ஐ.டி.பி.ஐ பேங்க் -கில் அசிஸ்டெண்ட் மேனேஜர் போஸ்ட் ரெடி!

ஐ.டி.பி.ஐ., எனப்படும் இண்டஸ்ட்ரியல் டெவலப்மென்ட் பேங்க் ஆப் இந்தியா. பொதுத்துறை நிறுவனமான இந்த வங்கியில் அசிஸ்டென்ட் மேனேஜர் பிரிவில் 500 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. தவிர ஒப்பந்த அடிப்படையில் எக்சிக்யூடிவ் பிரிவில் 300 இடங்களும் காலியாக உள்ளன.

வயது: அசிஸ்டென்ட் மேனேஜர் பதவிக்கான விண்ணப்பதாரர்கள் 21 முதல் 28 வயதுக்குள் இருக்க வேண்டும். அதாவது 2.3.1991க்கு பின்னரும் 1.3.1998க்கு முன்னரும் பிறந்தவராக இருக்க வேண்டும்.
எக்சிக்யூடிவ் பதவிக்கான விண்ணப்பதாரர்கள் 20 முதல் 25 வயது உடையவர்களாக இருக்க வேண்டும். அதாவது 2.3.1994க்கு பின்னரும் 1.3.1991க்கு முன்னரும் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பைக் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.700. எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள் ரூ.150/- மட்டும் செலுத்தினால் போதுமானது.

விண்ணப்பிக்க:
 ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள் : 2019 ஏப்., 15.

விபரங்களுக்கு
ஆந்தை வேலைவாய்ப்பு