Exclusive

பி.1617 வகை கொரோனா வைரஸ் முதன்முதலில் இந்தியாவில்தான் வந்திச்சாம்!

நம் நாட்டில்ல் பரவி வரும் பி-1617 வகை உருமாற்ற கொரோனா வைரஸ் கவலையளிப்பதாக இருக்கிறது என உலக சுகாதார அமைப்பு வேதனை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமடைந்து நாள்தோறும் 3.50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர்.இந்தியாவின் நிலை உலக நாடுகளுக்கே கவலையளிப்பதாக இருப்பதால், பல்வேறு நாடுகளும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்பக்குழுத் தலைவர் மருத்துவர் மரியா வான் கெர்கோவ் நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்

அப்போது அவர் கூறியது:

பி.1617 வகை உருமாற்ற கொரோனா வைரஸ் முதன்முதலில் இந்தியாவில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தியாவில் இந்த வைரஸ் பரவலின் வேகம் கவலையளிப்பதாக இருக்கிறது. எங்களின் தொற்றுநோய் தடுப்பு குழு, ஆய்வகக் குழுவினர் சேர்ந்து, உலக சுகாதார அமைப்பின் வைரஸ் பரிணாம பணிக்குழுவுடன் இந்த உருமாறிய கொரோனா வைரஸ் குறித்து ஆலோசித்தோம். இந்த வைரஸின் பரவல் தன்மை, இந்தியாவில் பரவி வருவது, மற்ற நாடுகளில் பரவல் சூழல் ஆகியவை குறித்து ஆலோசித்தோம்.

இந்த ஆலோசனை மற்றும் ஆய்வில் பி-1617 வகை வைரஸ்களின் பரவல் வேகம் மற்ற வைரஸ்களைவிட அதிகரித்துள்ளது. இதனால்தான் உலகளவில் இந்தியாவில் பரவும் பி-1617 வகை வைரஸ் பற்றி ஆழ்ந்த கவலை உருவாகியுள்ளது.

பரவல் வேகம் அதிகரிக்கும் என்பது குறித்து எங்களின் முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது, இன்னும் இந்த வைரஸ் பற்றி ஆய்வு செய்ய அதிகமான தகவல்கள் பெறுவது அவசியம். இந்த வைரஸ் எவ்வளவு வேகமாகப் பரவுகிறது என்பதை பற்றி எங்களுக்குத் தெரியும். இதுபற்றி இந்தியாவிடமும் தகவல்களை பகிர்ந்து கொள்வோம்.

புதிது புதிதாக உருமாறும் கொரோனா வைரஸ்கள் இன்னும் தொடர்ந்து மாறுமா என்பது குறித்து கண்காணித்து வருகிறோம். வைரஸ் பரவாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைளை உறுதியாக எடுக்க வேண்டும். தனிமனிதர்கள் அளவில் சமூக விலகலைக் கடைபிடித்தல், கைகளைக் கழுவுதல், முகக்கவசம் அணிதல், கூட்டாக இருக்கும் இடங்களைத் தவிர்த்தல், காற்றோட்டமான இடத்தை தேர்வு செய்தல், வீட்டிலேயே பணி செய்தல் போன்றவை வைரஸ் பரவலைத் தடுக்கும்.

இவ்வாறு மரியா வான் கெர்கோவ் தெரிவித்தார்.

aanthai

Recent Posts

கால்பந்து போட்டியால் ஏற்பட்ட வன்முறையில் 129 பேர் உயிரிழப்பு!

இந்தோனேஷியாவில் கால்பந்து போட்டியில் நடைபெற்ற வன்முறையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 129 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பல…

13 hours ago

தூய்மை நகரத்திற்கான பட்டியலில் தொடர்ந்து 6வது ஆண்டாக இந்தூர்!

2022ஆம் ஆண்டுக்கான தூய்மையான நகரங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், மத்தியப்பிரதேச மாநிலத்தின் இந்தூர் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த…

14 hours ago

பவுடர் பட இசை & டிரெய்லர் வெளியீட்டு விழாத் துளிகள்!

வெற்றிகரமான பத்திரிகை தொடர்பாளராக இயங்கி வரும் நிகில் முருகன் நாயகனாக நடிக்க, வெள்ளிவிழா நாயகன் மோகன்-குஷ்பு நடிப்பில் ஹரா படத்தை…

15 hours ago

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நடந்த வாக்கெடுப்பு : இந்தியா, சீனா புறக்கணிப்பு!

உக்ரைனில் உள்ள 4 பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைப்பது குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நடந்த வாக்கெடுப்பை இந்தியா, சீனா புறக்கணித்துள்ளது.…

1 day ago

கோடநாடு கொலை & கொள்ளை வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம் – டிஜிபி உத்தரவு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் கடந்த 2017 ஏப்ரல் 24 ஆம் தேதி…

2 days ago

பொன்னியின் செல்வன் – விமர்சனம்!

முன்னொரு காலக்கட்டத்தில் - அதாவது ஊமைப் படங்கள் உருவான காலத்திலும் சரி, பேசும் படமாக அது வளர்ச்சி அடைந்த சூழலிலும்…

2 days ago

This website uses cookies.