June 25, 2021

ஸ்விப் மிஷினுக்கு நீங்க மாறியாச்சா?

நவம்பர் 8 தேதிக்கு பிறகு சூழலை உள்வாங்கிக் கொண்டு மின்னணு வர்த்தகத்துக்கு மாற   ஸ்விப் மிஷின் விண்ணப்பித்தவர்களுக்கு இன்னும் இயந்திரங்கள் கிடைக்கவில்லை. ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரங்கள்படி இந்தியாவில் 76 கோடி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன ஆனால் தற்போது 15 லட்சம் வர்த்தக நிறுவனங்கள் மட்டுமே  ஸ்விப் வசதியோடு உள்ளன. மேலும் 20 லட்சம் இயந்திரங்களுக்கான தேவை உள்ளது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பாயிண்ட் ஆப் சேல் இயந்திரங்களும், ஸ்விப்  இயந்திரங்களும் பற்றாக்குறையாக உள்ளன என்கிறனர் இந்த துறை சார்ந்தவர்கள்.

swipe dec 28

வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு  ஸ்விப்ங் இயந்திர வசதியை அளிக்கின்றன. தேவை இருக்கும் வர்த்தகர்கள் எங்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்று முன்னரே விளக்கியிருந்தோம். தற்போது கேஒய்சி நடைமுறைகளுக்குப் பிறகு இயந்திரம் ஒதுக்குவார்கள். வங்கிகள் இதற்கென ஏஜென்சிகள் அமர்த்தியுள்ளன. இந்த ஏஜென்சிகள் மூலம் இயந்திரங்கள் வாடிக்கையாளகளுக்கு வந்து சேரும். இயந்திரம் தொடர்பான சேவைகளை ஏஜென்சிகளே மேற்கொள்வார்கள். வங்கிக் கணக்கு தொடர்பான விவரங்களுக்கு வாடிக்கையாளர் சேவை மைய உதவி கிடைக்கும்.

வங்கிகள் அளிக்கும்  ஸ்விப் இயந்திரங்கள் தவிர எம்ஸ்வைப், ஐபிஎம், பேயுமணி, மில்லினியம், டிவிஎஸ் எலெக்ட்ரானிக்ஸ் போன்ற பல நிறுவனங்களும் பாயிண்ட் ஆப் சேல்ஸ்  ஸ்விப் இயந்திர வசதிகளை அளிக்கின்றன. இந்த   ஸ்விப்  இயந்திரங்கள் இண்டர்நெட் டேட்டா இணைப்பின் வழியாகவும், ஜிபிஆர்எஸ் இணைப் பின் மூலமும் இயங்குகின்றன. இயந்திரத்தின் விலை, நெட்வொர்க் வசதியைப் பொறுத்து இவற்றை தேர்ந்தெடுக்கலாம். இரண்டு வகையிலும் வாடிக்கையாளரிடமிருந்து பெற்ற தொகைகள் அடுத்த நாள் வங்கிக்கணக்கில் சேர்ந்துவிடும்.

எவ்வளவு விலை

பாயிண்ட் ஆப் சேல்ஸ் இயந்திரங்களில் பிரிண்ட் வசதி கொண்ட இயந்திரம் சுமார் ரூ.30,000 வரையிலும் விற்கப்படுகிறது. பிரிண்ட் வசதி இல்லாத, எஸ்எம்எஸ் வழியாக பரிமாற்றம் செய்யும் சிறிய இயந்திரங்கள் ரூ.2000 த் துக்கும் கிடைக்கும். வங்கியின் ஸ்வைப்பிங் இயந்திரம் என்றால் மாதாந்திர வாடகை ரூ.300 முதல் 600 வரையிலும் வங்கிகளுக்கு அளிக்க வேண்டும். இந்த கட்டணம் வங்கிகளுக்கு ஏற்ப வேறுபடுகிறது.

பரிமாற்றக் கட்டணங்கள்

பொதுவாக டெபிட் கார்டு , கிரெடிட் கார்டு   ஸ்விப் செய்கிறபோது 1 முதல் 2.5 சதவீதம் வரையில் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பிறகு டிசம்பர் 31 ம் தேதிவரை இவற்றுக்கான சேவைக் கட்டணத்திலிருந்து மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது. இதற்கிடையே பாயிண்ட் ஆப் சேல்ஸ் இயந் திரங்களுக்கான உற்பத்தி வரியிலிருந்து 12.5% விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இயந்திரங்களில் விலை குறையும் என அரசு குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் இறக்குமதி செய்யப்படும் பாயிண்ட் ஆப் சேல்ஸ் இயந்திரங்களுக்கு பிஐஎஸ் முத்திரை கட்டணத்திலிருந்து விலக்கு அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

என்ன இழப்புகள்

பொதுவாக பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு முன், பணத்தின் மதிப்பு வாடிக்கையாளர், வர்த்தகர்கள் இருவருக்குமே குறையாமல் இருந்தது. அதாவது ரூ.500 மதிப்பானது பத்து நபர்கள் பரிமாற்றத்துக்கு பிறகும் 500 ரூபாய் மதிப்பைக் கொண்டிருந்தது. ஆனால் தற்போது மின்னணு பரிவர்த்தனைகளில் ரூ.500 பரிவர்த்தனை செய்தால் குறைந்தபட்சம் 2% சேவைக் கட்டணம் என்றாலும் 10 ரூபாய் செலுத்த வேண்டும். வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை மின்னணு பரிமாற்றம் செய்தால் கட்டணம், கார்டு வழியாக செலுத்துகிறபோதும் இழப்பு ஏற்படுகிறது என்பது அவர்களது வாதமாக உள்ளது

தற்போதைய சூழ்நிலையில் அரசின் சலுகைக் காலத்துக்கு பிறகு மின்னணு பரிவர்த்தனைகளுக்கான சேவைக் கட்டணம், பரிமாற்றக் கட்டணம் உள்ளிட்டவை வாடிக்கையாளர்களுக்கு சிறு இழப்பாக இருக்கும். வர்த்தக நடவடிக்கைகள் உயரும் சூழ்நிலையில் பரிவர்த் தனை கட்டணங்களை மத்திய அரசு குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். எது எப்படியோ 2017 ஆம் ஆண்டு நீங்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாற வேண்டியது காலத்தின் கட்டாயம்.