை களை ஏற்படுத்தியுள்ளது.  இந்த வீடியோவில் நிகிதாவை தாக்குவதும் அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து காரில் தப்புவதும் பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள ஃபரிதாபாத் காவல்துறையினர் மாணவியை கொலையில் சம்மந்தப்பட்ட இருவரை கைது செஞ்சிருக்காய்ங்க.

இந்த சம்பவம் தொடர்பாக தெரிவித்துள்ள போ. டிப்பார்ட்மெண்ட் இந்த கொலையில் ஈடுபட்ட டஷீப் என்ற இளைஞருக்கும் கொலையான கேர்ளுக்கும் ஏற்கனவே பழக்கம் இருந்துச்சு. 2018 ஆம் ஆண்டு ஒரு முறை டஷீப் நிகிதாவை கடத்த முற்பட்டுள்ளார். இதனை அடுத்து மாணவியின் அப்பா அளித்த புகாரின் பேரில் டஷீப் கைது செய்யப்பட்டார். இருப்பினும் அவரது தந்தை புகாரை திரும்பப்பெற்றதால் டஷீப் விடுதலை செய்யப்பட்டதாக தெரிவி ச்சிருகாய்ங்க