அறிமுக இயக்குநர்களுக்கு ‘மரகத புதையல்’ பரிசளித்த ‘ மரகத நாணயம்’ டீம்!

அறிமுக இயக்குநர்களுக்கு ‘மரகத புதையல்’ பரிசளித்த ‘ மரகத நாணயம்’ டீம்!

கற்பனை, சாகசம் மற்றும் நகைச்சுவை கதைக்களத்தில் உருவாகி இருக்கும் ‘மரகத நாணயம்’ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் அமோக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. மார்ச் 15 ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்ற இந்த படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குநர் ராம்குமார், இயக்குநர் ரவிக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதுமட்டுமின்றி ஐந்து சிறந்த அறிமுக இயக்குநர்கள் – விஜயக்குமார் (உறியடி), இயக்குநர் நெல்சன் (ஒரு நாள் கூத்து), இயக்குநர் கார்த்திக் நரேன் (துருவங்கள் 16), இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் (ரெமோ) மற்றும் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி (சைத்தான்) ஆகியோருக்கு ‘மரகத புதையல்’ ஒன்றை அளித்து, அவர்களை கௌரவித்தார் தயாரிப்பாளர் ஜி டில்லிபாபு.

விமர்சையாக நடைபெற்ற மரகத நாணயம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் ஜி டில்லிபாபு, இயக்குநர் ஏ ஆர் கே சரவண், ஆதி, நிக்கி கல்ராணி, ஆனந்தராஜ், முனீஸ் காந்த், அருண்ராஜா காமராஜ், டேனி, எம் எஸ் பாஸ்கர், மைம் கோபி, முருகானந்தம், இசையமைப்பாளர் திபு நைனன் தாமஸ், ஒளிப்பதிவாளர் பி வி ஷங்கர், கலை இயக்குநர் என் கே ராகுல், பாடலாசிரியர்கள் முத்தமிழ், அருண்ராஜா காமராஜ், ஜி கே பி உள்ளிட்டோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

“இந்த சமுதாயத்தில் இருக்கும் எல்லா தரப்பு ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ள படும் திரைப்படங்களை மட்டுமே தயாரிக்க வேண்டும் என்பது மட்டும் தான் எங்கள் ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் முக்கியமான குறிக்கோள். அந்த வகையில் இயக்குநர் ஏ ஆர் கே சரவண் இந்த படத்தின் கதையை எல்லா தரப்பு ரசிகர்களும் ரசிக்கக்கூடிய விதத்தில் மிக அற்புதமாக உருவாக்கி இருக்கிறார் என்பதை நான் உறுதியாகவே சொல்லுவேன். எங்கள் அழைப்பை ஏற்று இந்த விழாவில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்” என்று உற்சாகமாக கூறினார் தயாரிப்பாளர் ஜி டில்லி பாபு.

IMG_4828 IMG_4839 IMG_4888 IMG_4890 IMG_4950 IMG_4956 IMG_4979 IMG_4981

“‘மரகத நாணயம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா என் மனதோடு எப்போதும் ஒன்றி இருக்கும். ஏனென்றால், நான், இசையமைப்பாளர் திபு நைனன் தாமஸ், அருண்ராஜா காமராஜ் ஆகிய மூவரும் ஒரே கல்லூரியில், ஒரே வகுப்பறையில் படித்தவர்கள். இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணனும், பாடலாசிரியர் முத்தமிழும் எங்களுக்கு சீனியர்கள். கல்லூரி காலத்திற்கு பிறகு நாங்கள் ஐந்து பேரும் ஒன்றாக சந்திப்பது இந்த மரகத நாணயம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தான். இத்தகைய வாய்ப்பை அளித்த தயாரிப்பாளர் டில்லிபாபு சாருக்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன். நிச்சயமாக திபு நைனன் தாமஸ், இசை துறையில் பெரிய வளர்ச்சியை காண்பார். அதற்கு இந்த மரகத நாணயம் தான் சிறந்த அடித்தளம்” என்று நம்பிக்கையோடு கூறினார் சிவகார்த்திகேயன்.

error: Content is protected !!