எங்களை கேனையன்களா ட்ரீட் பண்றீங்களா? – மத்திய அரசிடம் சுப்ரீம் கோர்ட் கேள்வி!

எங்களை கேனையன்களா ட்ரீட் பண்றீங்களா? – மத்திய அரசிடம் சுப்ரீம் கோர்ட் கேள்வி!

நாட்டு மக்கள் மிகவும் நம்பும் தேர்தல் ஆணையர் நியமனத்தில் சீர்திருத்தங்கள் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதி கே.எம் ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் நேற்று முதல் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தொடக்கம் முதலே ஒன்றிய அரசுக்கு நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பி வருகின்றனர். முதல் நாளில் வழக்கு விசாரணைக்கு வந்த போது தலைமை தேர்தல் ஆணையர் நியமனத்திற்கும், தேர்தல் ஆணையர் நியமனத்திற்கும் எந்த மாதிரியான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதில் பின்பற்றப்படும் நடைமுறைகள் என்ன? என கேள்வி எழுப்பினார்கள். மேலும் கடந்த 7 ஆண்டுகளில் 8 தலைமை தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டது எப்படி என்றும் அவர்கள் நீண்ட காலம் பதவியில் இருக்கக் கூடாது என்பதை தெரிந்தே ஒன்றிய அரசு குறுகிய கால அடிப்படையில் அவரை நியமிக்கிறதா? எனவும் கேள்வி எழுப்பினர்.

குறிப்பாக இந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, தேர்தல் ஆணையராக பஞ்சாப்பை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயல் நியமிக்கப்பட்டது சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அவரது நியமனம் தொடர்பாக நேற்று பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பியிருந்தனர். குறிப்பாக ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த அருண் கோயல் விருப்ப ஓய்வு பெற்ற சில தினங்களில் அவர் எப்படி தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். அதற்கு எந்த மாதிரியான நடைமுறைகள் பின்பற்றப்பட்டன என்பது தொடர்பான கோப்புகள் அனைத்தையும் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் கேட்டார்கள்.

இதற்கு அரசு தரப்பில் அட்டார்னி ஜெனரல் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். தேர்தல் ஆணையம் என்பது தனிப்பட்ட அரசியல் அமைப்பின் கீழ் செயல்படும் அமைப்பு என்றும், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் கூறியிருந்தார். ஆனால் அதனை நிராகரித்த நீதிபதிகள் அவர் நியமனம் தொடர்பாக கோப்புகளை கண்டிப்பாக தங்களிடம் தாக்கல் செய்ய வேண்டும் என கூறியிருந்தார்கள். அதன் அடிப்படையில் இன்று கோப்புகள் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்றைய விசாரணையின் போது நீதிபதிகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்கள். குறிப்பாக தேர்தல் ஆணையர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்ட 5 பேரில் அருண் கோயல் தான் மிகவும் இளையவர், அவரை எந்த அடிப்படையில் நீங்கள் தேர்வு செய்தீர்கள்? 18ஆம் தேதி வழக்கை விசாரிக்க இருந்த நிலையில், அதே நாளில் அருண் கோயல் பெயரை பிரதமர் பரிந்துரைத்த காரணம் என்ன? மே 15 முதல் நவம்பர் 18 வரை ஆணையர் பதவி காலியாக இருந்த நிலையில் அதுவரை என்ன செய்தீர்கள் என்று கேள்வி எழுப்பினர். மேலும் விருப்ப ஒய்வு பெற்ற உடனே தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டது எப்படி?. ஏனென்றால் வழக்கமாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் தான் தேர்தல் ஆணையராக நியமிக்கப்படுவார்கள். ஆனால் அருண் கோயல் விவகாரத்தில் விருப்ப ஓய்வு பெற்ற உடனே அவர் நியமிக்கப்பட்டது எப்படி என்று கேள்வி எழுப்பினார்கள். மேலும் விமர்சனத்தின் போது கடுமையான வார்த்தைகளையும் நீதிபதிகள் பயன்படுத்தினர்.

அதாவது பூவா தலையா போட்டால், இரண்டு சைடும் ஒன்றிய அரசே ஜெயிப்பது போல போடுவிங்களா? என்றும் கேள்வி எழுப்பியது. ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞருக்கும், நீதிபதிகளுக்கும் இடையே காரசார வாக்குவாதம் நடந்தது. இதனைத்தொடர்ந்து தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்தது .சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு. மேலும் வழக்கு குறித்து ஒன்றிய அரசு, மனுதாரர்கள் 5 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!