இந்திய குடிமக்கள் யார் வேண்டுமானாலும் ஜம்மு-காஷ்மீரில் நிலம் வாங்கலாம்!

இந்திய குடிமக்கள் யார் வேண்டுமானாலும் ஜம்மு-காஷ்மீரில் நிலம் வாங்கலாம்!

மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து பிரிவு 370 மற்றும் 35A பிரிவை நீக்கி உத்தரவிட்டது . அந்த 35A பிரிவின்படி, ’ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இந்தியாவின் மற்ற மாநில மக்கள் நிலம் வாங்க முடியாது. ஆனால், அவர்கள் எங்கும் வாங்கிக்கொள்ளலாம். அதேபோல, காஷ்மீரின் நிரந்தரக் குடியுரிமை பெற்றப் பெண் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவரையோ அல்லது நிரந்தர குடியுரிமை பெறாதவரையோ திருமணம் செய்துகொண்டால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைக்கு நிரந்தர குடியுரிமை கிடைக்காது’ போன்ற சில சிறப்புகள் இருந்து வந்தன.மேலும் அந்தப் பிரிவை மத்திய அரசு நீக்கியதுடன், புதிய நிலச் சட்டத்திருத்த அறிவிப்பையும் வெளியிட்டது. அப்படியான சூழலில் ஜம்மு காஷ்மீரில் இந்திய குடிமக்கள் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம் என்று திங்கட்கிழமையன்று ஜம்முவில் நடைபெற்ற ரியல் எஸ்டேட் உச்சிமாநாட்டில் அறிவிக்கப்பட்டது.

ஜம்மு-காஷ்மீர் ரியல் எஸ்டேட் மாநாட்டை மத்திய அரசும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகங்களும் தேசிய ரியல் எஸ்டேட் டெவலப்மெண்ட் கவுன்சிலும் இணைந்து நடத்தின. துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா குத்து விளக்கு ஏற்றி வைத்து மாநாட்டை துவக்கி வைத்தார். இதை அடுத்து ரியல்எஸ்டேட் உச்சி மாநாட்டை ஒட்டி ஒரு ஆவணம் வெளியிடப்பட்டது அந்த ஆவணத்தில் ஜம்மு-காஷ்மீரில் நிரந்தரமாக வசிப்பவர் மட்டுமே நிலம் வாங்கலாம் என்று ஜம்மு-காஷ்மீர் வளர்ச்சி சட்டத்தில் இருந்தது. இச்சட்டத்தில் உள்ள வாசகம் இப்பொழுது திருத்தப்பட்டுள்ளது. இந்திய குடிமக்கள் யார் வேண்டுமானாலும் விவசாய நிலத்தை ஜம்மு-காஷ்மீரில் வாங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

விவசாய நிலத்தை வாங்குகிறவர்கள் அதனை தொழிலுக்காக வசிப்பிடங்களுக்காக பயன்படுத்த நினைத்தால் பயன்பாட்டை மாற்றிக் கொள்வதற்கும் யூனியன் பிரதேச நிர்வாகம் வகை செய்துள்ளது என்று துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தெரிவித்தார்.

இந்த உச்சிமாநாட்டில் மத்திய அமைச்சர்கள் ஜிதேந்திரா சிங் கலந்து கொண்டார்

உச்சி மாநாட்டில் மொத்தம் 39 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன

இந்த 39ல் 20 ஒப்பந்தங்கள் வீட்டுவசதி திட்டங்களுக்கானவை.

7 ஒப்பந்தங்கள் வர்த்தகரீதியாக நிலத்தை பயன்படுத்துவது தொடர்பானவை

4 ஒப்பந்தங்கள் சுற்றுலாத் துறையைச் சார்ந்த ஹாஸ்பிட்டாலிட்டி அமைப்புக்களை உருவாக்குவதற்கு வகை செய்யக்கூடியவை.

3 என்டர்டெயின்மென்ட், திரைப்படம் தொடர்பானவை.

2 நிதித்துறைத் திட்டங்கள் தொடர்பானவை

இந்த 39 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் மொத்த மதிப்பு ரு.18300 கோடி ஆகும்.

இதுபோன்ற மற்றொரு ரியல் எஸ்டேட் உச்சி மாநாட்டை 2022 ஆண்டு மே மாதம் 22, 23 ஆகிய தேதிகளில் நடத்த தீர்மானித்திருப்பதாகவும் மனோஜ் சின்ஹா கூறினார்.

வீட்டு வசதி திட்டங்களை மேற்கொள்ளும் பில்டர்கள் உள்ளூரில் உள்ள கட்டுமான அமைப்புகளையும் இணைத்து கொண்டு செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

வீட்டு வசதித்துறை மூலம் ஏற்படுகின்ற இந்த வளர்ச்சி காரணமாக உள்ளூர் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும். அதே நேரத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகளும் கிடைக்கும். வர்த்தகத் துறையை பொறுத்தமட்டில் இதன்மூலம் ஏராளமான வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீரில் ஏற்படுகின்ற இந்த மாற்றங்கள் புரட்சிகரமானவை. இந்த மாற்றங்கள் காரணமாக ஜம்மு காஷ்மீரில் பாரம்பர்யமாக வசிக்கும் மக்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படாது என்றூம் மனோஜ் சின்கா தெரிவித்தார்.

Related Posts

error: Content is protected !!