நபார்டு வங்கியில் உதவி மேலாளர் பணி!

நேஷனல் பேங்க் பார் அக்ரிகல்சர் அண்டு ரூரல் டெவலப்மென்ட் பாங்க் எனப்படும் நபார்டு வங்கி, இந்தியா முழுவதும் உள்ள கிராமப்புற வங்கிகளின் கட்டுப்பாட்டு அமைப்பாக திகழ்கிறது. இதன் தலைமையகம் மும்பை. இந்த பெருமைமிக்க வங்கியின் சார்பில் ரூரல் டெவலப்மென்ட் பேங்கிங் சர்வீஸ் (ஆர்.டி.பி.எஸ்.) கிரேடு ஏ பிரிவில் 91 இடங்கள் மற்றும் கிரேடு பிபிரிவில் 17 இடங்கள் என மொத்தம் 108 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு: கிரேடு ஏ பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 2017 ஜூன் 1 அடிப்படையில் 21 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும். கிரேடு ஏ பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 2017 ஜூன் 1 அடிப்படையில் 21 – 35 வயதுக்குள் இருக்க வேண்டும். அதிகபட்ச வயதில் ஓ.பி.சி., பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு ஐந்து ஆண்டுகளும் சலுகை உள்ளது.

கல்வித் தகுதி: கிரேடு ஏ பிரிவில் அக்ரிகல்சர், பொருளாதாரம், ஹார்டிகல்சர், அனிமல் ஹஸ்பன்ட்ரி, மீன்வளம், உணவு தொழில்நுட்பம், வனம், சுற்றுச்சூழல், நீர்வளம், சி.ஏ, உள்ளிட்ட பல பிரிவுகள் உள்ளதால், அந்தந்த பிரிவுக்கேற்ற கல்வித்தகுதி அவசியம். கிரேடு பி பிரிவுக்கு ஏதாவது ஒரு பட்டப்படிப்பு மற்றும் விவசாய பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: இரண்டு பதவிகளுக்கு இரண்டு கட்ட எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையில் பதிவு செய்ய வேண்டும். முழுமையான தகவல்களை இணையதளத்தில் அறிந்து அதன் பின்னர் விண்ணப்பிக்கவும். கிரேடு ஏ பிரிவுக்கு 800 ரூபாய், கிரேடு பி பிரிவுக்கு 900 ரூபாய் விண்ணப்பக்கட்டணமாக செலுத்த வேண்டும்.

கடைசிநாள் : 2017 ஜூலை 10

விபரங்களுக்கு : ஆந்தை வேலைவாய்ப்பு