நேபாளத்தில் 6.6 ரிக்டரில் அடுத்தடுத்து ஏற்பட்ட 3 நிலநடுக்கங்கள்!

நேபாளத்தில்  6.6 ரிக்டரில் அடுத்தடுத்து ஏற்பட்ட 3 நிலநடுக்கங்கள்!

நேபாளம் நாட்டில் நேற்று நள்ளிரவு முதல் இன்று இன்று அதிகாலை வரையில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.6 வரையில் பதிவாகி உள்ள நிலையில், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களிலும் உணரப்பட்டு, கட்டடங்கள் குழுங்கியதால் மக்கள் அச்சமடைந்தனர்.

நேபாளத்தில் நேற்று இரவு 8.52 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில், 4.9 என பதிவாகி இருந்தது. இந்நிலையில், இன்று அதிகாலை 1.57 மணிக்கு மீண்டும் நேபாளத்தில் இரண்டாவது முறையாக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளத்தை மையமாக கொண்டு, 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.3 என பதிவாகி இருந்தது.

அதனைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக, 2.12 மணி அளவில் தோதி மாவட்டத்தில் 6.6 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானதாக நேபாள தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. இதனால், பல கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்துள்ளது. உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

இந்த நிலநடுக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டது. குறிப்பாக, டெல்லி, நொய்டா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியிலும் உணர முடிந்தது. உத்தரகண்டின் பித்ருகார்க் பகுதியிலும் உணரப்பட்ட நில அதிர்வானது, ரிக்டர் அளவில் 4 ஆக பதிவானது. அதனையொட்டி கட்டடங்கள் குலுங்கியதால், மக்கள் பீதி அடைந்தனர்.

10 நொடிக்கும் அதிகமாக இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக பலரும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். நள்ளிரவு 2 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், அப்பகுதியில் சிறிது பதற்றம் ஏற்பட்டது. பாதிப்புகள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

Related Posts

error: Content is protected !!