Exclusive

அதர்வா முரளியின் அசரவைக்கும் சிங்கிள் ஷாட் ஆக்சன் காட்சி !

சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்படும் காட்சிகளுக்கு உலகெங்கிலும் ஒரு பெருமதிப்பு இருக்கிறது. சிங்கிள் ஷாட் திரையில் நிகழ்த்தும் மேஜிக்கை, மொழி, இனம் கடந்து உலகம் முழுக்கவே திரை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். கொரியன் படமான Oldboy, மூன்று ஆஸ்கர் விருதுகளை வென்ற 1917, புகழ்பெற்ற The Revenant, The Raid படத்தொடர் எல்லாம் இம்மாதிரி ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட சிங்கிள் ஷாட் ஆக்சன் காட்சிகளுக்காக உலகம் முழுக்க கொண்டாடப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை இம்மாதிரியான முயற்சிகள் தீவிரமாக நிகழ்ந்ததில்லை. முதல் முறையாக Pramod Films நிறுவனத்தின் 25 வது திரைப்படமாக அதர்வா முரளி, இயக்குநர் சாம் ஆண்டன் இணையும் படத்தில் இந்த முயற்சி நடந்தேறியுள்ளது. ரசிகர்களை வாய்பிளக்க வைக்கும் ஆக்சன் காட்சியாக, இக்காட்சி உருவாக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் சாம் ஆண்டன் இது குறித்து கூறியதாவது…

இது எனது நீண்ட நாள், கனவு முயற்சி. நானும் திலீப் சுப்பராயன் மாஸ்டரும், பல காலம் முன்பாகவே, இப்படி ஒரு ஆக்சன் காட்சியை எடுக்க திட்டமிட்டோம். இப்படத்தில் அந்த கனவு நிறைவேறியுள்ளது. அதுவும் சுறுசுறுப்பும், உத்வேகமும் நிறைந்த நடிகர் அதர்வா முரளி போன்ற நாயகன் அமைந்ததால் தான் இது சாத்தியமானது. சிங்கிள் ஷாட்டில் ஒரு ஆக்சன் காட்சியை திட்டமிட்டு எடுப்பது மிக சவாலானதாக இருந்தது. திட்டமிட்ட பிறகு ஒரு நாள் மட்டுமே நாங்கள் ரிகர்சல் செய்தோம். படக்குழுவினரின் அர்ப்பணிப்புடன் கூடிய அயராத உழைப்பால் இக்காட்சி அற்புதமாக வந்துள்ளது. இப்படத்திற்கு பிறகு அதர்வா இந்திய அளவில் புகழ்மிக்க நடிகராக மாறிவிடுவார்.

Pramod Films தயாரிப்பாளர் ஷ்ருதி நல்லப்பா கூறியது..

இந்த ஆக்சன் காட்சி, சினிமாவில் ஆக்சன் படங்களுக்கே ஒரு பெரும் மைல்கல்லாக இருக்கும். நடிகர் அதர்வா காட்டிய அர்ப்பணிப்பு, அவரது உழைப்பு போற்றப்பட வேண்டியது. இந்த அற்புதமான காட்சியை வடிவமைத்ததற்கு திலீப் சுப்பராயன் மாஸ்டருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த காட்சியை மிக அழகாக படம்பிடித்ததில் ஒளிப்பதிவு குழுவினரின் பங்கு மிகப்பெரியது. இவையனைத்திற்கும் தலைமை வகித்த, மிகப்பெரும் கற்பனை திறன் மிக்க இயக்குநர் சாம் ஆண்டன் -க்கு பெரும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். எங்களின் Pramod Films சார்பில் இந்த ஆக்சன் காட்சி உலக சினிமா வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்பதில் பெருமை கொள்கிறோம்.

aanthai

Recent Posts

‘வரலாறு முக்கியம்’ படத்திற்கு 300 ஸ்கிரீன்ஸாமே!

சூப்பர் குட் ஃபிலிம்ஸ் ஆர்.பி. செளத்ரி புரொடக்‌ஷனின் 'வரலாறு முக்கியம்' திரைப்படம்தான் தற்போது இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்ட்டிங்கில் பேசுபொருளாக உள்ளது.…

5 hours ago

டீவி சீரியல் பார்த்த 2 சிறுவர்களுக்கு மரண தண்டனை – வடகொரியா குரூரம்!

வடகொரிய அதிபர் கிம்ஜாங் உன் கடந்த ஆண்டு கடுமையான சட்டங்களை கொண்டு வந்தார். அதன்படி தென்கொரிய சினிமாக்கள், நாடகங்கள் இசை…

6 hours ago

லவ் டுடே படமும் பெண்ணியமும்!

இன்றைய நவீன தலைமுறை இளைஞர்களுக்கான நவீன காதல் என்று விளம்பரப்படுத்தப்பட்டு விமரிசையாக கொண்டாடப்பட்ட படம் லவ் டுடே. சரி, இளைய…

8 hours ago

டெல்லி மாநகராட்சி: பாஜக வை வீழ்த்தி அதிகாரத்தைக் கைப்பற்றியது ஆம் ஆத்மி!

இந்திய தலைநகர் டெல்லி மாநகராட்சியில் கடந்த 15 ஆண்டுகளாக பாஜக செலுத்திவந்த ஆதிக்கத்தை ஆம் ஆத்மி முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது. பாஜகவுக்கு…

8 hours ago

அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் ‘ரத்தம்’ பட டீசர்!

விஜய் ஆண்டனியின் 'ரத்தம்' பட டீசர் பார்வையாளர்களிடையே, படம் குறித்த எதிர்பார்ப்புகளைப் பல மடங்கு உயர்த்தியுள்ளது. பாக்ஸ் ஆபிஸில் நடிகர்…

1 day ago

சங்கராந்தியன்று இரட்டைப் பரிசு வழங்கும் ஸ்ருதிஹாசன்!

'உலகநாயகன்' கமல்ஹாசனின் வாரிசாக இருந்தாலும், தன்னுடைய தனித்துவமான திறமையினால் திரை உலகில் முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசனின்…

1 day ago

This website uses cookies.