நம்ம இந்தியன் எலெக்‌ஷன் கமிஷனில் அசிஸ்டென்ட் டைரக்டர் ஜாப் வேணுமா?

நம்ம இந்தியன் எலெக்‌ஷன் கமிஷனில் அசிஸ்டென்ட் டைரக்டர் ஜாப் வேணுமா?

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமை பெற்றது இந்தியா. நமது ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பது தேர்தல் ஆணையம். தேர்தல் மூலம் மக்களாட்சியை நிலைநிறுத்துவதில் தேர்தல் ஆணையம் தலையாய பங்கு வகிக்கிறது. பெருமைக்கு உரிய தேர்தல் ஆணையத்தில் தற்சமயம் காலியாக உள்ள அசிஸ்டென்ட் டைரக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ec job may 14 a

கல்வித் தகுதி : விண்ணப்பதாரர்கள் பி.இ., அல்லது பி.டெக்., அல்லது எம்.சி.ஏ., போன்ற படிப்புக்கு இணையான படிப்பினை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும். சாப்ட்வேர் இன்ஜினியரிங், டி.பி.எம்.எஸ்., நெட்வொர்கிங், நெட்வொர்க் செக்யூரிட்டி ஆகிய பிரிவுகளில் சிறப்புத் தகுதிகள் தேவைப்படும்.
அனுபவம்: 2 முதல் 6 ஆண்டுகள் பணியனுபவம் தேவைப்படும்.

சம்பளம்: மாதத்திற்கு ரூ.15,600 முதல் 39,100 வரை இருக்கும்.

தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல் போன்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

The Secretary to the Government of India,

Department Of Personnel & Training (Dopt),

North Block,

New Delhi.

விண்ணப்பிக்க இறுதி நாள் 2017 மே 26.

மேலும் விபரங்களுக்கு: ஆந்தை வேலைவாய்ப்பு

Related Posts

error: Content is protected !!