சாக்லேட் சாப்பிட்டால் இதயப் பிரச்னை வராது!

சாக்லேட் சாப்பிட்டால் இதயப் பிரச்னை வராது!

சர்வதேச அளவில் குழந்தை முதல் பெரியவர் வரை எல்லோரும் விரும்பிச் சாப்பிடும் சாக்லேட் குறித்து அடிக்கடி ஆய்வு நடப்பது வாடிக்கை. அந்த வகையில் சாக்லேட் சாப்பிட்டால் பற்களில் சொத்தை விழும் என்று குழந்தைகளை பெற்றோர் பயமுறுத்தி வந்த காலம் போய், “சாக்லேட் சாப்பிட்டால் ஹார்ட் அட்டாக் வராது’ என மருத்துவ நிபுணர்களே கூறி கொண்டுதான் இருக்கிறார்கள்

ஆம்.. இனி யாராவது உங்களிடம், ‘சாக்லெட் சாப்பிடக் கூடாது’ என்று அறிவுரை கூறினால் அவர்களிடம் கூறுங்கள், ‘நான் என் இதயத்துக்காக சாப்பிடுகிறேன்’என்று. ஆம் சாக்லெட் சாப்பிட்டு வந்தால் இதயப் பிரச்சினைகள் ஏற்படாது என லண்டனில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாகவே அமெரிக்காவில் கேம்பிரிட்ஜ் பல்கலையில் இதய நோய் வந்த, வராத ஒரு லட்சம் பேரை வைத்து செய்த ஆய்வில் சாக்லேட் சாப்பிட்டவர்களுக்கு 70 சதவீதத்துக்கும் மேல் இதயநோய் பாதிப்பு இல்லை என்று தெரிய வந்திருந்தது.சாக்லேட்டில் கலக்கப்படும் கோகோவில் நோய் எதிர்ப்புச் சக்தி (பிளேவோனாய்ட்ஸ்) அதிகம் இருப்பதால் ரத்தத்தில் அதிகப்படியான கொழுப்பை அவை உறிஞ்சி விடுகிறதாம். அதனால் இதயநோய் வர வாய்ப்பில்லாமல் போகிறது என்கிறார்களாம். 20 முதல் 30 கிராம் சாக்லேட் சாப்பிட்டு வந்தால் ஹார்ட் அட்டாக் உள்ளிட்ட இதய நோய்கள் வராது என்று கண்டறியப்பட்டிருந்தது. அப்படியானால் இதய நோய் வந்தவர்கள் வெறும் சாக்லேட் சாப்பிட்டே நோயை விரட்டி விடலாமா?

அப்படி அர்த்தம் எடுத்துக் கொள்ளக் கூடாது. சாக்லேட் சாப்பிடுவதால் இதயநோய் வராமல் இருக்க வாய்ப்புகள் அதிகம் அவ்வளவுதான். கலோரி குறைந்த தரமான சாக்லேட்டுகளில் இருக்கும் பொருட்கள் ரத்த ஓட்டத்தை ஒழுங்கு படுத்தி இதயநோயைத் தடுக்க உதவும் என்பதுதான் ஆய்வுகளின் முடிவும் என்று தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் லண்டன் மருத்துவ ஆய்வில் கூறியதாவது, “சாக்லெட் உட்கொண்டால் இதயம் சார்ந்த நோய்களிலிருந்து தப்பிக்கலாம், இந்த ஆய்வு 50 முதல் 64 வயதுள்ள சுமார் 55,000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் வெளியிடப்பட்டுள்ளது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களிடம் தினசரி உணவுடன் சாக்லெட் எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. அவர்களது உடல் நலம் குறித்த ஆரோக்கியமும் தினமும் கண்காணிக்கப்பட்டது.

அதில் சாக்லெட்டை தங்கள் தினசரி உணவுடன் சேர்த்துக் கொண்டவர்களின் ரத்த ஓட்டம் சீரானதாகவும், மேலும் இதயத்திலுள்ள அதிகப்படியான கொழுப்புகளைக் குறைக்கும் பணியிலும் சாக்லெட் ஈடுபடுவது உறுதி செய்யப்பட்டது”

இதன் மூலம் மாரடைப்பு, இதயம் சார்ந்த நோய்களுக்கு சாக்லெட் மருந்தாக மாறியுள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இது தொடர்பாக விரிவான ஆராய்ச்சிகள் மேலும் நடத்தப்படவுள்ளதாக விஞ்ஞானிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts

error: Content is protected !!