அசுர குரு – விமர்சனம்!

அசுர குரு – விமர்சனம்!

சில நடிகர்கள் பணத்துக்காக நடிப்பார்கள்.. சில நடிகர்கள் பெருமைக்காக கமிட் ஆவார்கள்.. மேலும் சில நடிகர்கள் தன் குடும்ப உறுப்பினர்களின் ஆசைக்காக படம் பண்ணுவார்கள்.. ஆனால் நடிகர் திலகத்தின் பேரன் என்ற அந்தஸ்து கொண்ட விக்ரம் பிரபு இப்போதெல்லாம் கதைக்காக மட்டுமே நடிக்கிறார். அப்படி கமிட் ஆகி தமிழ் சினிமா ரசிகனைத் திருப்திப்படுத்தும் படம்தான் அசுரகுரு.

இந்த படத்தில் விக்ரம் பிரபு, மகிமா நம்பியார் ஆகியோருடன் சமீப கால செட் பிராப்பர்டியாகி விட்ட யோகி பாபு தோன்றுகிறார்.

இந்த அசுரகுருவை தயாரிச்சவர் ஜேஎஸ்பி சதிஷ்

இசை: கணேஷ் ராகவேந்திரா.
பின்னணி இசை:சைமன் கே கிங்
ஒளிப்பதிவு: ராமலிங்கம்
இயக்கம்: ஏ.ராஜ்தீப்

கொரியர் ஜாப் வேலை பார்க்கும் விக்ரம் பிரபு ஓப்பனிங்-கிலேயே ரயிலில் வரும் ரிசர்வ் வங்கியின் பல கோடி ரூபாயை கொள்ளையடிக்கிறார். அது போலவே ஹவாலா பண மோசடி கும்பலிடம் இருந்தும் இன்னொரு பேங்க் ஒன்றில் இருந்தும் பெரிய தொகையை கொள்ளையடிக்கிறார். அப்புற மென்ன..? ரிசர்வ் வங்கியின் பணத்தை தேடி காவல் துறையும், ஹவால கும்பல் தொலைத்த பணத்தை தேடி தனியார் துப்பறியும் நிபுணர் மகிமா நம்பியாரும் சேஸ் பண்ண, இவர்களிடம் விக்ரம் பிரபு சிக்கினாரா இல்லையா, அவர் எதற்காக இப்படி எல்லாம் கொள்ளையடிக்கிறார், என்பது தான் ‘அசுரகுரு’ படத்தின் கதை.

தொடக்கக் காட்சியில் இருந்து ஓடும் ரயிலில் குதிப்பது, காரை வழி மறித்து கொள்ளையடிப்பது என்று அட்வெஞ்சர் ஆக்‌ஷன் காட்சிகளில் அசத்தியிருக்கும் விக்ரம் பிரபு, நடிக்கக் கிடைக்கும் காட்சிகளில் மட்டும் கஞ்சத் தனம் செய்து விடுகிறார். பிரைவேட் டிடெக்ட்வாக வரும் மகிமா நம்பியாருக்கு கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாப்பாத்திரத்தோடு, வித்தியாசமான மேனரிசமும் கொடுப்பட்டிருக்கிறது. அதாவது சிகரெட் குடிக்கும் காட்சியைப் பார்த்து மேலும் சிலர் புகை பழக்கத்தைக் கற்றுக் கொள்ள வாய்ப்புண்டு. .மகிமா நம்பியாரின் மேல் அதிகாரியாக நடித்திருக்கும் தயாரிப்பாளர் ஜே.எஸ்.பி.சதிஷ் -ஷூக்கு இன்னும் கொஞ்சம் சீன்கள் வைத்திருக்கலாம்

யோகி பாபு வேஸ்ட். ஜெகன், சுப்புராஜ், நாகினீடு ஆகியோர் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

ராமலிங்கத்தின் ஒளிப்பதிவு, இசையமைப்பாளர் கணேஷ் ராகவேந்திராவின் பாடல்கள், சிமோன் கிங்கின் பின்னணி இசை. அனைத்தும் படத்திற்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

மொத்தத்தில் பலருக்கு தெரிந்த கதையாக இருந்தாலும், அதை கொஞ்சம் சுவையான திரைக்கதை யுடன் வழங்கியிருக்கும் இந்த ‘அசுரகுரு’ சிவாஜி குடும்ப ரசிகர்களுக்கு சிறப்பாக இருக்கும்.

மார்க் 3 / 5

error: Content is protected !!