சர்வதேச மின் வணிக நிறுவனமாக அமேசான், கடந்தாண்டு நவம்பரில் தனது ஆட்குறைப்பு முடிவை அறிவித்தது. கரோனா காலத்தை தொடர்ந்து தொழில்நுட்ப நிறுவனங்கள் பலவும் ஆட்குறைப்பு மேற்கொண்டு வருவதன் மத்தியில் அமேசான் நிறுவனமும் அதில் சேர்ந்துள்ளது. அமேசான் நிறுவனத்துக்கு உலகளவில் சுமார் 15 லட்சம் பணியாளர்கள் உள்ளனர். இவர்களில் 18 ஆயிரம் பேர் பணியிலிருந்து நீக்கப்பட உள்ளனர்.
அதேபோல அமேசான் இந்தியாவில் சுமார் 1 லட்சம் பணியாளர்கள் உள்ளனர். இவர்களில் 1% அதாவது ஆயிரம் பணியாளர்கள் தற்போது பணிநீக்க அறிவிப்பை எதிர்பார்த்துள்ளனர். பணியாளர்களின் துறை மற்றும் பணித்திறன் சார்ந்து இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக அமேசான் தெரிவித்தது.
அமேசான் நிறுவனம் தனது இந்திய பணியாளர்களுக்கான ஆட்குறைப்பு அறிவிப்பை முறைப்படி ஜனவர் 18 அன்று தொடங்கி படிப்படியாக அமல்படுத்த முடிவு செய்திருந்தது. ஆனால் பணியாளர்கள் ஒருவரே அது தொடர்பான தகவல்களை இணையத்தில் பரப்பியதால், அமேசான் நிறுவனம் முன்வந்து தற்போது அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளின் மூலம், தற்போதைக்கு நிறுவனம் ஆட்பட்டிருக்கும் பொருளாதார சிக்கல்களில் இருந்து விடுபட முடியும் என அமேசான் நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.
பாஜக உறுப்பினர் அட்டை எல்லாம் வைத்திருந்த விக்டோரியா கெளரிக்கு எதிரான மனுக்களை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்ததை அடுத்து, சென்னை…
சில ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்வு. “உங்களுக்கு எதிர்காலத்தில் யார் மாதிரி ஆக ஆசை?” என்று ஐஏஎஸ் அகாடமி ஒன்றில்…
சென்னை ஐகோர்ட் நீதிபதிகளாக நியமிப்பதற்கு 8 பேரின் பெயர் பட்டியலை மத்தியு அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது.…
நடிகர் சிம்ஹா நடிப்பில் தயாராகி பிப்ரவரி 10ஆம் தேதி முதல் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவிருக்கும் 'வசந்த…
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான துருக்கியில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் துருக்கி- சிரியா…
This website uses cookies.