அமேசான் நிறுவனம் 18 ஆயிரம் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பப் போறாய்ங்க!

அமேசான் நிறுவனம் 18 ஆயிரம் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பப் போறாய்ங்க!

ர்வதேச மின் வணிக நிறுவனமாக அமேசான், கடந்தாண்டு நவம்பரில் தனது ஆட்குறைப்பு முடிவை அறிவித்தது. கரோனா காலத்தை தொடர்ந்து தொழில்நுட்ப நிறுவனங்கள் பலவும் ஆட்குறைப்பு மேற்கொண்டு வருவதன் மத்தியில் அமேசான் நிறுவனமும் அதில் சேர்ந்துள்ளது. அமேசான் நிறுவனத்துக்கு உலகளவில் சுமார் 15 லட்சம் பணியாளர்கள் உள்ளனர். இவர்களில் 18 ஆயிரம் பேர் பணியிலிருந்து நீக்கப்பட உள்ளனர்.

அதேபோல அமேசான் இந்தியாவில் சுமார் 1 லட்சம் பணியாளர்கள் உள்ளனர். இவர்களில் 1% அதாவது ஆயிரம் பணியாளர்கள் தற்போது பணிநீக்க அறிவிப்பை எதிர்பார்த்துள்ளனர். பணியாளர்களின் துறை மற்றும் பணித்திறன் சார்ந்து இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக அமேசான் தெரிவித்தது.

அமேசான் நிறுவனம் தனது இந்திய பணியாளர்களுக்கான ஆட்குறைப்பு அறிவிப்பை முறைப்படி ஜனவர் 18 அன்று தொடங்கி படிப்படியாக அமல்படுத்த முடிவு செய்திருந்தது. ஆனால் பணியாளர்கள் ஒருவரே அது தொடர்பான தகவல்களை இணையத்தில் பரப்பியதால், அமேசான் நிறுவனம் முன்வந்து தற்போது அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளின் மூலம், தற்போதைக்கு நிறுவனம் ஆட்பட்டிருக்கும் பொருளாதார சிக்கல்களில் இருந்து விடுபட முடியும் என அமேசான் நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.

error: Content is protected !!