October 25, 2021

மாற்றுமுறை மருத்துவமனைகளில் விதிமுறைகளுக்கு மதிப்பில்லை!

வாட்ஸ் அப் மூலம் டாக்டர்களிடம் கன்சல்ட் செய்யப்படும் இப்போதைய நவீன அலகில் பின் பற்றப்படும் இன்றைய மேற்கத்திய அறிவியல் நடைமுறை சார்ந்த மருத்துவம், அலோபதி (Allopathy) எனப்படுகிறது. அலோபதி மருத்துவத்தோடு கூடுதலாகப் பயன்படுத்தப்படும் மருத்துவ முறைகளை இணை மருத்துவம் (பேரலல் மெடிசின்) என்று சொல்வது மரபு. உதாரணமாக, நம் நாட்டில் ஆங்கில மருந்துகளைக் கையாண்டபோதும் ஒத்தடம் கொடுத்தல், பிடித்து விடுதல் (மசாஜ்), மூச்சுப் பயிற்சி செய்தல், யோகாசனங்கள் செய்தல் போன்றவற்றைப் பயன் படுத்துகிறோம். இவை இணை மருத்துவம்.

அலோபதி மருத்துவத்திற்கு பதிலாகப் பயன்படுத்தப்படுகின்ற மருத்துவ முறையை மாற்று மருத்துவம் (ஆல்டர்னடிவ் மெடிசின்) என்கிறோம். உதாரணமாக, ஒருவருக்கு மூட்டுவலி. அலோபதி மருத்துவத்தினால் அவருக்கு அது குணமாகவில்லை. அவர் சித்த மருத்துவர் அல்லது ஆயுர்வேத மருத்துவர் ஒருவரை நாடிச் சென்று மருந்து உண்கிறார். இது மாற்று மருத்துவம்.

இன்று அநேகமாக எல்லாத் தொலைக்காட்சிச் சேனல்களிலும், காலை எட்டு அல்லது எட்டரை மணிக்கே ஒரு சாமியார் அல்லது கோட்டு-டை-சூட்டு ஆசாமி வந்துவிடுவார். நாட்டு மருத்துவம், பாரம்பரிய மருத்துவம், சித்த மருத்துவம் என்ற பெயரில் அவர் ஏதாவது ஒரு மூலிகையைப் பற்றிச் சொல்வார். “எல்லாம் நம்ம வீட்டுத் தோட்டத்தில இருக்குங்க, உங்க வீட்டிலேயே மருந்து இருக்கிறது” என்பார். ஓரிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு யாரோ ஒரு சேனலில் ஆரம்பிக்கப்போக இதுவே இன்று வாடிக்கையாகவும் பிசினஸாகவும் ஆகிவிட்டது.

இந்த மருத்துவம் எனபது அறிவியலும், ரணம் ஆற்றும் ஒரு கலையும் ஆகும். இதில் ஏராளமான உடல்நல பாதுகாப்பு முறைகள் மனிதன் அறிந்த நாளிலிருந்தே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எதற்கு?நோய்க்கான சிகிச்சை அதனைக் கட்டுப்படுத்த்தும் முறை, வராமல் தடுப்பதற்கான முறை என பலவகையானமுயற்சிகள் செய்து, கஜ குட்டிக் கரணம் போட்டு, பல சிங்கிடி குங்கிடி முறைக ளைஎல்லாம் கையாண்டு, இன்று ஒரு வழியாய் பல வகை மருத்துவ சிகிச்சை முறைகளைக் கைக்கொண்டு வளர்ந்துள்ளோம். அது மட்டுமா அதன் வழியில் பல வகை மாற்று சிகிச்சை முறைகளையும் கூட பின்பற்றுகிறோம். பல வகை மருத்துவ முறைகள் இருக்கின்றன.

இந்நிலையில்தான் மாற்றுமுறை மருத்துவத்தில் அரசு விதிமுறைகளை கடை பிடிக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு ஆயுஷ் (ஆயுர் வேதம், யோகா, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி) அமைச் சகம் அறிவுறுத்தி உள்ளது.அதாவது பிரதமர் மோடி ‘ஆயுஷ்’ எனப் படும் மாற்றுமுறை மருத்துவத் திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து இந்தியப் பாரம்பரியத் தின் மாற்றுமுறை மருத்துவத்திற்கு உலகம் முழுவதிலும் முக்கியத்துவம் கூடியுள்ளது. இந்த சூழல் நிலைக்க வேண்டி மத்திய ‘ஆயுஷ்’ அமைச்சகம் சார்பில் நாட்டின் அனைத்து மாநிலங்களின் மாற்று முறை மருத்துவர் களுக்கான பயிலரங்கம் சமீபத்தில் டெல்லியில் நடைபெற்றது.இதில் கலந்துகொண்டவர்கள் அளித்த பல தகவல்கள்தான் அமைச்சக அதிகாரிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

மாற்றுமுறை மருத்துவமனைகளில் பல்வேறு விதிமுறைகள் காற்றில் பறக்க விடுவதாகவும், மருந்துகளில் பல போலிகள் உருவாகும் சூழல் ஏற்பட்டு வருவதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனைகளின் சில பிரிவுகளில் முறையாகப் பயிற்சி பெறாதவர்கள் அமர்த்தப் பட்டிருப்பதாக வும், இதனால் சிகிச்சையின் பலன் நோயாளிக்கு கிடைக்காமல் இருப்பதாகவும் தகவல் அளிக் கப்பட்டது. இவற்றை கவனத்தில் எடுத்துக் கொண்ட ‘ஆயுஷ்’ அதிகாரிகள் அமைச்சகத்திற்கு விரிவான அறிக்கை அளித்திருந்தனர். இதையடுத்து அனைத்து மாநிலங் களையும் எச்சரிக்கும் வகையில் ‘ஆயுஷ்’ அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.

இதுகுறித்து ‘ஆயுஷ்’ அதிகாரிகள் கூறும்போது, ‘‘மாற்றுமுறை மருத்துவங்களுக்கு உரிமம் அளிக்க மாநிலங்கள் அமர்த்தும் அதிகாரிகள் அந்த தொழில்நுட்பம் அறிந்தவர்களாக இருக்க வேண்டும். மருந்து விநியோகப் பிரிவுகளை அவ்வப்போது சோதனை செய்து போலிகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதன் மருந்துகளை தயாரிக்கும் தனியார் நிறுவனங்களுக்கு உரிமங்கள் அளிக்கும்போது விதி முறைகள் கடைபிடித்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். இல்லை யெனில் சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்தனர்.

நாட்டின் அனைத்து முறை மருந்துகளையும் முறைப்படுத்த மருந்து மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டம் மறுசீரமைக் கப்பட்டு 1988-ல் அமலுக்கு வந்தது. இதன்படி மத்திய அரசிடம் அனு மதி பெறாத மாற்றுமுறை மருத்து வத்தின் மருந்துகள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மாநிலங்கள் அனுமதி அளிக்கக் கூடாது எனவும் ‘ஆயுஷ்’ தனது கடிதத்தில் எச்சரித் துள்ளது. தனியார் நிறுவனங்கள் தயாரிக்கும் மருந்துகளை அவ் வப்போது போதுமான அளவில் எடுத்து மாநில அரசு அதிகாரிகள் அவற்றை தர சோதனைக்கு உட் படுத்த வேண்டும் என்றும் கூறப் பட்டுள்ளது. இதில் விதிமீறல்களில் ஈடுபடும் நிறுவனங்களின் மீது மத்திய அரசின் சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவ்ல் வெளியாகி உள்ளது