September 25, 2021

அன்னை தெரசாவிற்கு பாரத ரத்னா வழங்கியது போல் இந்து சாமியார்களுக்கும் விருது! – பாபா ராம்தேவ் சர்ச்சை1

அன்னை தெரசா உள்பட யார் யாருகோ எவ்வளவோ விருதுகள் வழங்கும் நிலையில் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக சன்னியாசிகளுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படவில்லையே என்று பதஞ்சலி நிறுவனரும், யோகா குரு பாபா ராம்தேவ் சோகமாக வேண்டுகோள் வைத்துள்ளார்.

இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் 112 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் 4 பேருக்கு பத்ம விபூஷண் விருதும், 14 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 94 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டு உள்ளது. விருது பெற்றவர்களில் 21 பேர் பெண்கள். 11 பேர் வெளிநாட்டில் வசிப்பவர்கள். திருநங்கை ஒருவருக்கும் விருது கிடைத்து இருக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த 8 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டு உள்ளது.

இது குறித்து தற்போது வாரணாசியில் இருக்கும் யோகா குரு பாபா ராம் தேவ், “சமீபத்தில் மத்திய அரசு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது, பத்மஸ்ரீ விருது, பம்தவிபூஷன், பத்மபூஷன் விருதுகளை அறிவித்துள்ளது. விருதுக்காக அறிவிக்கப்பட்டவர்களை நான் மதிக்கிறேன். அவர்களின் சேவைகள், பணிகள் ஆகியவற்றிக்கு அவர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளதை ஏற்கிறேன்.

விளையாட்டு வீரர்களுக்கும், கலைஞர்களுக்கும் பத்ம விருதுகள், பாரத ரத்னா விருதுகள் அளிக்கும் போது ஏன் துறவிகளுக்கு அளிக்கப்படுவதில்லை. நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக சன்னியாசிகளுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படவில்லை.

ஆனால் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த அன்னை தெரசாவிற்கு பாரத ரத்னா வழங்கியுள்ளனர். அதே சமயம், இந்து குருகளுக்கு வழங்கபடவில்லை. இந்தியாவில் ஹிந்துவாக இருப்பது குற்றமா?’ என தன் ஆதங்கத்தை வெளிபடுத்தினார்.

சுவாமி விவேகானந்தர், தயானந்த சரஸ்வதி சுவாமி, சிவக்குமார சுவாமி ஆகியோருக்கு ஏன் வழங்கப்படவில்லை. இந்த துறவிகள் சமூகத்துக்கு ஏராளமான சேவைகளையும், நற்பணிகளை யும் செய்துள்ளார்கள். இவர்களுக்கு கண்டிப்பாக பாரத ரத்னா அறிவிக்க வேண்டும்”. இவ்வாறு அவர் கூறினார்.