December 2, 2021

ரஷ்யா பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயரிழப்பு!- வீடியோ

ரஷ்யாவில் 23 பயணிகளுடன் சென்ற L-410 என்ற விமானம் தரையில் மோதி விபத்துக்குள்ளானதில் 16 பேர் உயரிழந்தனர், 7 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.

ரஷியாவின் டாடர்ஸ்தான் கிழக்கு மாஸ்கோ பகுதியில் பாராசூட் வீரர்கள் உள்ளிட்ட 23 பேருடன் சென்ற விமானம் இன்று (near Menzelinsk) விபத்துக்குள்ளானது.

இன்று காலை 9:30 மணி அளவில் விமானம் தரையில் மோதியதில் இரண்டாக உடைந்தது. இடிபாடுகளில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

விமானம் விபத்தில் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்த 7 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

விபத்துக்குள்ளான விமானம் ரஷியாவின் ராணுவம், விமான போக்குவரத்து மற்றும் கடற்படைக்கான தன்னார்வ சங்கத்திற்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.