மேலும் 3 மாதங்கள் அவகாசம் கோரி ஆறுமுகசாமி கமிஷன் கடிதம்!

மேலும் 3 மாதங்கள் அவகாசம் கோரி ஆறுமுகசாமி கமிஷன் கடிதம்!

சென்னை அப்போலோ மருத்துவமனை சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் அரசு வழக்கறிஞர்கள் மெத்தனம் காட்டுகின்றனர். தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தில் ஆறுமுகசாமி ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையத்தை அமைக்கப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி அதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்தது.

ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவரது உறவினர்கள், போயஸ்கார்டன் பணியாளர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், இது தொடர்பாக ஜெயலலிதாவின் உறவினர்கள், அமைச்சர்கள்,ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்போலோ மருத்துவர்கள் மற்றும் பலரிடம் ஆறுமுகசாமி ஆணையம் இதுவரை விசாரணை நடத்தியுள்ளது.

இந்நிலையில் ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்குமாறு அப்போலோ மருத்துவமனை தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு விசாரணையின்போது, ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

ஏற்கனவே 4 முறை அவகாசம் நீடிக்கப்பட்ட நிலையில் அதில், வரும் 24ம் தேதியுடன் அவகாசம் முடிவடையும் நிலையில், தமிழக அரசுக்கு வரும் 24 ஆம் தேதியுடன் முடியவுள்ள கால அவகாசத்தை மேலும் 3 மாதங்கள் நீட்டிக்க வேண்டுமென கோரி மீண்டும் ஒரு நீண்ட கடிதம் ஆறுமுகசாமி ஆணையம் எழுதியுள்ளது.

error: Content is protected !!