பாஜக -வின் பிதாமகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் காலமானார்!

பாஜக -வின் பிதாமகனும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் காலமானார்!

பா.ஜ.க என்ற கட்சியை தொடங்கியவரும் , இந்திய பிரதமராக மூன்று முறை இருந்தவருமான வாஜ்பாய் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த ஜூன் மாதம் 11-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறுநீரக மற்றும் மூச்சுக்குழாய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று திடீரென அவரது உடல்நிலை மோசமானதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேற்று இரவு 7:15 மணிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல் உள்ளிட்டோர் வாஜ்பாயின் உடல்நிலை குறித்தும், அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.இந்நிலையில், சிகிச்சை பலனின்றி உடல்நலக்குறைவு காரணமாக வாஜ்பாய் காலமானதாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அவருக்கு வயது 93 ஆகும். 1924-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் பிறந்த அடல் பிகாரி வாஜ்பாய், இந்தி மொழியில் மிகச்சிறந்த புலமை பெற்றவர். பல்வேறு கவிதை நூல்களையும், புத்தகங்களையும் எழுதியுள்ளார். தனக்கே உரிய நகைச்சுவை உணர்வு நிறைந்தவர். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், வாஜ்பாய்க்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பி.ஜே.பி. அரசு, பாரத ரத்னா விருது வழங்கி கௌரவித்தது. பத்மவிபூஷண் விருதையும் வாஜ்பாய் பெற்றுள்ளார்.

50 வருட பாராளுமன்ற உறுப்பினரான இவர் மக்களவைக்கு 9 முறையும் மாநிலங்களவைக்கு 2 முறையும் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்.இவர் 4 முறை வெவ்வேறு மாநிலங்களில் (உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், டெல்லி) இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே உறுப்பினர் ஆவார். மொரார்ஜி தேசாய் அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராகவும் இவர் பணியாற்றி உள்ளார்.

கடந்த 2009-ம் ஆண்டுக்குப் பின்னர், வாஜ்பாயின் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டது. அவர் அரசியல் வாழ்க்கையிலிருந்து படிப்படியாக ஒதுங்கிக் கொண்டார். டெல்லியில் உள்ள அவருடைய வீட்டிலேயே தொடர் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். என்றாலும், அவரால் நடக்க இயலவில்லை. படுத்த படுக்கையாகவே இருந்த வாஜ்பாய்க்கு, சர்க்கரை நோய் பாதிப்பும் இருந்தது. இதனால் வீட்டிலேயே முடங்கியிருந்தவர் இன்று தன் இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டார்

வாஜ்பாய் ஆட்சிக் கால நிஜச் சாதனைகள்

தங்கத்தை இங்கிலாந்தில் அடமானம் வைத்து அரசாங்கம் நடத்திய இந்தியாவில் இவர் பிரதமராக பதவியேற்ற பின்தான்…

தங்கம் விலை பவுன் 4470/-இல் இருந்து 3300/- ஆக குறைந்தது ..

இவர் ஆட்சியில்தான் 4.5 ஆண்டுகள் விலைவாசி உயரவில்லை.

இவர் ஆட்சியில்தான் பெட்ரோலிய பொருட்கள் விலை எகிற வில்லை …
petrol 36/- rs per litre rate.

இவர் ஆட்சியில்தான் செல்வந்தர்கள் மட்டுமே 3000O/- 0YT 3 மாதம் 15000/- 6மாதம் கழித்து கிடைத்த தொலைபேசி இணைப்பை 1000ரூபாய் செலுத்தி உடனடியாக சாமானிய மக்கள் பெற்றார்கள்…

இந்தியா முழுவதும் நாங்கள் விபத்தில்லா நான்கு வழி சாலை வந்தது..

சர்வசிக்ஷ் அபியான் மூலம் இந்தியாவின் கடைசி கிராமம் வரை கல்வி வளர்ச்சி அடைந்தது.

பிரதான்மந்திரி கிராம் சடக் யோஜனா மூலம் கடைக்கோடி கிராமம் வரை சாலைகள் கண்டது 

இவர் ஆட்சியில்தான் வங்கி வீட்டு கடன் வட்டி குறைந்து பலர் வீடு கட்டினார்கள்..

வாகன உற்பத்தியும் இந்தியாவில் அதிகரிக்கப்பட்டு வாகன கடனும் தாராளமாக கிடைத்ததன் பலனாக மிதிவண்டியை மட்டுமே பார்த்த பலர் வாகனங்கள் வாங்கினார்கள்:

விறகு அடுப்பு மண்ணெண்ணெய் அடுப்புமே பயன்படுத்திய இந்திய குடி மக்கள் பலர் இவர் ஆட்சியில்தான் தாராளமாக பயன் பாட்டுக்கு வந்தது..

இவர் ஆட்சியில் தான் அதிகப்படியாக இருளில் இருந்த பலருக்கு காற்றாலை மின் உற்பத்தி மூலம் தடையில்லா மின்சாரம் கிடைத்தது ..

இவர் ஆட்சியில்தான் போக்குவரத்திற்கு இந்தியா முழுவதும் தரமான தேசிய நெடுஞ்சாலை கள் கிடைத்தது .

அதில் தமிழகத்தில்
NH.66 கிருஷ்ணகிரி to பாண்டிச்சேரி
NH,68 சேலம் to உளுந்தூர்பேட்டை
NH 208 மதுரை to கொல்லம்
NH 45A விழுப்புரம் to நாகப்பட்டனம்
NH 206 …NH 67 திருச்சி to ராமேஸ்வரம்
NH 207 NH 209 சாம்ராஜ்நகர் to திண்டுக்கல் மற்றும்
NH 45B ஆகியவை.

இவர் ஆட்சியின் போதுதான் மதுரை சின்னப்பிள்ளை காலில் விழுந்து ஊக்குவித்து மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் மகளிர் வாழ்வு மேம்பாடு அடைந்தது..

இவர் ஆட்சியில் தான் அமெரிக்காவின் கண்ணில் மண்ணை தூவி பொக்ரான் அணுகுண்டு வெடித்து இந்தியா உலக அரங்கில் தலை நிமிர்ந்தது,.

இவர் ஆட்சியில் நம்மூர் மேதை விஞ்ஞானி அப்துல்கலாம் ஜனானதிபதியானார்,.

இவர் ஆட்சியில் தான் பனிமலை கார்கிலில் ஆக்கிரமிக்க நினைத்த அந்நிய நாட்டினரை துரத்தியடித்து வெற்றிவாகை சூடப்பட்டது..

இவர் ஆட்சியில் தான் சுற்றுலா கூட போக முடியாத ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் (ஸ்ரீநகரில்) தீவிரவாதிகளை அடக்கி சுற்றுலா சுலபமானது..

இவர் ஆட்சியில் தான் வெளிநாடுகளில் திட்டங்களுக்கு கையேந்திய இந்தியாவை அந்நிய செலாவணி கையிருப்பு 1.5லட்சம் கோடியாக உயர்த்தி நாம் அவர்களுக்கு கடன் கொடுக்கும் நிலை உருவானது..

இவர் ஆட்சியில்தான் எதிர்கட்சியாக இருந்தாலும் S.M.கிருஷ்ணா கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரை சிலிகான்vally யாக்க 1500 கோடி உடன் ஒதுக்கி மென்பொருள் உற்பத்தியை தன்னிறைவாக்கி இந்தியாவில் உள்ள படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு குறை போக்கப்பட்டது..

இவர் ஆட்சியில் தான் இந்தியா பால் உற்பத்தியில் முதலிடம் பிடித்தது ..

இவர் ஆட்சியில்தான் டெல்லியில் முதல் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது

இவர் ஆட்சியில்தான் மிகச்சிறப்பான நிறைய சுரங்கபாதைகள்..கடல் பாலங்கள் கொண்ட கொங்கன் ரயில்வே மங்களூர்to மும்பை பாதை அமைக்கப்பட்டது ..

இவர் ஆட்சியில்தான் ஏழைகளுக்கு அந்தியோதையா அன்னபூர்னா திட்டத்தில் ஏழைகள் பசியைபோக்க மாதம் 25கிலோ அரிசி இலவசமாக தரப்பட்டது,..

இவர் ஆட்சியில்தான் வால்மீகி அம்பேத்கார் ஆவாஸ்யோஜனாஅய்யா திட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீடு கட்டி தரப்பட்டது,.

இவர் ஆட்சியில் தான் அம்பேத்கார் பிறந்தநாள் அரசு விடுமுறை நாள் ஆக்கப்பட்டது..

இவர் ஆட்சியில்தான் மிலாடிநபி விடுமுறை நாளாக ஆக்கப்பட்டது…

நாட்டுமக்களுக்காக திருமணமே செய்து கொள்ளாத வாஜ்பாய் அவர்களின் பல சாதனைகள் சொல்லி கொண்டே போகலாம்.

Related Posts

error: Content is protected !!