March 22, 2023

மலையாளப் படவுலகின் பாரம்பரியமுள்ள தயாரிப்பாளர்- இயக்குநர்.

கொச்சி நகரில் காக்கநாடு என்னுமிடத்தில் ஸ்டுடியோ ஒன்றினை நிர்மாணித்து, அங்கே 3-டி-யில் இந்தியாவின் முதல் முயற்சிக்கு முகம் கொடுத்தவரிந்த அப்பச்சன்.

முன்னதாக மலையாளப் படவுலகில் முதல் சினிமாஸ்கோப் படத்தை எடுத்து, தொடர்ந்து ஏனைய தயாரிப்பாளர்கள் சினிமாஸ்கோப் படமெடுக்கத் தைரியம் கொடுத்தவர் அப்பச்சன். தனது ‘படயோட்டம்’ படத்தில் 70 எம்.எம். ஆறு டிராக் ஸ்டீரியோஃபோனிக் விசேஷ ஒலி அமைப்பை இந்தியா வில் முதல்முறையாக இணைத்து, சினிமா சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் ஆச்சரியக்குறியாக மாறியவர்.

இப்போது பூர்ணிமா பாக்யராஜா இருக்கும் பூர்ணிமா ஜெயராமை ‘மஞ்சில் விரிஞ்ச பூக்கள்’ படம் மூலம் அறிமு கப்படுத்தியவர்.

3 டி முயற்சி குறிச்சும் தன் வளர்ச்சி குறித்து முன்னொரு முறை “எதையும் புதிதாக, பிரமாண்ட மாகச் செய்யவேண்டும் என்கிற எண்ணம் என் தந்தையிடமிருந்து தொற்றிக்கொண்ட ஒன்று. இந்திப் படவுலகில் மூன்று பரிமாணப் படங்களைத் தயாரிக்கப் போவதாக ஒரு செய்தி லேசாகக் காதில் விழுந் தது. ‘நாமே ஏன் இந்தியாவின் 3-டி படத்தை முதலில் தயாரிக்கக் கூடாது’ இந்தக் கேள்வி என்னைப் பல நாட்கள் உறக்கம் இல்லாமல் செய்தது. ஹாலிவுட்டில் 3-டி படம் எடுப்பதில் வல்லுநர்களான டேவிட் ஸ்மையர், தாமஸ் எஸ்ஸோ ஆகியவர்களை காண்டாக்ச் செஞ்சேன்.

ஒத்துழைப்பைத் தர அவர்கள் சம்மதித்தும், மேலும் தாமதிக்காமல் தயாரிப்பில் இறங்கினேன். அந்த படத்தின் பெயர்தான் ‘குட்டிச் சாத்தான்’. அதன் தயாரிப்புச் செலவு, சாதாரண படங்களை எடுக்கும் செலவைப்போல் ஐந்து மடங்கு ஆனது. படம் முதலில் 35 எம்.எம்-மில் எடுக்கப்பட்டு, பின்னர் சினிமா ஸ்கோப்பாக ‘ஃப்ளோ’ செய்யப் பட்டது” என்றார் அப்பச்சன்.

ஒரு வழியாக 1984-ல் மலையாளத்தில் வந்த ‘மை டியர் குட்டிச்சாத்தான்’ ஸ்டேட் விட்டு ஸ்டேட் வந்து நம்மை வசியப்படுத்தியது. சுவர் மீது தலைகீழாய் நடக்கும் குழந்தைகள், அவர் களோடு விளையாடும் சாத்தான் என கதை காமெடியாய் போகும். இந்தியாவின் முதல் 3டி படம் என்பதால் தியேட்டரில் கண்ணாடி போட்டுப் பார்த்து அலறியது ஒரு கூட்டம். விநியோகஸ் தர்களுக்கு தங்க முட்டையிடும் வாத்தாக அப்படம் விளங்கியது.

மேலும் இந்த த்ரி டி படத்தின் மூலம் வந்த அபரிமிதமான வருவாயைக் கொண்டுதான் சென்னை யில் முதன் முதலாம் தீம் பார்க் கான்செப்ட்-டில் கிஷ்கிந்தா -வை உருவாக்கினார் .இது வண்டலூர் தொடர்வண்டி நிலையத்திற்கருகில், அமைதியான சூழ்நிலையில், அனகா புத்தூரிலிருந்து 13 கி.மீ தெற்கே உள்ளது. . இந்த பூங்கா 12 ஏக்கர் பரப்பளவில் கண்ணுக்கினிய தாவரங்கள், நீரூற்றுக்கள் ஆகியவற்றைக் கொண்டு வடிவமைக்கப் பட்டுள்ளது. இந்தப் பூங்காவில் அலை குளங்கள், நீர் சவாரிகள், ரோலர் கோஸ்டர், சிறுவர் தொடர்வண்டி முதலியன உள்ளன குறிப்பாக சுற்றுலா வரும் குழந்தைகளைக் கவரும் பல்வேறு பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த நிலையில் உருவான பார்க்-கின் ஆரம்பக் கால வளர்ச்சியில் என் மாருதி ஃபாஸ்ட் புட் -டும் இணைந்திருந்தது.. ஆம்ம்.. கிஷ்கிந்தா தொடங்கி சுமார் ஒன்றரை ஆண்டுகள் என் மாருதி வேன் மூலம் ஃபுட் சப்ளை நடந்த அப்பச்சன் எனக்கு வாய்ப்பளித்திருந்தார்.

அப்பேர்ப்பட்ட அப்பச்சன் காலமான நாளின்று