September 18, 2021

ஆப்பிள் மியூசிக் இந்தியா-வின் விளம்பர பிரதிநிதியானார் ‘அனிருத்’

கோலிவுட்டில் முன்னனி இசையமைப்பாளர்களில் ஒருவராக உள்ள அனிருத் ‘ஆப்பிள் மியூசிக் இந்தியா’வின் விளம்பர பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ani feb 7

கொலவெறி- யோடு கோலிவுட்டிற்குள் நுழைந்து எல்லா வுட்-டுகளையும் மிரட்டிய மியூசிக் டைரக்டர் அனிருத். அவ்வப்போது உம்மா, பலான வீடியோ மூலம் பரபரப்ப ஏற்படுத்தும் இவர் தற்போது நடிகர் அஜித் குமார் நடித்து வரும் ‘விவேகம்’ படத்திற்கு இசையமைத்து வருகிறார். அதோடு இசை நிகழ்ச்சிக்காக உலகம் முழுவதும் சுற்றி வரும் அனிருத், முன்னனி திரை இயக்குனர்களின் தேர்வாக மாறியுள்ளார்.

இந்நிலையில் உலகம் முழுவதும் இசை சேவை வழங்கி வரும் ‘ஆப்பிள் மியூசிக்’ நிறுவனத்தின் விளம்பர தூதராக (பிரதிநிதி) அனிருத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இதுகுறித்து அனிருத் ட்விட்டரில், “ஆப்பிள் மியூசிக் விளம்பர பிரதிநிதியாக நியமிக்கப்பட்டது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.