லக்கிம்பூர் கேரி வன்முறை : மத்திய அமைச்சர் மகன் அசிஷ் கைது!
நாட்டை உலுக்கிய லக்கிம்பூர் கேரி வன்முறைகள் மற்றும் காரை ஏற்றி விவசாயிகள் 4 பேரைக் கொன்றது தொடர்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் அசிஷ் மிஸ்ரா 11 மணி நேர விசாரணைக்குப் பிறகு சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் அவரை கைது செய்யவில்லை. அதற்கு பதிலாக விசாரணையின்போது அசி ஷ் மிஸ்ராஒத்துழைக்கவில்லை .அவர் சில தகவல்களை தெரிவிக்க மறுத்துவிட்டார். சில கேள்விகளுக்கு நழுவும் பாணியில் பதிலளிக்கிறார் என்ற புதிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவரை கைது செய்திருப்பதாக விசாரணைக் குழுவின் தலைவரும் உத்தரப்பிரதேச மாநில டிஐஜி உபேந்திரா அகர்வால் தெரிவித்தார். அசிஷ் மிஸ்ராவை ஞாயிற்றுக்கிழமை அன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்வோம், நீதிமன்றத்தில் ஆஜர் செய்த பிறகு அவரை காவலில் வைத்து விசாரணை நடத்துவதற்கான உத்தரவை நீதிபதியிடம் இருந்து பெறுவோம். அதன் பிறகு தொடர் விசாரணை நடத்தப்படும் என்றும் உத்தரப் பிரதேச மாநில டிஐஜி உபேந்திரா அகர்வால் தெரிவித்தார்.
அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி லக்கிம்பூர் கேரி மாவட்டத்திலுள்ள டிகுனியா கிராமத்தில் சாலையில் வந்து கொண்டிருந்த விவசாயிகள் மீது காரை ஏற்றி 4 பேரை கொன்றதாக நேரில் பார்த்த சாட்சியங்களின் தகவல், சம்பவத்தை நேரில் மொபைலில் எடுத்த வீடியோ ஆகியவற்றில் அடிப்படையில் அசிஷ் மிஸ்ரா மீது முதல் தகவல் அறிக்கையில் கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கையின் பேரில் விசாரணை நடத்துவதற்காக அக்டோபர் மாதம் 8ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று ஆஜராகும்படி லக்கிம்பூர் கேரி சிறப்பு விசாரணை குழு தலைவர் டிஐஜி உபேந்திரா அகர்வால் நோட்டீஸ் அனுப்பினார்.
ஆனால் அவர் குறிப்பிட்ட வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு அஜீஸ் மிஸ்ரா வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை. அதைத் தொடர்ந்து இரண்டாவது விசாரணை நோட்டீஸ் மத்திய உள்துறை இணை அமைச்சர் அவரின் வீட்டு காம்பவுண்ட் சுவரில் ஒட்டப்பட்டது.அதில் அசிஷ் மிஸ்ரா சனிக்கிழமை அன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
🦉உத்தரப்பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் போராட்டத்தில் காரை விட்டு ஏற்றியது தொடர்பான வழக்கில் மத்திய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷ் மிஸ்ரா கைது#Lakhimpur_Kheri pic.twitter.com/Rm842Ez7mi
— Àanthai Répørter (MASKUpTN) 🦉 (@aanthaireporter) October 10, 2021
அதன்படி நேற்று சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு அஜீஸ் மிஸ்ரா விசாரணைக்கு ஆஜரானார்..ஆனால் தலை வாசல் வழியாக அலுவலகத்தில்நுழையாமல் கொல்லைப்புற வழியாக அசிஷ் மிஸ்ரா விசாரணை அலுவலகத்திற்குள் நுழைந்தார். அங்கு அவரிடம் பதினோரு மணி நேரம் தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் அவரை கைது செய்வது என்று இறுதியில் முடிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.