October 17, 2021

வேணாம் மிஸ்டர் மோடி வேண்டாம்.. இந்த விஸ்டா பிராஜக்ட்டு..!- எதிர்கட்சிகள் கோரஸ்!

ந்தியா முழுக்க இரண்டாம் அலை அதை அடுத்து மூன்றாம் அலை கொரோனா தொற்றுக்கு வாய்ப்பு என்றெல்லம் செய்திகள் வரும் சூழலில் பிரதமருக்கு புது வீடு கட்டுவது, புதிய நாடாளுமன்றம் கட்டுவது உள்ளிட்டவற்றை அடக்கிய சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை செய்யக் கூடாது. அதற்குச் செலவிடும் தொகையை மக்களின் சுகாதாரத் திட்டங்களுக்குச் செலவிடலாம் என மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால், சென்ட்ரல் விஸ்டா திட்டத்தைத் தொடர்ந்து மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.இந்த நிலையில், சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சிகள் கூட்டாக கடிதம் எழுதியுள்ளன. காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட 12 கட்சிகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.

நம் நாட்டின் நாடாளுமன்றம் 93 ஆண்டுகள் பழமையானது. இந்தியாவின் வரலாற்றுச் சின்னங்களில் நாடாளுமன்றமும் ஒன்றாகும். இந்தக் கட்டிடத்தை இடிக்காமல் அதனையொட்டி 65,000 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய நாடாளுமன்றம் முக்கோண வடிவில் கட்டப்பட உள்ளது. தரைத்தளம் மட்டும் 16,921 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் கட்டப்பட உள்ளது. இதற்காக சென்ட்ரல் விஸ்டா திட்டம் என்ற பெயரில் புது திட்டமொன்றை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ்தான் புதிய நாடாளுமன்றக் கட்டிடம், மத்திய தலைமைச் செயலகம் ஆகியவை கட்டப்பட உள்ளன.

இந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் 900 முதல் 1200 எம்.பி.க்கள் வரை அமரலாம். புதிய நாடாளுமன்றம் கட்டும் திட்டத்தின் மதிப்பு ரூ.971 கோடியாகும். 21 மாதங்களில் அதாவது 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் 75-வது சுதந்திர தினம் கொண்டாடுவதற்குள் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. முக்கோண வடிவத்தில் 42 மீட்டர் உயரம் கொண்ட புதிய கட்டிடத்தில் தரைத்தளம் மற்றும் 3 தளங்கள் கட்டப்படுமாம்.

ஆனா இந்த கொரோனா காலச் சூழ் நிலையில் இந்த சென்ட்ரல் விஸ்டா கட்டுமானத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் கொரோனாவால் வேலை இழந்தவர்களுக்கு ரூ 6 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவச உணவுப்பொருட்களை வழங்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் கூட்டாக எழுதியஃ கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால் தை சட்டை செய்ய்யாமல் இந்த மெகா சென்ட்ரல் விஸ்டா கட்டிட பணிகள் நடைபெறும் இடத்தில் தற்போது நிழற்படம் எடுக்க யாருக்கும் அனுமதி இல்லை என்று மத்திய பொதுப்பணித்துறை ஒரு அறிவிப்பு பலகையை வைத்துள்ளது. மேலும் கட்டிட பணிகள் நடைபெறும் இடத்திற்குள் அனுமதி இல்லாமல் யாரும் செல்ல கூடாது என்றும் அறிவிப்பு பலகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது பலத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது.