Bachelor – தமிழ் பட விமர்சனம்!

Bachelor – தமிழ் பட விமர்சனம்!

ரு உண்மையை முதலில் புரிந்து கொள்ள வேண்டும் இப்போதைய மாணவர்கள், இளைஞர்களில் குறிப்பிடத்தக்க அளவிலானவர்கள் விட்டேத்தியான வாழ்க்கை வாழ்பவர்களாய்தான் இருக்கின்றனர். அற்பத்தனமாகவும் குறுகிய மனம் படைத்தவர்களாகவும், எவன் வீட்டில் இழவு விழுந்தால் எனக்கென்ன என்று வாழும் சுயநலவாதிகளாகவும்தான் இருக்கின்றார்கள். அப்படி வாழும் ஒருவனின் கதைதான் பேச்சிலர்..!

அதாவது பேச்சிலர் ரோலில் இருக்கும் ஜிவி பிரகாஷ் பெங்களூரில் இருக்கும் ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை செய்தபடி. தன் நண்பர்களுடன் தங்கியிருக்கிறார். ஆரம்ப பேராவில் சொன்னது போல் விட்டேத்தியான ஆளான ஜிவி பிரகாஷ் தன் அலுவலகத்தில் வேலை செய்யும் சுப்புவை (திவ்யபாரதி) மீட் செய்யும் போதே கிரஷ் ஏற்பட்டு விடுகிறது. இதை அடுத்து அவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் கணவன், மனைவி போன்று லிவ் இன் ஸ்டைலில் வாழ்கிறார்கள். அப்புறமென்ன? திவ்யபாரதி கர்ப்பமாகிறார். விஷயத்தைக் கேள்விப்பட்ட உடனே கருவை கலைக்கச் சொல்கிறார் நாயகன் அதில் நாயகிக்கு உடன்பாடு இல்லை. இதையடுத்து பிரிந்த ஜோடி தங்கள் பிரச்சினைக்கு தீர்வைக் கண்டுபிடித்தார்களா ?என்பதுதான் படத்தின் கதை .

ஹீரோ ஜி.வி.பிரகாஷ் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் மெச்சூரிட்டியாக நடித்து கவனிக்க வைக்கிறார். இக்கால யூத் மாதிரியான குறைகள் நிறைந்த, குழப்பங்கள் நிறைந்த ஆசாமியாக கோபத்தையும் காட்டி அசத்தவே செய்கிறார் அறிமுக நாயகி திவ்யா பாரதி தொடக்கக் காட்சிகளில் தனது அழகுடன் கூடிய நடிப்பாலும், இரண்டாம் பாதியில் உணர்ச்சிகரமாகி அழுதுக் கொண்டே இருக்குக் காட்சிகளில் டைரக்டர் சொன்னதை பர்ஃபெக்டாக செய்திருக்கிறார். இந்த திவ்யா-வுக்கு கோலிவுட்டில் அடுத்தடுத்து வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும். பக்ஸ்’ பகவதி பெருமாள், நக்கலைட்ஸ் அருண்குமார், தனம் என படத்தில் துணைக் கதாபாத்திரங்களாக வரும் அனைவருமே எந்தவித மிகையும் இன்றி இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இரண்டாம் பாதியில் வரும் முனிஷ்காந்த், ஒரே ஒரு காட்சியில் வரும் மிஷ்கின் என அனைவரும் கொடுத்த வேலையை நிறைவாகச் செய்துள்ளனர்.

அறிமுக இயக்குனர் சக்தி செல்வகுமார் எடுத்துக் கொண்ட் பேச்சிலர் ஜி வி பிராஷின் கேரக்டரை இன்னும் கொஞ்சம் ஷார்ப்பாக சொல்வதுடன் திரைக்கதையை சுருக்கு படத்தின் நீளத்தைக் குறைத்திருக்கலாம். தேனி ஈஸ்வரின் கேமரா வழக்கம் போல் சபாஷ் சொல்ல வைத்திருக்கிறது. ஜி.வி.பிரகாஷின் இசை எடுபடவில்லை.

எடுத்துக் கொண்ட கதைக் களத்துக்காக பெற்றோருடன் வசிக்காத விடலைகளின் ஒரிஜினல் முகத்தை காண்பிக்க முயன்றிருக்கிறார்கள். அதனால் சரளமான கெட்ட வாடை ஆங்காங்கே வீசுவதை தவிர்க்காமல் அப்பட்டமாக அம்பலப்படுத்தியும் இருக்கிறார்கள்.. அதற்காக இம்புட்டு நீ..நீ..நீளமா கொண்டு போனது ஆயாசத்தைக் கொடுத்தது

சாம்பிளுக்கு இதோ ஒரு காட்சி  👇

மொத்தத்தில் இந்த பேச்சிலர் ஒரு சாராருக்கு மட்டுமே முழுசாகப் பிடிக்கும்

மார்க் 3 / 5

error: Content is protected !!