தி வயர் ஆசிரியர் சித்தார்த் வரதராஜனுக்கு ஜாமீன்!

தி வயர் ஆசிரியர் சித்தார்த் வரதராஜனுக்கு ஜாமீன்!

*தி வயர் ஆசிரியர் சித்தார்த் வரதராஜனுக்கு அலகாபாத் ஐகோர்ட் முன் ஜாமீன் வழங்கியது, அவர் ‘தப்பி ஓடக்கூடும்’ என்ற வாதத்தை ஏற்க மறுத்துவிட்டார் நீதிபதி.

இந்தக் கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்வதற்கு இந்தியா முழுவதுக்குமான முழு முடக்கத்தை தலைமையமைச்சர் நரேந்திர மோடி கடந்த 2020 மார்ச்சு 24 இரவு 8 மணிக்கு அறிவித்தார். ஆனால், அந்த அறிவிப்புக்குப் பிறகு 2 மணி நேரம் கழித்தும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்டி இராமர் கோயில் அடிக்கல்நாட்டு விழா நடத்தினார்.

இந்த பொறுப்பற்ற செயலை ஆதாரங்களோடு எடுத்துக்காட்டிய “தி வயர்” (The Wire) – இணைய இதழின் ஆசிரியர் – புகழ்பெற்ற ஊடகவியலாளர் சித்தார்த் வரதராஜன் மீது இந்தியத் தண்டனைச் சட்டம் – 505 (2)இன் கீழ் சமூக மோதலை உண்டாக்க முயற்சித்தாக குற்றவியல் வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது..

Related Posts

error: Content is protected !!