March 25, 2023

கருப்பையில் உள்ள குழந்தைக்கு முதுகுத் தண்டு ஆபரேசன்!

சிசுவுக்கு முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை செய்து மீண்டும் தாயின் கருப்பையில் வைத்து இங்கிலாந்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

எஸ்ஸெக்ஸ் நகரைச் சேர்ந்த பீதன் சிம்ப்சன் என்ற பெண்ணின் 20 வாரங்களேயான சிசுவுக்கு தலை சரியாக இல்லாததை மருத்துவர்கள் கண்டனர். spina bifida என்ற முதுகுத்தண்டு பிரச்சனையால் சிசு பாதிக்கப்பட்டதே இதற்கு காரணம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். சிசுவுக்கு அறுவை சிகிச்சை செய்தல், சிசுவை அழித்தல், அல்லது அப்படியே விட்டு விடுதல் ஆகிய மூன்று வாய்ப்புகள் அந்த தம்பதிக்கு கொடுக்கப்பட்டது. அதில் அந்த தம்பதியானது, சிசுவுக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தது. இதை அடுத்து அந்த சிசுவுக்கு மருத்துவர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து மீண்டும் தாயின் கருப்பையில் வைத்து சாதனை புரிந்துள்ளனர். பெல்ஜியம் மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவர்கள்தான் இந்த சவாலான முயற்சியில் இறங்கி சாதித்துள்ளனர். வைத்துவிட்டனர்.

“உலகின் தலைசிறந்த மருத்துவர்கள் இந்த அறுவைசிகிச்சையைச் செய்தனர். நாங்கள் அனைவரும் இறுதியில் வெற்றி பெற்று விட்டோம். நம்பமுடியாத வகையில் அந்த அறுவை சிகிச்சையை என் மகள் எதிர்கொண்டாள். ‘சிகிச்சைக்குப் பிறகு, மீண்டும் வயிற்றுக்குள் வைத்த பின்னரும் அவள் நலமுடன் இருப்பதாக’ மருத்துவர்கள் தெரிவித்தனர். வயிற்றில் உதைப்பது மட்டும் இப்போதும் மாறவே இல்லை. வரலாற்றில் இடம்பிடித்துவிட்டதால், அவள் எங்களுக்கு எக்ஸ்ட்ரா ஸ்பெஷல்!” என்று மகிழ்ச்சியுடன் சொல்கிறார் சிம்ப்சன்