அரண்மனை 3 விமர்சனம்!

அரண்மனை 3 விமர்சனம்!

ம்புலிமாமா என்றொரு புகழ் பெற்ற பல மொழிகளில் வந்த இதழ் ஒன்று அப்போது இருந்தது. வந்தவுடன் கடைகளில் கிடைக்காத நிலை எல்லாம் இருந்தது. உடனே விற்று தீர்ந்து விடும். மேலை நாட்டு சாகசக்கதைகளுக்காக நிறைய காமிக்ஸ் புத்தகங்களில் படக்கதைகளாக வரும். இது போல புத்தகங்களும் கடைகளில் விற்று தீர்ந்து கொண்டே இருக்கும். அந்த வாரம் வந்து விட்டால் அம்புலி மாமா, காமிக்ஸ் புத்தகங்களை வாங்கி கேட்கும் குழந்தைகள் இருந்தனர். குறிப்பாக விக்ரமாதித்தனும் வேதாளம் கதையில் சிறுவர்கள் எதிர்பார்க்கும் சஸ்பென்ஸ், த்ரில், நகைச்சுவை, என எல்லாமே இருந்தன ஒவ்வொரு முறை வேதாளம் சொல்லும் கதைகளும் இறுதியில் அதுபோடும் கதை தொடர்பான புதிர்களும் சிறுவர்களின் அறிவை தூண்டின, கிட்டத்தட்ட அந்த உணர்வைப் பார்ப்போரிடம் கடத்த முயலும் சினிமாதான் ‘அரண்மனை 3’.அதிலும் பேய் கான்செப்டை வைத்து வழக்கம் போல் காமெடி படமாக எடுக்க நினைத்து மிரட்டி இருக்கிறார்கள்.

இந்த மூன்றாம் அரண்மனையின் கதையைச் சொல்வதானால் டைட்டில் ரோலில் இருக்கும் அரண்மனை ஒன்றின் ராஜா வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வந்த ராணிக்கு ஒரு குழந்தை பிறக்கிறது. ஆனால் பிறந்த குழந்தை தன்னிது இல்லை என்று தெரிந்து குழந்தையையும், ராணியையும் கொடூரமாகக் கொலை செய்து விடும் ராஜாவையும் அவர் அடியாட்களையும் பழிவாங்குவதுதான்.. ஆனால் இந்த பேயை அழிக்க கொஞ்சம் கிராபிக்ஸ் காட்சி எல்லாம் போட்டு அட்ராக்ட் செய்திருக்கிறார்கள் என்பதுதான் ஹைலைட்

முதல் இரண்டு படங்களோடு ஒப்பிடும் போது இந்த மூன்றாம் பாகத்தில் எக்ஸ்ட்ரா காமெடியன்கள், இரண்டு பெரிய பேய்கள், பிரமாண்டமான செட்டுகள், பயங்கரமான கிராபிக்ஸ் கிளைமாக்ஸ் எல்லாம் வைத்திருக்கிறார் சுந்தர் சி. த படத்தை பார்ப்பவர்கள் கண்டிப்பாக மிரண்டு போய் விடுவார்கள் என்றும் இதுதான் காமெடி எனவும் நம்பி வழங்கி இருக்கிறார்கள்.. ஹீரோ ஆர்யா(வாம்) என் ஆர்ம்ஸை தொட்டுப் பாரேன் என்றபடி சில சீன்களில் வருகிறார்.. போய் விடுகிறார்.. மொழு மொழுவென்று அழகான ராஷி கன்னா-வை விட ஆண்ட்ரியாவுக்கே நிறைய சீன்கள். ஆனால் பல இடங்களில் தொண்டை நரம்பு புடைத்தப்படியே ஆக்ட் செய்வதால் பெயில் மார்க் வாங்கி விடுகிறார்.யோகி பாபு வழக்கம் போன்று சக நடிகரான மனோபாலாவை அசிங்கப்படுத்திக் கொண்டே இருக்கிறார். சுந்தர் சி. சந்திரமுகி ரஜினி பாணியில் பேயை எதிர்கொள்வது ரசிக்கும்படியே இருக்கிறது. யுகே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவில் குளிர்ச்சியும், நிறைவும் ஏற்படுகிறது. சத்யாவின் பின்னணி இசை பேய் படங்களுக்கு தேவையானதைக் கொடுத்திருக்கிறது.

மொத்தத்தில் ஒவ்வொரு காட்சியும் ஊகித்தப்படியே போவதால் படம் முடியும்போது பெரிதாக ஆனந்தமோ அதே சமயம் ஏமாற்றமோ இல்லை. அது தான் சுந்தர் சி.யின் வெற்றி. ஆனால் தியேட்டரில் இந்தப் படத்தைப் பார்க்கும் குழந்தை ஐ..என்று கைக் கொட்டி ஜாலியாக ரசிக்கிறது, பெரியவர்கள் எல்லாவற்றையும் மறந்து சிரிக்கிறார்கள். இதுதானே சினிமா

மார்க் 3.25 /5

Related Posts

error: Content is protected !!