March 31, 2023

மங்களங்களை தந்து வாழ்வை பிரகாசிக்கச் செய்யும் கார்த்திகை தீப விழா மற்றும் கார்த்திகை சோமவார விழா!

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை  கோவிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா இந்த ஆண்டு வரும்  டிசம்பர் 2ஆம் தேதி பௌர்ணமி அன்று கொண்டாடப்படவிருக்கின்றது. அன்று நாம் ஏற்றுகின்ற தீபம் அஞ்ஞானம் என்னும் இருள் நீக்கி மெய்ஞானம் என்னும் ஒளியைப் பெற்றுத் தரும் மற்றும்  சிவனை வழிபட்டு நாம் ஏற்றும் அந்த தீபத்தில் இருந்து வெளி வரும் ஒளியானது ஞானோதயம் , விழிப்புணர்வு மற்றும் முக்திக்கான அடையாளக் குறியீடுகள் என ஞானிகள் கூறியுள்ளனர்.  இதுவே கார்த்திகை தீபத்தின் சிறப்பு ஆகும்.

சந்திரனுக்கு சிறப்பிடம் தந்து,  தன் தலையிலே சூடி சந்திரசேகர்  என்ற பெயரையும் கொண்ட சிவபெருமானுக்கு அனைத்து சோமவாரங்களும்  உகந்தது என்றாலும்  கார்த்திகை சோமவாரங்கள்  தனிச்சிறப்பு பெறுகின்றன.

கார்த்திகை தீபம் மற்றும் கார்த்திகை சோமவாரங்கள்  இரண்டையும் முன்னிட்டு உங்களின் நல்வாழ்விற்காக  AstroVed கீழ்கண்ட   சிறப்பு பூஜைகள் நடத்த உள்ளது. பங்கு கொண்டு பலனடையுங்கள்

AstroVed நடத்தும் சிறப்பு பூஜைகள் :1. கார்த்திகை தீபம் 

திருவண்ணாமலையில் அஷ்ட லிங்கங்களுக்கான  அர்ச்சனை:

மலையே சிவமாகத் திகழும் உன்னத திருத்தலம் திருவண்ணாமலை. எட்டு திசைகளில் இருந்தும் நம்மைக் காப்பாற்றி அருள்புரிவதற்காகவே இறைவன் எட்டு லிங்கத் திருமேனிகளாகத்  திருக்காட்சி தருகிறார். சிறப்பு வாய்ந்த இந்த அஷ்ட லிங்கங்களுக்கு கார்த்திகை திருநாளில் அர்ச்சனை செய்வதன் மூலம் வாழ்விற்கு தேவையான அனைத்து ஆசிகளையும்  பெறலாம் என்று கோவிலின் வரலாறு கூறுகின்றது.   வெவ்வேறு லிங்க பூஜைகளால் கிடைக்கும் வெவ்வேறு ஆசிகளை விரிவாக எங்கள் இணைய தளத்தில் நீங்கள்  காணலாம்.

அன்னதானம் :

தானங்களில் சிறந்தது அன்னதானம் என்று வேதம் கூறுகின்றது. கடவுளின் அருளைப் பெற எளிதான வழியும் அதுவே.  அறியாமை என்னும் இருள் நீக்கி ஒளி கிடைக்கச் செய்யும் நாளே கார்த்திகை தீபத்திருநாள். அன்றைய நாளில் ஏழைகளுக்கும் தேவைப்படுவோருக்கும் உணவு அளிப்பதன் மூலம் உங்கள் மனதிற்கும் ஆன்மாவிற்கும் தெய்வீக ஒளியின் பிரகாசம் கிட்டும்.

அஷ்ட  லிங்கக்  கோவில்களில் விளக்கேற்றுதல்  

தீபத் திருநாளாம் கார்த்திகை நன்நாளில் உங்கள் சார்பாக சிவன் கோவில்களில் AstroVed  விளக்குகளை ஏற்ற ஏற்பாடு செய்துள்ளது. இந்த தீபங்கள் ஏற்றுவதன் மூலம் நீங்கள்  வாழ்வில்  செழிப்பு மற்றும் நல்லெண்ணம் ஆகியவற்றைப் பெறலாம் என்பது ஐதீகம்.

AstroVed  நடத்தும் சிறப்பு பூஜைகள் :2. கார்த்திகை சோமவாரம்

தம்பதியரிடையே ஒற்றுமை, தொழில் மற்றும் பணியிடங்களில் கூட்டாளிகளுடன் நட்புறவு, தடைகளை நீக்கி அனைத்து செல்வங்கள் மற்றும் நல்வாழ்வு  அளிக்கும்  அர்தநாரீஸ்வர ஹோமம் நேரலை – நவம்பர் 20 , 2017- மாலை  4.30 மணி

பாவங்களை நீக்கி பேரின்பம் அளிக்கும் பாஞ்சஜன்ய ஹோமம் – நேரலை – டிசம்பர் 11, 2017- மாலை  4.30 மணி

மன அமைதி , குடும்ப நலம், திருமணம், வம்ச விருத்தி, மற்றும்  கிரக தோஷங்கள், நோய், முன்வினை பாவங்கள், நோய்கள் ஆகியவற்றின் தாக்கத்தை குறைக்க  4  கோவில்களில்   4 திங்கட்கிழமைகளில் அர்ச்சனை

4 திங்கட்கிழமைகள் சிவனின் ஆசிகளைப் பெற்றுத்தரும்  108 சங்காபிஷேகம்

உடல்,மனம் மற்றும் ஆன்மா சுத்தியடைய, விருப்பங்கள் நிறைவேற பாவங்கள் கரைய ருத்ரம் சமக்கம் பாராயணம்– முதல் மற்றும் கடைசி திங்கட்கிழமை

முன்வினை பாவங்களை கரைக்கும் ருத்ர த்ரிஷதி அர்ச்சனை – முதல் மற்றும் கடைசி திங்கட்கிழமை

 மேலும் விவரங்களுக்கு:

எங்களது இணையதள முகவரி: www.astroved.com

தொலைபேசி தொடர்புக்கு:

+91 9677391108, +91 9677391109, +91-44-43419898 (20 Lines), Toll Free (India Only) 1800 102 9098

மின்னஞ்சல் : support@astroved.com