அண்ணா பல்கலைக் கழகத்தில் புதியதாக 10% இட ஒதுக்கீடு!
எடப்பாடி அரசுக்கு எதிரான போக்கில் செயல்ப்பட்டுக் கொண்டிருக்கும் அண்ணா பல்கலை கழகம் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10 சதவிகித இடங்கள் ஒதுக்கப் பட்டுள்ளது தொடர்பாக புதியதொரு விளக்கம் அளித்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் M.Tech – Biotechnology, M.Tech – Computational Technology ஆகிய இரு பாடப்பிரிவுகள் மத்திய அரசின் நிதி உதவியுடன் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு கல்வியாண்டில் இரு பாடப் பிரிவுகளுக்கும் எந்த இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை நடத்துவது என குழப்பம் ஏற்பட்டதால், மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டது.
பின்னர், மத்திய அரசின் 49.5 சதவிகித இடஒதுக்கீட்டைப் பின்பற்றி மாணவர் சேர்க்கையை நடத்திக் கொள்ளலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில், 49.5 சதவிகிதம் இடஒதுக்கீட்டைப் பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்தி முடிக்கப்பட்டது. 49.5% இட ஒதுக்கீட்டில், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடும் வருவதால், அதில் விதிமீறல் எதுவும் நடைபெறவில்லை என அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம் அளித்துள்ளது.
M.Tech., Biotechnology பிரிவில் EWS பிரிவினருக்கு 3 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. M.Tech., Computational Technology பிரிவில் தகுதியான EWS பிரிவினர் யாரும் இல்லாததால், இடங்கள் எதுவும் ஒதுக்கப்படவில்லை. அண்ணா பல்கலைக்கழகம் தவிர, பாரதிதாசன் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக் கழகங்களிலும் மத்திய அரசின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் படிப்புகளில் EWS பிரிவினருக்கான இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.