November 27, 2022

யூடியூப்பில் சக்கைப்போடு போட்ட அம்முச்சி சீசன் 2- எப்படி இருக்குது!

OTT தளங்களின் வரவில் எண்ணற்ற தொடர்கள் வெளிவருகின்றன. ஆனால் அவற்றில் சொற்ப எண்ணிக்கையிலான தொடர்கள் மட்டுமே அனைத்து தரப்பிலும் ரசிகர்களை கவர்கின்றன. அந்த வகையில் ‘அம்முச்சி’ தொடர் முதல் சீசனில் பலரின் இதயங்களை வென்றது. ‘நக்கலைட்ஸ்’ என்ற புகழ்பெற்ற YouTube சேனல் குழுவினரால் உருவாக்கப்பட்ட இந்தத் தொடர், தமிழகம் மட்டுமின்றி… உலகம் முழுவதும் உள்ள தமிழ் பேசும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்றது. உண்மையில், ‘அம்முச்சி’ என்ற வார்த்தை நம்மிடையே ஒரு உணர்ச்சிபூர்வமான பிணைப்பை உருவாக்கியுள்ளது, இப்போது இந்த குழு ‘அம்முச்சி சீசன்-2’ உடன் மீண்டும் வந்துள்ளது.

இந்த டிராமா காமெடி தொடரின் கதை என்னவென்றால் நாயகன் தனது பாட்டி ஊருக்கு செல்கிறான் அங்கு ஒரு பெண்ணை பார்க்கிறான் பிறகென்ன? இருவரும் காதலிக்கிறார்கள். இந்த நாயகிக்கோ நாம் இந்த கிராமத்திலிருந்து வெளியூர் சென்று நன்றாக படிக்க வேண்டும் என்ற ஆசை உண்டு ஆனால் அதில் ஒரு சிக்கல் ஏற்படுகிறது, நாயகியின் அப்பா மோசமான குடிகாரர் மற்றும் அவர் சொல்லும் பையனை தான் கதாநாயகி திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது இப்படி பட்ட சூழலில் நாயகன் படும் அல்லது படுத்தும் பாடு, நாயகியின் தந்தையை சமாளித்தெப்படி?நாயகியின் ஆசை நிறைவேற்றியதா என்பதுதான் அம்முச்சி 2

டைட்டில் ரோலான அம்முச்சியாக வரும் சின்னமணி அம்மாளின் தோற்றமும் அவருடைய டயலாக் டெலிவரியுமே தொடரை கொஞ்சம் தூக்கிப் பிடிக்கிறது. அவருடைய மகனாக நடித்திருக்கும் பிரசன்னா ஆன்லைன் சீரிஸ்களின் சிவகார்த்திகேயன் ஆக சான்ஸ் இருக்கிறது. ஹீரோயின் நடிப்பு கூட படு கேஷூவல்.. சினிமாவின் அழகியல் குறித்த எந்த நிபந்தனையும் காட்டா காதலனுடன் சேரக்கூடாது, பேசக் கூடாது என்று தடுக்கும் பெற்றோரை புறங்கையால் ஒதுக்கி வி்ட்டு அவர் காட்டும் அலப்பறை அமளி.

அருணும் அப்படியே. கூச்சம் நாச்சம் இல்லாத அவர் கேரக்டர் தமிழுக்குப் புதிதாகவே இருக்கிறது. அம்முச்சி சின்னமணி, மாகாளியாக வரும் சந்திரகுமார், வில்லன் மசநாய் மணியாக வரும் ராஜேஷ் பாலசந்திரன் எல்லோருமே பண்பட்ட நடிகர்களாகப் பின்னி எடுத்திருக்கிறார்கள்.

கேமராமேன் சந்தோஷ் குமார் திறமையான ஒளிப்பதிவாலும் விவேக் சரோவின் இசையாலும் தொடர் ஒரு படி உயர்ந்தே காணப்படுகிறது .

ஒட்டுமொத்த படத்தின் மிகப் பெரிய பலம் என்று சொன்னால் கொங்குத் தமிழ் , அந்த முகங்கள் , அவர்களின் வாழ்வியல், உறவுப் பிணைப்புகளை அச்சு அசலாகக் கொண்டு வந்திருப்பது என்பதை எல்லாம் தாண்டி முத்தாய்ப்பாக பெண்கல்வியை முக்கியத்துவத்துவத்தைச் சுட்டிக் காட்டிதற்கே ஒரு பாராட்டு விழா நடத்தலாம்.

மொத்தத்தில் அம்முச்சி 2 – அபை ஆவரேஜ்!