அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. கூடவே பனி புயலும் மக்களை வாட்டு வதைக்கிறது. மிக கடுமையாக வீசும் இந்த பனி புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையை கொண்டாட திட்டமிட்டு இருந்த மக்கள் பலரும் தங்களின் வீடுகளிலோ முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பனி பொலிவு, பனி புயல் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 34-ஆக அதிகரித்துள்ளது. நியூயார்க் நகரின் பஃபலோ பகுதி மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் மணிக்கு 64கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசுகிறது. இதனால் சாலைகளில் பனி கட்டிகள் குவிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 4 முதல் 6 அடி உயரத்திற்கு பனிக்கட்டிகள் குவிந்து கிடப்பதால் அமெரிக்காவின் 48 மாகாணங்களின் மைனஸ் டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை பதிவாகி உறையவைத்துள்ளது. கடும் பனிபொழிவால் நாளை வரை விமான நிலையங்கள் மூடப்பட்டு இருக்கும் என்று நியூயார்க் நகர் மேயர் கேத்தி ஹோச்சல் தெரிவித்துள்ளார்.
சாலை, ரயில் பாதைகள், விமான ஓடுபாதைகளில் பனி கொட்டிக் கிடப்பதால் போக்குவரத்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பனிப்புயல் காரணமாக பல இடங்களில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இதில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவில் பனிப்புயலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல மாகாணங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் சுமார் 17 லட்சம் பேர் மின்சாரமின்றி இருளில் தவிக்கின்றனர். அமெரிக்காவில் பனிப்பொழிவு காரணமாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களை இழந்து பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கடும் 5 நாட்களாக கடுமையாக வாட்டி வந்த பனிப்பொழிவும், பனி புயலும் படிப்படியாக குறையுமென்று அந்நாட்டு வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
பிரதமர் மோடியின் நண்பரான, அதானி குழுமம் கணக்கு மோசடி உள்ளிட்ட பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டென்பர்க் ஆய்வு…
நம் நாட்டின் ரயில் பயணிகள் வாட்ஸ்-ஆப் மூலம் உணவை முன்பதிவு செய்துகொள்ளும் புதிய வசதியை இந்தியன் ரயில்வே அறிமுகப் படுத்தியுள்ளது.…
பாஜக உறுப்பினர் அட்டை எல்லாம் வைத்திருந்த விக்டோரியா கெளரிக்கு எதிரான மனுக்களை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்ததை அடுத்து, சென்னை…
சில ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வு. “உங்களுக்கு எதிர்காலத்தில் யார் மாதிரி ஆக ஆசை?” என்று ஐஏஎஸ் அகாடமி ஒன்றில்…
சென்னை ஐகோர்ட் நீதிபதிகளாக நியமிப்பதற்கு 8 பேரின் பெயர் பட்டியலை மத்தியு அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது.…
நடிகர் சிம்ஹா நடிப்பில் தயாராகி பிப்ரவரி 10ஆம் தேதி முதல் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவிருக்கும் 'வசந்த…
This website uses cookies.