February 5, 2023

திரையரங்குகளை நிரப்ப ஆயத்தமாகும்’ ஆனந்தம் விளையாடும் வீடு’!

டிகர் கௌதம் கார்த்திக் மற்றும் இயக்குநர் சேரன் இணைந்து நடித்திருக்கும் படம் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’. குடும்பங்களை மையமாக வைத்து, உருவாகி உள்ள இப்படத்தை இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கி உள்ளார். ஶ்ரீ வாரி ஃபிலிம் சார்பாக தயாரிப்பாளர் P.ரங்கநாதன் இப்படத்தை பிரமாண்டமான பட்ஜெட்டில் தயாரித்துள்ளார்.  இந்த “ஆனந்தம் விளையாடும் வீடு” படத்தில் கடைக்குட்டி சிங்கம் படத்தை காட்டிலும் இரு மடங்கு நட்சத்திர குவியல் இருப்பதால் ஓடிடி நிறுவனங்கள் படத்தை வாங்குவதற்கு பலக் கட்ட முயற்சி செஞ்சுக்கிட்டே இருக்காய்ங்க ..ஆனால் தயாரிப்பாளரும், இயக்குநரும் திரையரங்கில்தான் படத்தை வெளியிடுவோம் என்பதில் உறுதியாக இருப்பதாலும் “ஆனந்தம் விளையாடும் வீடு” திரையரங்குகளில் குடும்பங்கள் நிறைந்த கூட்டத்தை கொண்டு வரும் அப்ப்டீன்னு படத்தின் சில பகுதிகளை பார்த்த முன்ணனி திரைப்பட விநியோகஸ்தர்கள் சொல்வதாலும்  தியேட்டரில் வெளியிட திட்டமிட்டு வருகின்றனர்.

அதாவது கெளதம் கார்த்திக் ஜோடியாக இதுதாண்டா போலீஸ் புகழ் ராஜசேகர் மக ஷிவத்மிகா ராஜசேகர் நடிச்சிருக்கா. மேலும் சரவணன், டேனியல் பாலாஜி, வெண்பா, மொட்ட ராஜேந்திரன், விக்னேஷ், சிங்கம் புலி, கும்கி ஜொம்மல்லூரி, பாடலாசிரியர் சினேகன், நமோ நாராயணன், சௌந்தராஜன், மௌனிகா, மைனா, பருத்திவீரன் புகழ் சுஜாதா, பிரியங்கா, நக்கலைட்ஸ் தனம் என பெரும் நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடிச்சிருக்குது..

இப்பட்ம் குறிச்சு நம்ம கட்டிங் கண்ணையா ஷேர் செஞ்ச ஸ்பெஷல் ரிப்போர்ட் : இந்தப் படத்தின் புரொட்யூசர் ரங்கநாதன் ..இவர் யோகிபாபு ஹீரோவாக நடிச்ச தர்மபிரபு மூலம் தயாரிப்பாளரான தயாரிப்பு நிர்வாகியாக்கும் அவர் சொன்னது.

தர்மபிரபு படம் நெனச்சதை விட ஹிட் ஆன நிலையில் அடுத்த படம் தயாரிக்கலாமுன்னு யோசிச்ச போது அது ஒரு பக்கா குடும்ப படமாக இருக்கோணுமுன்னு முடிவு செஞ்சேன்.. கூட்டுக் குடும்ப வாழ்க்கை அறவே அழிந்து போன காலமிது .. கொரோனா என்னும் கொடூர தொற்றுக் காலத்தில் கூட பக்கத்துவீட்டுக்காரர், யார் என்பது கூட தெரியாமல் வாழ்ந்துவரும் இன்றைய சமூகத்திற்கு கூட்டு குடும்ப வாழ்வியலையும், அதன் மகிழ்வையும் ஆவணப்படுத்தவும் அதனை அகன்ற திரையில் காண்பிக்க ஆசைப்பட்டேன்.. அப்போ என்னை மீட் செஞ்ச நந்தா பெரியசாமி இன்னொரு கதை சொன்னார்.. அதில் இம்ப்ரஸ் ஆகாத என்னிடம் ஒரு குடும்பம் என்ன காரணத்துக்காக பிரிஞ்சிருக்காங்க, அவங்களை ஹீரோ எப்படி ஒண்ணு சேர்க்கிறார்ங்கிறதுதான் படத்தின் ஒருவரிகதை ஒன்னு இருக்குது அப்ப்டீன்னார். அதுதான் நான் நினைச்ச கூட்டுக் குடும்ப வாழ்க்கையுடன் கனெக்ட் ஆனதாலே செலவை பத்தி நெனக்காம இறங்கிட்டேன் அப்ப்டீன்னார்

டைரக்டர் நந்தா பெரியசாமி சொன்னது இது

இப்படத்துக்கான முதல் புள்ளி என் குடும்பத்திலே இருந்துதான் தொடங்கியது.. ஒரு குடும்பத்தில் அண்ணன், தம்பி ரெண்டு பேரும் ரொம்ப நல்லவங்களாவே இருந்தாலும் நடுவுலே சிலர் தலையிட்டு தேவையில்லாததை பேசி இருவருக்குள்ளே பிரச்சினையை ஏற்படுத்திட்றாய்ங்க.. இப்படி என்னோட அக்கா ஹச்பெண்டுக்கும் அவரோட அண்ணனுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினைகளை அடிப்படையா வைச்சு, உண்மைச் சம்பவங்களின் கோர்வையா இந்தப் படம் உருவாகி இருக்குது,

செண்டிமெண்ட் என்பதுடன் முக்கியமா ஓர் இலக்கை நோக்கி கதை பயணப்படும். அந்த இலக்கு என்ன என்பதுதான் ரகசியம். பிரிந்த உறவுகளை இணைப்பதற்காக இரண்டு குடும்பங்கள் என்னென்ன முயற்சிகளெல்லாம் செய்கிறார்கள் . கிளைமாக்சில் இலக்கை அடைவது எப்படி அப்ப்டீங்கறதை திருவிழாக்களில் தோரணங்கள், வண்ண விளக்குகள் கொண்டு ஒவ்வொன்றையும் அலங்கரிச்சு இருப்பது மாதிரி ரசிக்கும்படி காட்சிப்படுத்தி இருக்கோம்.

இதுலே கெளதம் கார்த்திக் எனக்கு ஹீரோவா வாய்ச்சது என்னோட லக்குன்னுதான் சொல்லணும். மூணு மணி நேரம் நான் சொன்ன கதையைப் பொறுமையா கேட்டார். அவ\ரோட கேரக்டர் நேம் சக்திவேல். படிப்பை முடிச்சு, தன் சித்தப்பா­வுக்கு துணையா இருக்கும் ஜூனியர். வீட்டுக்கு வெளியே பாயும் புலி என்றால் பெரியவங்க முன்னாடி பணிவு காட்டுவார். டைரக்டர் சேரன் இப்படத்தோட இன்னொரு பலம். மொத்த கதையும் அவரைச் சுற்றித்தான் நடக்கும். கதை பிடித்த காரணத்தால் மட்டுமே நடிக்க சம்மதிச்சார்,” அப்படீன்ன்னார்

விரைவில் படத்தின் டீஸர், டிரெய்லர், பாடல்கள் வெளியிடப்பட்டு படம் நவம்பர் முதல் வாரத்தில் தியேட்டரில் வெளியாக இருக்கிறது.