முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிப்பு- தமிழக தலைவர்கள் கண்டனம்

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிப்பு- தமிழக தலைவர்கள் கண்டனம்

இலங்கை யாழ் நகரில் உள்ள யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் அமைக்கப் பட்டிருந்த முள்ளிவாய்க்கால் போர் நினைவுச்சின்னம் நேற்று இரவு அகற்றப்பட்டது இதைத் தொடர்ந்து அங்கு பதற்ற நிலை உருவாகி உள்ளது. அதனால் யாழ் பல்கலைக்கழக வளாகத்துக்கு வெளியே சிறப்பு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் 2019ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இறுதிப்போர் நினைவுச் சின்னம் ஒன்றை யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அமைத்தனர். முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் நடந்து 10 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி இந்த போர் நினைவுச்சின்னம் அமைக்கப் பட்டிருந்தது. யாழ் பல்கலைக்கழக வளாகத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த இந்தப் போர் நினைவுச் சின்னம் வெள்ளிக்கிழமை இரவு அகற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து யாழ் பல்கலைக்கழக பகுதியில் அங்கு வசிக்கும் தமிழர்கள் கூடத் தொடங்கினர்.

யாழ் பல்கலைக்கழக வாயிலில் சிறப்பு காவல்படையினர் நிறுத்தப்பட்டனர், அவர்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் யாரும் செல்லக்கூடாது என்று தடை செய்தனர் பல்கலைக்கழக வளாகத்தின் முன்பு அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அமைதியாக அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்கள். அந்தப்போராட்டம் தொடர்வதாக கூறப்படுகிறது.

யாழ் பல்கலைக்கழக பகுதியில் சனிக்கிழமையன்று பதற்றம் நிலவுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவிடம் இடிக்கப்பட்டதற்கு தமிழக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நடந்தது என்ன?

முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் அக்ற்றப்பட்டது குறித்து யாழ் பல்கலைக்கழக துணை வேந்தர் ஸ்ரீ சற்குணராஜா கூறும் பொழுது , நிரவாக அதிகாரம் மட்டுமே உடைய துணை வேந்தர் தனது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் செயலபட வேண்டிய சூழல உள்ளது. 2019 ல் அனுமதியின்றி மாணவர்கள் எழுப்பிய நினைவுச்சின்னத்தை அகற்றும்படி பல்க்லை கழகத்தின் சம்பந்தப்பட்ட துறைக்கு உத்தரவு தரப்பட்டது.

நினைவுச்சின்னம் வெள்ளியன்று இரவு 7 மணிக்கு புல்டோசர் மூலம் அகற்றப்பட்டது அகற்றப் பட்ட கட்டடப்பொருள்கள் 2 லாரிகளில் வெளியே கொண்டு செல்லப்பட்டன.. அதன் பிறகுதான் பலக்லைகழக வாயிலில் கண்டனக்குரல்கள் எழுந்தன என்று ஸ்ரீ சற்குண ராஜா கூறினார்.

இப்போக்குக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து, “இலங்கை, முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் இரக்கமின்றி கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூண் இரவோடு இரவாக இடிக்கப்பட்டுள்ள செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது.

உலகத் தமிழர்களைப் பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ள இலங்கை அரசின் இந்த மாபாதகச் செயலுக்கும் அதற்குத் துணைபோன யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கும் எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும்

மு.க.ஸ்டாலின், தலைவர், திமுக ” 

ஈழத் தமிழர்களின் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் பல ஏற்கெனவே சிதைக்கப்பட்டு அழிக்கப்பட்டதன் தொடர்ச்சியாக, தற்போது யாழ் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூணும் இடிக்கப்பட்டுள்ளது, மிகுந்த கவலைக்கும், கடும் கண்டனத்திற்கும் உரியதாகும்!

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், இலங்கை சென்று திரும்பியவுடன், இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்திருப்பதை, பிரதமர் மோடி கருத்தில் கொண்டு, கண்டனம் தெரிவித்திட முன்வர வேண்டும் என்பதே உலகத் தமிழர்களின் எதிர்பார்ப்பு ஆகும்!. எனவும்

டிடிவி தினகரன், பொதுச் செயலாளர், அமமுக,

“இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப் பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னம் இரவோடு, இரவாக இடிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது; கடும் கண்டனத்திற்குரியது.

இலங்கையின் பூர்வ குடிகளான தமிழர்களின் உணர்வுகளோடு விளையாடும் இத்தகைய நடவடிக்கைகள் சரியானதல்ல. தமிழ் மக்களின் எண்ணங்களில் நிறைந்திருக்கும் போராட்டத்தின் நினைவுகளை, சின்னங்களை அழிப்பதன் மூலம் அகற்றிவிட முடியாது.

தமிழர்களின் உயர்வையும் உள்ளடக்கிய வளர்ச்சியைப் பற்றி சிந்திப்பதற்குப் பதிலாக இப்படி சர்வாதிகாரமாக நடந்துகொள்வது விரும்பத்தகாத விளைவுகளையே ஏற்படுத்தும். இதனை இலங்கை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்வும் தெரிவித்துள்ளார்கள். இது போல் மேலும் பல தலைவர்கள் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்திருப்பதை தெரிவித்துள்ளார்கள்!.

Related Posts

error: Content is protected !!