October 22, 2021

கடவுள் இருக்கான் குமாரு படத்துக்கு எந்தத் தடையும் இல்லை.. திட்டமிட்டபடி படம் வெளியாகும்! – டி சிவா

கடவுள் இருக்கான் குமாரு படத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக பொய்யான தகவலை சிலர் வேண்டும் என்றே பரப்பியுள்ளதாக தயாரிப்பாளர் டி. சிவா தெரிவித்துள்ளார். அம்மா கிரியேன்ஸ் தயாரிப்பில், ஜி.வி. பிரகாஷ், நிக்கி கல்ராணி, ஆனந்தி நடித்துள்ள கடவுள் இருக்கான் குமாரு படம் வரும் 10ம் தேதி வெளியாகிறது.

ciine kum nov 8a

இந்நிலையில் வேறு ஒரு பட வெளியீட்டின்போது ஏற்பட்ட நஷ்ட விவகாரம் தொடர்பாக இரு வினியோகஸ்தர்களுக்கிடையிலான பிரச்சினையை முன் வைத்து, கடவுள் இருக்கான் குமாரு படத்துக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் படத்தை வெளியிட நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக விநியோகஸ்தர் சிங்காரவேலன் தரப்பினர் செய்திகள் பரப்பி வருகின்றனர். இது முழுக்க முழுக்க பொய்ச் செய்தி என தயாரிப்பாளர் டி சிவா கூறினார்.

இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் டி. சிவா கூறுகையில், “வழக்கு விசாரணையே நாளைதான் நடைபெற உள்ளது. ஆனால் படத்தை முடக்க சிங்காரவேலன் தரப்பினர் பொய்யான செய்திகளை மீடியாக்கள் மூலம் பரப்புகிறார்கள். அவர்களின் கனவு நனவாகாது… இரு விநியோகஸ்தர்களுக்கான தகராறில் ஒரு தயாரிப்பாளரின் படத்தை முடக்க நினைப்பது எத்தனைப் பெரிய தவறு? திட்டமிட்டபடி நாளை மறுநாள் படம் வெளியாகும்,” என்றார்.