பக்ரீத் – விமர்சனம்!

பக்ரீத் – விமர்சனம்!

மனித வாழ்க்கையை மேம்படுத்திய குடும்ப உறவில் கூட்டுக் குடும்பம் என்ற அமைப்பு இப்போது காணாமலே போய் விட்டது. குடும்ப உறுப்பினருக்கு நெருங்கிய உறவு என்று சொல்லிக் கொள்ளும் இடத்தை தொலைக்காட்சியும் செல்போனும் ஆளுக்கோர் கையைப் பிடித்து கொண்டது. தொலைக் காட்சியில் பல்வேறு சேனல்களில் வருகிற தொடர்கள் பெண்கள் மத்தியில் பாப்புலாரிட்டையை அதிகரித்தாலும், அது குடும்பத்தில் தவறான சிந்தனைகளையே விதைக்கிறது. சாம்பிளுக்கு கமல் தலைமையேற்று நடத்தும் பிக் பாஸ் தொடரைப் பற்றியும், அது கொடுக்கும் மோசமான விளைவு கள் குறித்தும் கூகுளிடம் கேளுங்கள். வாந்தி வரும் அளவுக்கு தகவல்களை கொட்டும். அதே போல் செல்போன். ஜஸ்ட் தொடர்பு சாதமான இப்போனில் வாட்ஸ் – அப் என்னும் ஆப்-பில் தங்கள் கூட்டு குடும்பத்தை இணைத்து இணைத்து கொண்டு தங்கள் தலைமுறைக்கே ஆப்பு வைத்து வருகிறார் கள்..அன்றாடம் தமிழகத்தில் நடக்கும் செய்திகளை அவதானிப்பவர்கள் ஒரு விஷயத்தை மறந்திருக்க வாய்ப்பு குறைச்சல்.. அதாவது உண்ண உணவு கிடைக்காமல் இயற்கை மரணம் அடைந்த ஒரு வயதான பெண்மணியை எரிக்க கையில் காசில்லாத ஒரு இளைஞன் தன் அம்மா உடலை அருகில் உள்ள குப்பைத்தொட்டியில் போட்டுள்ளான். இதுதான் நாட்டு நடப்பு..இப்படியான சூழலில் சினிமா என்றொரு சாதனம் எதற்காக உருவானதோ அந்த ஆரோக்கியமான பாதையில் உருவாகி வளர்ந்து ரிலீஸாகி இருப்பதுதான் ‘பக்ரீத்’. ஆம் மனிதர்களிடையே மறைந்து வரும் மனுஷத்தனத்தை கிளறும் படம் இந்த பக்ரீத் என்றும் சொல்லலாம்.

விக்ராந்த் தனக்கு சொந்தமான நிலத்தை உழுது, பயிரிடுவதற்கான செலவிற்கு கடனாக பணம் பெற நண்பன் ஒருவன உதவியோடு ஒரு முஸ்லீம் பெரியவரைப் பார்க்கிறார். அச்சமயத்தில், பக்ரீத் கொண்டாட ராஜஸ்தானில் இருந்து பெரிய ஒட்டகம் ஒன்று பாய் வீட்டிற்கு வர, அதனோடு அதன் குட்டி ஒட்டகத்தையும் அழைத்து வந்து விடுகின்றனர். அந்த குட்டி வேண்டாம் என்று முஸ்லீம் பெரிசு வாய் விட்டு புலம்புவதைக் கேட்டு அந்த குட்டி ஒட்டகத்தை தான் வளர்த்துக் கொள்கிறேன் என்று விக்ராந்த் தனது வீட்டிற்கு அழைத்து வருகிறார்.

வீட்டில் விக்ராந்தின் மனைவி வசுந்தராவுக்கும் அவர்களின் குட்டி பெண் குழந்தைக்கும் அந்த ஒட்டக்குட்டியை பிடித்துப் போகிறது. அதற்கு சாரா எனப் பெயர்வைத்து, அதனுடன் நெருக்கமா கின்றனர். ஆனால், சாரா என்ன சாப்பிடும் எனத் தெரியாமல், மாட்டுக்குத் தரும் தீவனத்தையே ஒட்டகத்திற்கும் கொடுப்பதால் ஒட்டகத்துக்கு உடல்நிலை சரியில்லாமல் போகிறது. அதனால் அதற்கு வைத்தியம் பார்க்கவந்த கால்நடை மருத்துவரான எம்.எஸ்.பாஸ்கர், எந்த விலங்காக இருந்தாலும் அதனதன் இருப்பிடத்தில் இருந்தால்தான் ஆரோக்கியமாக இருக்கும் என்றும் அதனால் ஒட்டகங்கள் அதிகமாக வாழும் ராஜஸ்தானில் இந்த ஒட்டகத்தைக் கொண்டு விட்டு விடச் சொல்லி விடுகிறார். அதை அடுத்து ஒட்டகத்தை ராஜஸ்தான் கொண்டு சேர்க்க பெரும்பாடு படுகிறார் என்பதே படத்தி கதை.

7 ஆண்டு சட்டப் போராட்டத்துக்கு பின்னர் தன் கைக்கு வந்த நிலத்தின் மீது தொடங்கி, தன் நண்பன், மனைவி, குழந்தை, ஒட்டகம் உள்ளிட்ட சகல உயிர்களிடமும் அன்பு, பிரியம்,பாசம், பிரிவு, இயலாமை என ஏகப்பட்ட உணர்ச்சிகளைக் காட்டி தன் முழு திறமையையும் இப்படத்தில் காட்டி இருக்கிறார் விக்ராந்த். மனைவியாக வசுந்த்ராவின் நடிப்பும் நீட். இவர்களது குழந்தையாக வரும் ஷ்ருத்திகா க்யூட். மேலும், படத்தில் நடித்த மோக்லி , ரோகித் பதக் ஆகியோரும் கதாபாத்திரங் களுக்கேற்ற பொருத்தம் தான். இசை இமான் இறைச்சல் சத்தம் அதிகம்..!எடிட்டர் இரண்டாம் பாதியில் இன்னும் ஒர்க் பண்ணியிருக்கலாம்.

படத்தை “சிகை” மற்றும் “பட்சி” ஆகிய படங்களை இயக்கிய ஜெகதீசன் சுபு கதை, திரைக்கதை, வசனம் எழுதி எழுதி இயக்குவதோடு மட்டுமல்லாமல் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி இருக்கிறார். மனிதர் தான் எடுக்கப் போகும் படத்தின் பேப்பர் ஒர்க்கை பக்காவாக எழுதி வைத்துக் கொண்டு போய் தேவையானதை கொண்டு வந்திருக்கிறார். சகல இடங்களிலும் மறைந்துக் கொண்டிருக்கும் மனித நேயத்தை தூவி விட்டு செல்கிறார். ஆரம்பக் காட்சியில் வரும் தண்டல் வசூல் பண்ணும் கேரக்டர் முதல் தன் குட்டிப் பெண் அடம் பிடித்து கேட்கும் லேஸ் சிப்ஸ் வாங்கிக் கொடுத்துவிட்டு, அதை ஒளித்து வைக்க கையாளும் ட்ரிக், ஒட்டகக் குட்டியுடன் லட்ச ரூபாய் பணத்தையும் கொடுக்கும் முஸ்லீம் பெரியவர் ரோல், வெட்டினரி டாக்டராக வரும் எம் எஸ் பாச்கரிடம் பீஸ் எவ்வளவு என்று கேட்பதற்கு வரும் பதில், ஒட்டகத்தை ராஜஸ்தான் ஏற்றிச் செல்லும் லாரி டிரைவரின் மன் போக்கு, பாகம் பிரித்து போன அண்ணன் பயிருக்கு தம்பி வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவது, வழிப்பயணத்தில் துணைக்கு வந்து போகும் வெள்ளைக் காரர் என்று அத்தனை பேர் மூலம் அன்பையும், நிஜ மனித முகங்களையும் வெளிக்காட்டி கவர்கிறார் இயக்குநர்.

ஆனால் ஒரு ஒட்டகத்தை வைத்து கொண்டு செல்லும் பயணம் ரொம்ப நீளம் என்பதே குறை. கூடவே வழக்கம் போல் அது சரியில்லை., இக்காட்சியை அப்படி எடுத்திருக்கலாம் என்ரு சொல்ல சில பல விஷய்ங்கள் இருக்கிறது என்றாலும் ஆரம்ப பேராவில் சொன்னது போல் மனிதர் களிடையே மறைந்து வரும் மனுஷத்தனத்தை கிளறும் படம் இந்த பக்ரீத் படத்தை குடும்பத்தோடு போய் பார்ப்பதால் தமிழ் சினிமா தலை நிமிரும்.

.மார்க் 3.5 / 5

error: Content is protected !!