எட்டாம் வகுப்பு மாணவ / மாணவிக்கு இரண்டாம் வகுப்புப் பாடத்தைக் கூட வாசிக்கத் தெரியாது!

எட்டாம் வகுப்பு மாணவ / மாணவிக்கு இரண்டாம் வகுப்புப் பாடத்தைக் கூட வாசிக்கத் தெரியாது!

நமது ஆரம்பக் கல்வி பாடத்திட்டம், குழந்தைகளின் வயது, அவர்களின் ஆர்வம், திறமை அனைத் துக்கும் அப்பாற்பட்டு அமைந்துள்ளது. உலகத்தில் வேறு எங்கும் இதுபோல சுமையான பாடத் திட்டம் இல்லை. மொழிதான் அனைத்துக்கும் அடிப்படை. மொழி அறிவு சரியில்லை என்றால் மற்ற அனைத்தும் மோசமாகும்.குழந்தைகளுக்கு ஜீரோவில் இருந்து 9 வரை சொல்லிக் கொடுக்க 30 நாட்கள் எடுத்துக்கொள்ளலாம் என்று உளவியலாளர்கள் கூறுகிறார் கள். ஆனால், நாம் ஒரே நாளில் அவற்றை சொல்லிக் கொடுக்கிறோம். உண்மையில் குழந்தைகள் எண்களை தெரிந்து கொள்கிறார்கள். புரிந்துகொள்வதில்லை. எண்கள் விஷயத்தில் மனக்கணக்கு முறை அடியோடு போய்விட்டது என்றெல்லாம் கல்வி வல்லுநர்கள் கவலையோடு சொல்லி வந்த நிலை யில்  இரண்டாம் வகுப்பு பாடம் கூட வாசிக்க தெரியாமல் எட்டாம் வகுப்பு மாணவர்கள் உள்ளதாக,    தனியார் ஆய்வு முடிவு  மூலம் தெரிய வந்துள்ளது.

டெல்லியில் இயங்கும் தனியார் தொண்டு நிறுவன அமைப்பின் சார்பில், வருடாந்திர கல்வி நிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனம், நாடு முழுவதும், 596 மாவட்டங்களில், 17 ஆயிரத்து, 730 கிராமங்களில் ஆய்வு நடத்தியுள்ளது. 3 – 6 வயது குழந்தைகள், 5.46 லட்சம் பேரிடம், வாசிப்பு திறன் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகள், அந்தந்த மாநில மொழிகளில் நடத்தப் பட்டுள்ளன.

இந்த ஆய்வின் முடிவில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘ தமிழகம், குஜராத், கர்நாடகா, மஹாராஷ்டிரா ஆகியவற்றில், தொடக்கப் பள்ளிகளில், மாணவர்கள் வருகை, 85 சதவீதம் பதிவாகியுள்ளது. பீஹார், உ.பி., மேற்கு வங்கம், மணிப்பூர், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில், 60 சதவீதத்துக்கு குறைவாகவே, மாணவர்கள் வருகை உள்ளது.

தமிழகத்தில், பெரும்பாலான பெண் குழந்தைகள், எட்டாம் வகுப்பு வரை, பள்ளியில் சேர்க்கப் பட்டு உள்ளனர். தனியார் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை 2014க்கு பின் உயரவில்லை. எல்.கே.ஜி., யு.கே.ஜி யில், பெரும்பாலான மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்கின்றனர். ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இரண்டாம் வகுப்பு பாடம் தமிழில் வாசிக்க வழங்கப்பட்டுள்ளது. அதில் எட்டாம் வகுப்பில் 27 சதவீத மாணவர்கள் வாசிக்க தெரியாமல் இருந்து உள்ளனர். ஒன்று முதல் 99 வரையான எண்கள் தெரியாமல் எட்டாம் வகுப்பில் 22 சதவீத மாணவர் கள் திணறியுள்ளனர்.

மேலும், அரசு பள்ளிகளில், இரண்டாம் வகுப்பு மாணவர்களை மட்டும், வகுப்பறையில் ஆய்வு செய்ததில், 66 சதவீதம் பேர், வேறு வகுப்புகளில் ஒன்றாக அமர வைக்கப்பட்டுள்ளனர். மாணவி யருக்கு 86 சதவீத பள்ளிகளில் தனி கழிப்பறை வசதி செய்து தரப்பட்டுள்ளது. 16 சதவீத பள்ளிகளில் நுாலக வசதி இல்லை. 29 சதவீத பள்ளிகளில் உடற்கல்விக்கு ஆசிரியரே இல்லை; 6 சதவீத பள்ளிகளில் மட்டுமே தனியாக உடற்கல்வி ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் கல்வித்திறன் அதிகம் கொண்ட மாணவர்களை கொண்ட மாவட்டங்களாக ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் திகழ்கின்றன” என்று, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!