இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை விவரம் அறியாத சிறுவர்களின் போராட்டம் என்று கேலி செய்து கொண்டிருந்த காங்கிரசுத் தலைவர்களை வாய்மூட வைத்தவர்தான் விருகம்பாக்கம் அரங்கநாதன். சென்னை வாசிகளுக்கு கொஞ்சம் அடையாள சொல்ல வேண்டுமென்றால் சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்கப்பாதை தெரிந்திருக்கும். அந்த அரங்கநாதன் யார் என்று எத்தனி பேருக்கு தெரியும்?
அந்த அரங்கநாதன் ஒரு மாணவர் அல்ல. மத்திய அரசின் பி எஸ் என் எல் துறையில் பணியாற்றியவர். சின்ன வயசிலேயே வீரக்கலைகளில் ஆர்வம் மிக்கவர். மான்கொம்பு சுழற்றுதல், சிலம்பாட்டம், சுருள் கத்தி வீசல் போன்ற வீர விளையாட்டுகளில் வல்லவராகத் திகழ்ந்தார். விருகம்பாக்கத்து இளைஞர்களால் ‘குரு’ என்று அழைக்கப்பட்டு வந்த அரங்கநாதன் விருகம்பாக்கத்திலேயே உடற்பயிற்சிக் கூடம் அமைச்சு அங்குள்ள இளைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து சென்னையில் நடைபெற்று வந்த விளையாட்டுப் போட்டிகளுக்கு அனுப்பி வைப்பார். அது போக அந்த இளைஞர்களுக்கு தமிழுணர்வூட்டும் ஏடுகளை படிக்கச் சொல்லியும் கடமையாற்றினார்.
இதுக்கிடையிலே 60 களின் மத்தியில், தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட் டம், இந்திய அரசை அசைத்துப்பார்த்த ஒன்று. இந்தியை புகுத்த முயற்சித்த மத்திய காங்கிரஸ் அரசின் முயற்சியால், தமிழகத்தில் பெரும் புரட்சி வெடித்தது. மாணவர்கள், தமிழார்வலர்கள் அரசியல்கட்சிகள் ஒன்று திரண்டு இதை எதிர்த்தனர். அதுவரை வழக்கமான பேராட்டமாக மட்டும் தலைநகரை கிடுகிடுக்கச்செய்த இந்தி எதிர்ப்புப்போராட்டம், 1965 ஜனவரி 26-ம்தேதி இந்தியாவை உலுக்கிப்போட்டது. இந்தி எதிர்ப்புப்போராட்டத்தில் முதல் களப்பலியான சிவலிங்கம் தீயிட்டு மரணித்த நாள் அன்றுதான்.
1965 ஜனவரி 26- ம் தேதி, குடியரசு தினம் முதல் இந்தி ஆட்சி மொழி ஆகும் என்று மத்திய அரசு அறிவித்ததால், அன்றைய தினத்தை துக்க நாளாகக் கடைப்பிடிக்கப் போவதாக தி.மு.கழகம் அறிவித்திருந்தது. அன்றைய தினம் தமிழர் ஒவ்வொருவர் வீடுகளிலும் கறுப்புக்கொடி ஏற்றப்படும் என்றும், மாலையில் துக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்றும் திமுக தலைவர் அண்ணா அறிவித்திருந் தார். அதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அண்ணாவும் மற்ற சில தலைவர்களும் கைது செய்யப்பட்டனர்.
அண்ணாவின் அறிவிப்பாலும், கைது சம்பவங்களாலும் தமிழகத்தில் ஒரு கொந்தளிப்பான சூழல் நிலவியது. இந்நிலையில் கோடம்பாக்கம் விசுவநாதபுரத்தைச் சேர்ந்த சிவலிங்கம் என்ற 24 வயது இளைஞர், இதுபற்றி உணர்ச்சிகரமாக தம் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். “நாளைக்கு இந்தி ஆட்சி மொழி ஆகப்போகிறது. இது துக்க நாள். கறுப்புச்சின்னம் அணியப் போகிறேன்” என்றார் அப்போது.
சென்னை மாநகராட்சியில், சிப்பந்தியாக வேலை பார்த்து வந்த சிவலிங்கம் தீவிர மொழிப்பற்றாளர். வழக்கமாக வீட்டின் திண்ணையில் படுத்துறங்கும் அவரை குடியரசு தினத்துக்கு முதல் நாள் இரவு வழக்கமான இடத்தில் காணாமல் அவரது அண்ணன் திடுக்கிட்டார். அதே நேரம் வீட்டுக்கு எதிரே உள்ள மைதானத்தில் தீப்பிழம்பாய் ஒரு உருவம் எரிந்துகொண்டிருந்தது. ஓடிப்போய் பார்த்தார் அவர். அங்கு உடல் முழுவதும் எரிந்த நிலையில் கிடந்தார் சிவலிங்கம். 2 பெட்ரோல் டின்கள் அருகில் இருந்தன. அவர் இறந்து கிடந்த இடத்தில், “உயிர் தமிழுக்கு; உடல் தீயிக்கு” என்று எழுதப்பட்ட காகிதங்கள் கிடந்தன. அதிர்ந்தது தமிழகம்.
சிவலிங்கத்தின் தியாகம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. எங்குபார்த்தாலும் அவரின் அந்த தியாகம் பற்றியே உருக்கமாக பேசப்பட்டது. இந்த சம்பவத்தால் அதிர்ச்சிக்குள்ளானவர்களில் ஒருவர் சென்னை விருகம்பாத்தை சேர்ந்த அரங்கநாதன். காலையில் தீக்குளித்து இறந்த சிவலிங்கத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய அரங்கநாதன், அன்றிரவு முழுவதும் அதுபற்றியே பார்ப்பவரிடம் எல்லாம் பேசியிருக்கிறார்.
சின்ன வயசில் இருந்தே தமிழ்மொழி மீது தீராப்பற்று கொண்ட அரங்க நாதன் ஜனவரி 27ஆம் நாள் நள்ளிரவு 2மணிக்கு விருகம்பாக்கம் நேசனல் திரையரங்கம் அருகில் ஓர் மாமரத்தின் அடியில் நின்று கொண்டு தனக்குத் தானே தீயிட்டுக் கொண்டார். பொழுது விடிந்தது. அங்கிருந்தவர்கள் கருகிய உடலைக் கண்டனர்.
அவர் உடலின் அருகில் ஒரு அட்டையில் சுற்றபட்டுந்த நிலையில் கடிதங்கள் கிடந்தது. தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் எழுதப்பட்ட கடிதங்கள் அவை. அவற்றின் நகல்களைப் பதிவஞ்சலில் அனுப்பியதற்கான இரசீதுகளும் கைப்பற்றப்பட்டன. அன்று வீரமிக்க இளைஞனை பறிகொடுத்த சோகத்தில் விருகம்பாக்கம் ஆழ்ந்து கிடந்தது.அதில், “இந்தியை கட்டாயப்படுத்த வேண்டாம் என்று எத்தனையோ அறிஞர்கள் எடுத்துச் சொல்லியும், புலவர்கள் விளக்கியும், அரசியல் தலைவர்கள் அறிக்கை விட்டும், கவிஞர்கள் கண்டித்தும், மக்கள் மறுத்து வெறுத்து பேசியும், இந்தி வெறி பிடித்தவர்களே _ இந்திக்கு வால் பிடிப்பவர்களே, எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று சொல்லி விட்டு இந்தியை புகுத்துகிறீர்களே! உங்களுக்கு இதோ நான் தரும் பரிசு! தமிழ் வாழ்க! இந்தி ஒழிக!” என எழுதப்பட்டிருந்திச்சு.அமெரிக்க நியூயார்க் நகரில் கூடிய உலகநாடுகள் அவைக் கூட்டத்தில் சிவலிங்கம், அரங்கநாதன் தீக்குளித்த அதிர்ச்சிப் பின்னணி விவாதிக்கப்பட்டதாக்கும்.
தற்போதுஅரங்கநாதன் பெயர் தாங்கிய சுரங்கப்பாதை சென்னையில் இப்போதும் அவரை நினைவு படுத்தியபடி இருந்தாலும் பல்ருக்கு அறியாதவராகவே இருப்பது சோகம்தான்
அதிமுக பொது செயலாளர் பதவி மற்றும் அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்த வழக்கை…
இந்தியாவில் உள்ள ஊழியர்களின் பி.எப் பணத்தின் மதிப்பும் அதானியால் குறைந்துள்ள அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில்…
இந்திய கிரிக்கெட் அணியின் 2022-2023 ம் ஆண்டிற்கான புதிய வீரர்கள் ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு ஒப்பந்தமானது,…
திமுக தனது தேர்தல் அறிக்கையில் அனைத்து மகளிருக்கும் மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் இந்த…
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. மற்றும் எஸ்.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகளை தயாரித்து விண்ணில் ஏவி வருகிறது. இதன்படி…
கடந்த மூன்று நாட்களாக ராகுல் காந்திக்கு ஆதரவு பெருகிக் கொண்டே வருகிறது. அவர் செய்தது தவறு என்று பாஜக அபிமானிகள்…
This website uses cookies.