April 13, 2021

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மரணம்!

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட்வீரர் டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

59 வயதான டீன் ஜோன்ஸ் ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமான விளையாட்டு வீரர்.. இந்தியாவில் கூட பல்வேறு போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.. மெல்போர்னில் பிறந்த இவர் சிறப்பாக பேட்டிங் செய்து சிறந்த வீரராக அந்த கால கட்டத்தில் ஆஸ்திரேலிய அணியில் தனது இடத்தை பிடித்திருந்தார்.. பில்டிங் திறமை படைத்தவர்.. அப்படிப்பட்ட நிலையில் இவர் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு விளையாட்டு விமர்சகராக இருந்து வந்தார்..

இந்த நிலையில் தான் ஐபிஎல் தொடர்பாகவும், யூ டியூப் மூலமாக கமென்ட்ரி போன்றவற்றை நடத்துவதற்கும் மும்பைக்கு வந்த டீன் ஜோன்ஸ் நட்சத்திர விடுதியில் தங்கி இருந்ததாக சொல்லப்படுகிறது.. அப்படி இருந்த சூழ்நிலையில் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அவருக்கு சிகிச்சை அளிக்க கொண்டு சென்றும் பலனின்றி இறந்துவிட்டார் என்றும் தகவல் வெளிவந்திருக்கிறது.. இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் ஆழ்ந்த சோகத்தில் உள்ளனர்.