ரயில் பயணிகளின் கனிவான கவனத்திற்கு – இதோ புது விதிகள்!
இந்திய ரயில்வேயில் தினந்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் தங்களின் அலுவலகம், சுற்றுலா, இருப்பிடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பயணிகளின் வசதிக்கேற்ப பல்வேறு அம்சங்களை இந்திய ரயில்வே துறை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது இரவு பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்காக இரவு விதிமுறைகளை வகுத்து வெளியிட்டுள்ளது. . அதன்படி, ரயில் பெட்டிகளில் புகைபிடிப்பது, மது அருந்துவது போன்ற எந்தவொரு செயலையும் செய்யக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, இந்திய ரயில்வே நிர்வாகம் வெளி யிட்டுள்ள அறிக்கையில், பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு இரவு நேரத்தில் ரயிலில் கடைபிடிக்க வேண்டிய சில விதிமுறைகளை அறிவித்துள்ளது.
அதன்படி ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் ரயில் பெட்டிகளில் புகைபிடிப்பது, மது அருந்துவது போன்ற எந்தவொரு செயலையும் செய்யக்கூடாது என்று ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
பயணிகள், இருக்கையிலோ, பெட்டியிலோ அல்லது கோச்சிலோ எந்தப் பயணியும் சத்தமாக மொபைலில் பேச அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இயர்போன் இல்லாமல் அதிக டெசிபலில் எந்தப் பயணியும் இசையைக் கேட்கக்கூடாது.
இரவு விளக்கு தவிர, இரவு 10 மணிக்குப் பிறகு எந்தப் பயணிகளும் விளக்குகளை எரிய வைக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்
ஐஆர்சிடிசி வெளியிட்ட இரவு 10 மணிக்குப் பிறகான விதிகள்:
இரவு 10 மணிக்குப் பிறகு, பயணிகளின் டிக்கெட்டைப் பார்க்க TTE வர முடியாது.
இரவு விளக்கு தவிர மற்ற அனைத்து விளக்குகளையும் அணைக்க வேண்டும்.
ஒன்றுக்கு மேல் குழுவாகப் பயணிக்கும் பயணிகள் இரவு 10 மணிக்குப் பிறகு அரட்டை அடித்து பேசக்கூடாது.
மிடில் பெர்த் பயணிகள் தங்கள் இருக்கையைத் திறந்தால், கீழே உள்ள சக பயணிகள் எதுவும் சொல்ல முடியாது.
ரயில் சேவைகளில் ஆன்லைன் ஆர்டர் மூலம் இரவு 10 மணிக்குப் பிறகு உணவு வழங்க முடியாது.
இருப்பினும், இரவிலும் இ-கேட்டரிங் சேவைகள் மூலம் ரயிலில் உங்கள் உணவு அல்லது காலை உணவை முன்கூட்டியே ஆர்டர் செய்யலாம்.
ஐஆர்சிடிசி-ன் லக்கேஜ் விதி:
ஏசி கோச்சில் பயணிக்கும் பயணிகள் அதிகபட்சமாக 70 கிலோ வரை லக்கேஜ்களை எடுத்துச் செல்லலாம்.
ஸ்லீப்பர் வகுப்பில் 40 கிலோ வரையிலும் மற்றும் இரண்டாம் வகுப்பில் 35 கிலோ வரையிலும் பயணிகள் இலவசமாக லக்கேஜ் எடுத்து செல்லலாம்.
ஏசி வகுப்பில் கூடுதல் லக்கேஜ் கட்டணத்துடன், பயணிகள் 150 கிலோ, ஸ்லீப்பரில் 80 கிலோ, மற்றும் இரண்டாவது உட்கார்ந்து 70 கிலோ பை மற்றும் சாமான்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.