”ஆயுஷ்மான் பாரத்”- தேசிய சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம்!

”ஆயுஷ்மான் பாரத்”- தேசிய சுகாதாரக் காப்பீட்டுத் திட்டம்!

நம் இந்திய மக்கள் தொகையில் வெறும் 4 சதவீதம் மக்களிடம் மட்டுமே தற்போது சுகாதாரக் காப்பீடு உள்ளது. மிச்சமுள்ள 86 சதவீத மக்கள் மருத்துவச் செலவுகள் மற்றும் இதர சுகாதாரச் சேவைகளுக்குக் கையில் இருக்கும் பணத்தைதான் செலவு செய்கின்றனர். உடல்நலன் தொடர் பான செலவினங்களினால் கடனிலும் ஆழ்ந்த வறுமையிலும் வாடும் குடும்பங்கள் இருக்கும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது. உடல்நலத்திற்காக கைச்செலவு செய்யும் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உடைய 50 நாடுகளில் இந்தியா 6-வது இடத்தை பிடித்திருப் பதாக 2017, மே 8 அன்று வெளியான இண்டியாஸ்பென்ட் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதை எல்லாம் கவனத்தில் கொண்டு மத்திய அரசு  உலகின் பெரிய ஏழை மற்றும் நடுத்தர மக்க ளுக்கான “ஆயுஷ்மான் பாரத் யோஜனா” செப்டம்பரில் இருந்து துவக்குகிறது. இதன் மூலம் 40 கோடி முதல் 50 கோடி கோடி குடும்பங்கள் பயன் பெறுவர். இது 40% இந்திய மக்கள் தொகையை கவர் செய்யும். இந்த தேசிய காப்பீடு மூலம் முன்பணம் அல்லது முற்றிலும் பணம் இல்லாமல் 5 லட்சம் வரை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியும். அதுபோக அரசு காப்பீடு என உங்கள் காப்பீடு பணத்தை இஷ்டத்துக்கு பில் செய்ய முடியாது. அரசு நிர்ணயக்க போகும் பாக்கேஜ் ரேட்களை அனைத்து தனியார் மருத்துவமனைகளும் ஏற்கும் வகையில் ஏற்பாடு செய்ய பட்டிருக் கிறது. 1354 பாக்கேஜ்கள் திட்ட வடிவம் ரெடி. இந்த பாக்கெஜ் விலைகள் Central Government Health Scheme (CGHS). விட குறைவானது. ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தில் 1,350 வியாதி களுக்கு சிகிச்சை பெறுவதற்கு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறும் கட்டணம், பரிசோதனை கட்டணம், மருந்துகளுக்கான செலவு ஆகியவைகளும் அடங்கும்.

இது முற்றிலும் மத்திய மற்றும் மாநில அரசு மருத்துவ செலவுகளை ஏற்று கொள்ளூம். தமிழகம் உட்பட 22 மாநிலங்களில் இது இப்போதைக்கு வேலிட். கேரளா, கர்னாடகா, பஞ்சாப், டெல்லி காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் இதை இன்னும் ஏற்று கொள்ளாத காரணம் செலவை இரணடு அரசும் ஏற்று கொள்ள வேண்டிய நிலை வருவதால் இதன் மூலம் தன் மாநில மக்களுக்கு எவ்வளவு நல்லது நினைக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. ஒடிசா மாநிலம் முற்றிலுமாக இந்த திட்டம் தேவையில்லை என புறக்கணித்து விட்டது.

நீங்கள் இதில் இணைய வேண்டுமானால் இந்த சுட்டியை க்ளிக் செய்து இந்த் திட்டத்திற்க்கு தகுதியானவரா என்று பார்க்கலாம் –

https://abnhpm.gov.in/

உங்கள் மருத்துவமனையை இந்த திட்டத்தில் இணைக்க –

https://hospitals.abnhpm.gov.in/empApplicationHome.htm?actionVal=loginPage

Related Posts

error: Content is protected !!