October 22, 2021

பாலா-வின் “நாச்சியார்” – பூஜை ஸ்டில்ஸ்

கோலிவுட்டின் டால் என்ற பெயரெடுத்த ஜோதிகா திருமணத்துக்குப் பின் கொஞ்சம் பிரேக் விட்டு விட்டு தற்போது மறுபடியும் சினிமாவுக்கு திரும்பியுள்ளார் ஜோதிகா, இருந்தாலும் முழுக்க முழுக்க தன்னைப் பிரதானப்படுத்தும் கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிக்கிறார். அந்த பாணியில் பாலா இயக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். நாச்சியார் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

ஜி.வி. பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்துக்கு இசை, இளையராஜா. பாலாவின் பி ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து சூர்யாவின் 2டி நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளது.விரைவில், இப்படத்தில் நடிக்கவுள்ள மேலும் நடிகர், நடிகையர் விவரங்கள் வெளியிடப்படும் என தெரிகிறது.