March 25, 2023

ஆண்டனி படத்திற்கு 19 வயது மாணவி சிவாத்மிகா இசை!

இளைய தலைமுறையினரின் புதிய முயற்சிகளை ஊக்குவிக்கும் ஆண்டனி புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்திருக்கும் படம் ‘ஆண்டனி‘ . அறிமுக இயக்குனர் குட்டிக் குமார் தயாரிக்கும் இப்படத்தில் சண்டைக் கோழி புகழ் லால் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இளம் புதுமுகங்களை கொண்டு உருவாகியுள்ள ஆண்டனி படத்தின், ஃபர்ஸ்ட் லுக், சிங்கிள் ட்ராக் மற்றும் டீசரை இயக்குனர் பா. ரஞ்சித்  ட்விட்டரில் வெளியிட்டார்.  சினிமா ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்த ஆண்டனி படத்தின் டீசர் யூ- டியூபில் டிரென்ட் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது.
சகாப்தம் படைத்த வில்லன் நடிகரான  ரகுவரனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக உருவாகி யுள்ளது.  மியூசிக் எமோஷன் திரில்லரான உருவாகியுள்ள ஆண்டனி படத்திற்கு 19 வயது மாணவி சிவாத்மிகா இசையமைத்துள்ளார். தென்னிந்திய சினிமா வரலாற்றில் 19 வயது பெண் ஒரு படத்திற்கு இசையமைத்திருப்பது இதுவே முதன் முறையாகும். தமிழ் சினிமாவை ஆண்டனி அடுத்த நிலை தரத்திற்கு எடுத்து செல்லும் படமாக இருக்கும் என்று படத்தின் இயக்குனர் கூறியுள்ளார்.