October 5, 2022

அமேசான் பிரைம் வீடியோ-வில் அடுத்தடுத்து புத்தம் புதிய திரைப்படங்கள் ரிலீஸ்!

ஒட்டு மொத்த உலக ஜனங்களை மிரட்டி வெளியே தலைக் காட்ட விடாமல் செய்து கொண்டு இருக்கும் கொரோனா வைரஸ் பரவலால் திரையுலகம் பெரிய அளவில் பாதிப்பை சந்தித்து வருகிறது.பலவித இன்னல்களைத் தாண்டி திரைக்கு வர தயாராக இருந்த ஏகப்பபட்ட ஹாலிவுட் தொடங்கி கோலிவுட் வரையிலான படங்கள் முடங்கி உள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் பாதியில் நிற்கின்றன. ஊரடங்கு முடிந்து தியேட்டர்களை திறந்தாலும் சமூக இடைவெளிக்காக ஒரு இருக்கையை காலியாக வைத்து டிக்கெட் விற்க வற்புறுத்தப் படலாம் என்று தெரிகிறது. இதனால் புதிய படங்களுக்கான வியாபாரம் பழைய மாதிரி இருக்காது என்று கூறப்படுகிறது. இச்சூழலில் வீட்டு வரவேற்பரை தொடங்கி கைவசம் உள்ள சகல ஆன் லைன் மூலமும்  காணும் திரைகளில் ஓடிடி தளங்கள் மூலம் பல்வேறு புதிய படங்களை ரிலீஸ் செய்ய பலரும் ஆயத்தமாகி வருகிறார்கள்.. அந்த வகையில் அமிதாப் பச்சன் மற்றும் ஆயுஷ்மான் குரானா நடித்துள்ள, ஷூஜித் சர்க்காரின் Gulabo Sitabo, வித்யா பாலன் நடித்துள்ள Shakuntala Devi, ரா.மாதவன் மற்றும் ஜோதிகா நடித்துள்ள Ponmagal Vandhal உட்பட 5 இந்திய மொழிகளைச் சேர்ந்த திரைப்படங்கள் மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அமேஸான் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பப்படவுள்ளது.

சமீபத்திய மற்றும் பிரத்தியேக திரைப்படங்கள், தொலைகாட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் காமெடி, பிரைம் ஒரிஜினல் சீரீஸ் ஆகியவற்றின் அன்லிமிடெட் ஸ்ட்ரீமிங், அமேஸான் பிரைம் மியூசிக் வழியாக விளம்பரம் அற்ற இசை கேட்டல், இந்தியாவின் மிகப்பெரிய தயாரிப்புகள் தொகுப்பிற்கான இலவச துரித டெலிவரி, முதன்மையான டீல்களுக்கான முன்கூட்டிய அணுகுவசதி, பிரைம் ரீடிங் வழியாக அன்லிமிடெட் ரீடிங் போன்ற அற்புதமான மதிப்புமிக்க வசதிகளை பிரதி மாதம் வெறும் ₹129 கட்டணத்தில் பிரைம் வழங்குகிறது.

மும்பை, இந்தியா, 15 மே 2020 – ஷூஜித் சிர்காரின், அமிதாப் பச்சன் (Black, Piku) மற்றும் ஆயுஷ்மான் குரானா (Shubh Mangal Zyaada Saavdhan, Andhadhun) நடித்த Gulabo Sitabo பிரீமியர் செய்யப்படவுள்ள தன் அறிவிப்பை தொடர்ந்து, அமேசான் பிரைம் வீடியோ மேலும் ஆறு அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்திய திரைப்படங்கள் ஸ்ட்ரீமிங் சேவையில் நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளதை அறிவித்துள்ளது. ஐந்து இந்திய மொழிகளைச் சேர்ந்த, டைரக்ட்-டு-சர்வீஸ் வரிசையில் வித்யா பாலன் (Dirty Picture, Kahaani) நடித்த அனு மேனனின் Shakuntala Devi, ஜோதிகா (Chandramukhi) நடித்த சட்டக்கதை பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷ் (Mahanathie) நடித்த Penguin (தமிழ் மற்றும் தெலுங்கு), Sufiyum Sujathayum (மலையாளம்), Law (கன்னடம்) மற்றும் French Biryani (கன்னடம்) ஆகிய திரைபடங்கள் அடங்கியுள்ளன. இந்த திரைப்படங்கள் அடுத்த மூன்று மாதங்களில் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக திரையிடப்படும் மற்றும் உலகம் முழுவதும் 200 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் கிடைக்கப்பெறும்.

“அமேசானில் நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு செவிமடுக்கிறோம் மற்றும் அதன் அடிப்படையில் எங்களது பணிகளை மேற்கொள்கிறோம்” என்று, அமேசான் பிரைம் வீடியோ, இந்தியாவின் உள்ளடக்கத்தின் இயக்குநரும் தலைவருமான விஜய் சுப்பிரமணியம் அவர்கள் கூறினார். மேலும் அவர், கடந்த 2 ஆண்டுகளில், தியேட்டர் வெளியான சில வாரங்களுக்குள், பல மொழிகளில் புதிய வெளியீடுகளைக் காணும் இடமாக பிரைம் வீடியோ எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மாறியுள்ளது. இப்போது நாங்கள் இதை ஒரு படி மேலே கொண்டு செல்கிறோம், இந்தியாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எட்டு திரைப்படங்கள் பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக ஒளிபரப்பப்படவுள்ளது, சினிமா அனுபவத்தை எங்கள் வாடிக்கையாளர்களின் வீட்டு வாயிலுக்கே கொண்டு வருகிறது” என்றும் கூறினார்.

“மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த 8 படங்களின் வெளியீட்டை இந்திய பார்வையாளர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர் மற்றும் வாடிக்கையாளர்களுக்காக இந்த திரைப்படங்களை முதன்மையாக அமேஸான் பிரைம் வீடியோ வழங்குவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இதனால், வாடிக்கையாளர்கள் தங்கள் வீடுகளில் பாது காப்பாக இருந்தபடி, வசதியாகவும் மற்றும் தங்களுக்கு விருப்பமான திரையிலும், இவற்றை பார்த்து ரசிக்க முடியும். பிரைம் வீடியோ இந்தியாவில் அதன் ஆழமான ஊடுருவலுடன், 4000 க்கும் மேற்பட்ட டவுன்கள் மற்றும் நகரங்களில் பார்வையாளர்களைக் கொண்டுள்ளது மற்றும் 200 க்கும் மேற்பட்ட நாடுகள் & பிராந்தியங்களில், உலகளாவிய ரீதியில் சென்றடைவதன் வழியாக, இந்த படங்களுக்கு ஒரு பெரிய உலகளாவிய வெளியீட்டுத் தடத்தை அளிக்கிறது. இந்த முன்முயற்சியைப் பற்றி நாங்கள் உண்மையிலேயே உற்சாகமாக உணர்கிறோம் மற்றும் இந்த வழங்குதல்களைக் கொண்டு, எங்கள் பிரைம் உறுப்பினர்களை மகிழ்விப்போம் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று கூறினார், அமேசான் பிரைம் வீடியோ இந்தியாவின் இயக்குநரும் மற்றும் தேசிய பொது மேலாளருமான கௌரவ் காந்தி

அமேசான் பிரைம் வீடியோவின் டைரக்ட்-டு-சர்வீஸ் தொகுப்பு:

Ponmagal Vandhal (தமிழ்), மே 29 முதல் அமேசான் பிரைம் வீடியோவில்

ஜோதிகா, பார்த்திபன், பாக்யராஜ், பிரதாப் போத்தன் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் நடித்துள்ள Ponmagal Vandhal ஒரு சட்டம் சார்ந்த படமாகும். ஜே.ஜே. ஃபிரெட்ரிக் அவர்களால் எழுதி இயக்கப்பட்டுள்ள இப்படத்தை, சூரியா மற்றும் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் ஆகியோர் தயாரித்துள்ளனர்

Gulabo Sitabo (இந்தி), ஜூன் 12 முதல் அமேசான் பிரைம் வீடியோவில்

அமிதாப் பச்சன் மற்றும் ஆயுஷ்மான் குரானா ஆகியோர் நடித்துள்ள Gulabo Sitabo, சாதாரண மனிதர்களின் அன்றாட போராட்டங்களை சித்தரிக்கும் ஒரு குடும்ப நகைச்சுவை திரைப் படமாகும். இந்த படத்தை ஜூஜி சதுர்வேதி எழுதியுள்ளார், ஷூஜித் சிர்கார் இயக்கியுள்ளார், ரோனி லஹிரி மற்றும் ஷீல்குமார் ஆகியோர் இதை தயாரித்துள்ளனர்.

Penguin (தமிழ் மற்றும் தெலுங்கு), ஜூன் 19 முதல் அமேசான் பிரைம் வீடியோவில்

கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள Penguin, ஈஷ்வர் கார்த்திக் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ஆகும். இப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் தயாரித்துள்ளனர்.

Law (கன்னடம்), அமேசான் பிரைம் வீடியோவில் ஜூன் 26 முதல்

ராகினி சந்திரன், சிரி பிரஹ்லாத் மற்றும் மூத்த நடிகர் முகமந்திரி சந்திரு ஆகியோர் நடித்துள்ள இந்த Law திரைப்படத்தை ரகு சமர்த் எழுதி இயக்கியுள்ளார், அஸ்வினி மற்றும் புனீத் ராஜ்குமார் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

French Biryani (கன்னடம்), ஜூலை 24 முதல் அமேசான் பிரைம் வீடியோவில்

French Biryani திரைப்படத்தில், டேனிஷ் சைட், சால் யூசுப் மற்றும் பிடோபாஷ் ஆகிய நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்க்கின்றனர். இந்த படத்தை எழுதியவர் அவினாஷ் பலேக்கலா, இயக்கியவர் பன்னக பரணா மற்றும் அஸ்வினி மற்றும் புனேத் ராஜ்குமார் மற்றும் குருதுத் A தல்வார் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

Shakuntala Devi (இந்தி), வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட உள்ளது

வித்யா பாலன் கதாநாயகியாக நடித்துள்ள Shakuntala Devi என்பது பிரபலமாக அறியப்பட்ட எழுத்தாளரும் கணிதவியலாளருமான சகுந்தலா தேவியின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு வாழ்க்கை வரலாற்றுப்படமாகும்.. இப்படத்தை நயனிகா மஹ்தானி மற்றும் அனு மேனன் ஆகியோர் எழுதியுள்ளனர். இதை அபுண்டன்டியா என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் மற்றும் சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா தயாரித்துள்ளனர்.

Sufiyum Sujathayum (மலையாளம்), வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட உள்ளது

அதிதி ராவ் ஹைடாரி மற்றும் ஜெயசூருயா ஆகியோர் நடித்துள்ள Sufiyum Sujathayum நாரனிபுழா ஷானவாஸ் அவர்களால் எழுதி இயக்கப்பட்டுள்ளது மற்றும் இது விஜய் பாபுவின் ஃபிரைடே ஃபிலிம் ஹவுஸால் தயாரிக்கப்பட்டுள்ளது.

The Family Man, Mirzapur, Inside Edge மற்றும் Made In Heaven போன்ற இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அமேஸான் ஒரிஜனல் தொடர்கள் மற்றும் விருதுகள்-வென்ற மற்றும் பரவலானப் பாராட்டு தல்களை வென்ற, உலகளாவிய அமேஸான் ஒரிஜினல் தொடர்களான Tom Clancy’s Jack Ryan, The Boys, Hunters, Fleabag மற்றும் The Marvelous Mrs.Maisel போன்றவைகள் உட்பட்ட, ஆயிரக்கணக் கான சமீபத்திய மற்றும் பிரத்தியேக திரைப்படங்கள் மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சி களுடன் இணைந்துள்ள இப்புதிய வெளியீடுகள் அமேஸான் பிரைம் வீடியோவில் அமேஸான் பிரைம் உறுப்பினர்களுக்கு எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றி கிடைக்கப்பெறும். இச் சேவை யில் ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் கிடைக்கப்பெறும் உள்ளடக்கங்களும் உட்பட்டுள்ளன.

ஸ்மார்ட் டிவிகள், மொபைல் சாதனங்கள், ஃபயர் டிவி, ஃபயர் டிவி ஸ்டிக், ஃபயர் டேப்ளெட்கள், ஆப்பிள் டிவி, ஏர்டெல், வோடோஃபோன், BSNL போன்றவற்றின் பிரைம் வீடியோ ஆப் – ல், பிரைம் உறுப்பினர்களால், இந்த வெளியீடுகளை எந்த நேரத்திலும் மற்றும் எந்த இடத்திலும் பார்வையிட முடியும். மேலும், பிரைம் வீடியோ ஆப்பில், பிரைம் உறுப்பினர்களால் அவர்களது மொபைல் சாதனங்கள் மற்றும் டேப்ளெட்களில் அனைத்து அத்தியாங்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் மற்றும் எந்தவொரு இடத்திலும் ஆஃப்லைனில், எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றி பார்வையிட முடியும். பிரைம் வீடியோ தற்போது இந்தியாவில், பிரைம் உறுப்பினர்களுக்கு எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றி, ஆண்டிற்கு வெறும் ₹999 அல்லது பிரதி மாதம் ₹129 என்னும் கட்டணத்தில் கிடைக்கப்பெறும். புதிய வாடிக்கையாளர்கள் மேலும் அறிந்து கொள்ள வருகை தரவும் www.amazon.in/prime மற்றும் 30-நாட்கள் டிரையலுக்கு சப்ஸ்கிரைப் செய்யவும்.