17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்!

17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்!

17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் சேர்ப்பதற்கு முன்கூட்டியே விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வாக்களிக்கத் தகுதியான 18 வயது நிரம்பிய உடனே (ஜனவரி 1–ம் தேதிப்படி) வாக்காளர் அடையாள அட்டையில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்க அனுமதிக்கப்படும். ஆனால், இனிமேல் 17 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் அடையாள அட்டைக்கு முன்கூட்டியே விண்ணப்பிக்கலாம் என்றும் 18 வயது நிரம்பும் வரை காத்திருக்கத் தேவையில்லை என்றும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், 18 வயது பூர்த்தி அடைந்தவுடன் அவர்களது பெயர் வாக்காளர் பட்டியலில் உடனடியாக சேர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாநிலங்களின் தேர்தல் ஆணையர்களும் அது சம்பந்தமான அதிகாரிகளும் இதுகுறித்து தொழில்நுட்ப வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.

கடந்த பட்ஜெட் கூட்ட தொடரின்போது ஆதார் அட்டையுடன் வாக்காளர் அட்டையை இணைப்பதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அந்த மசோதாவில் 18 வயது பூர்த்தியானவர்கள் வாக்காளர் பட்டியயலில் தங்களுடைய பெயரை சேர்ப்பதற்கு ஆண்டுக்கு ஒரு முறை அல்லாமல் 4 முறை தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியயலில் சேர்ப்பதற்கான வழிவகையை அந்த மசோதாவில் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது

error: Content is protected !!